திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 101 விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) Thiruppugazh 101 viRalmAranaindhu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான ......... பாடல் ......... விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விறல்மாரன் ... வீரனாம் மன்மதன் ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த, வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து, உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே, அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே. |
* மன்மதனின் ஐந்து மலர்க்கணைகள்: தாமரை, முல்லை, மாம்பூ, அசோகம், நீலோற்பலம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.136 pg 1.137 WIKI_urai Song number: 45 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 101 - viRalmAran aindhu (thiruchchendhUr) viRalmAran aindhu malarvALi sindha migavAnil indhu ...... veyilkAya midhavAdai vandhu thazhalpOla ondRa vinaimAdhar thamtham ...... vasai kURa kuRavANar kundRil uRaipEdhai koNda kodidhAna thunba ...... mayaltheera kuLirmAlai yinkaN aNimAlai thandhu kuRaitheera vandhu ...... kuRugAyO maRimAn ugandha iRaiyOn magizhndhu vazhipAdu thandha ...... madhiyALA malai mAvu sindha alaivElai anja vadivEl eRindha ...... athidheerA aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr idainjal ...... kaLaivOnE azhagAna sempon mayil mEl amarndhu alaivAy ugandha ...... perumALE. ......... Meaning ......... viRal mAran aindhu malarvALi sindha: The Brave God of Love (Manmathan), is wielding five flowery arrows* at me. miga vAnil indhu veyil kAya: The moon from the sky is burning my body. midha vAdai vandhu thazhal pOla ondra: The so-called gentle breeze from the north is scorching me like fire. vinai mAdhar tham tham vasai kURa: Vengeful women keep on blabbering their gossips. kuRavANar kundril uRai pEdhai: Poor myself (like VaLLi), living in the mountain of KuRavas, koNda kodidhAna thunba mayal: am consumed by tormenting love for You; theera kuLir mAlaiyin kaN aNimAlai thandhu: to pacify me, You must come in the cool evening to give me Your kadappa garland (as a token of Your love). kuRai theera vandhu kuRugAyO: Will You not come to me to remove my blemish? maRimAn ugandha iRaiyOn: Lord SivA, who holds a young deer in His hand, magizhndhu vazhipAdu thandha madhiyALA: is elated to worship You (for Your teaching Him the meaning of OM), Oh Learned One! malai mAvu sindha alaivElai anja: Krouncha Mount and SUran (as a mango tree) were destroyed and the waves in the sea rose swelling vadivEl eRindha athidheerA: when You wielded Your spear, Oh Great warrior! aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr: For Your devotees who seek to know You and worship Your two feet, idainjal kaLaivOnE: You remove all their obstacles. azhagAna sempon mayil mEl amarndhu: You mount a beautiful golden-red peacock alaivAy ugandha perumALE.: and choose ThiruchchendhUr as Your favourite abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |