திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 99 விதி போலும் உந்து (திருச்செந்தூர்) Thiruppugazh 99 vidhipOlumundhu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான ......... பாடல் ......... விதிபோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை ...... வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டு இனிதாளு மென்று ...... மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்து எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி வருமால முண்டு ...... விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் வருதேவ சம்பு ...... தருபாலா அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விதி போலும் உந்து அவ் விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர் தம் ... விதி போல முற்பட்டு வினைப்படும் அந்தக் கண்களாலும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியாலும் ஈடுபட்ட இளைஞர்களுடைய விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே ... விரிந்த சிந்தையில் உருவெளித் தோற்றமாய் நின்று நோவும்படி செய்து, அந்த இளைஞர்களின் வன்மையும் மனமும் மாறுபடச் செய்யும் செயல்களால், இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் ... அன்பு பூண்டு இன்பத் தேனை நிரம்ப உண்டு எங்களை இனிது அனுபவியுங்கள் என்று சொல்லுகின்ற மாதர்களால் வரும் இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ ... இருளான துன்பமும், மருட்சி தரும் மாயையும் வந்து என் நெஞ்சைப் பிளவு செய்தல் எக்காலத்தும் தொலையாதோ? மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி ... பிறையைச் சூடியவரும், தேவர்கள் ஊர் வாழும்படி, நெருங்கி வந்த ஆலகால விஷத்தை உண்டு, நந்தியாகிய ரிஷப வாகனத்தில் ஏறி வருபவரும், மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா ... மறவாத மனத்தை உடைய அடியார்கள் பங்கில் வருகின்றவரும் ஆகிய தேவருமான சிவ பெருமான் பெற்ற பாலனே, அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொ(ண்)டு அன்று பொரும் வீரா ... அதிக மாயைகளைச் செய்து வந்த சூரர் அழிய, கூரிய வேலைக் கொண்டு அன்று போர் செய்த வீரனே, அழகான செம் பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே. ... அழகிய செம்பொன் மயிலின் மேல் அமர்ந்து, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.134 pg 1.135 WIKI_urai Song number: 44 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'தருமபுரம்' திரு சுவாமிநாதன் Dharmapuram SwAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 99 - vidhipOlum undhu (thiruchchendhUr) vithipOlu muntha vizhiyAlu minthu nuthalAlu monRi ...... yiLainjOrtham virivAna sinthai yuruvAki nonthu viRalvERu sinthai ...... vinaiyAlE ithamAki yinpa mathupOtha vuNdu inithALu menRu ...... mozhimAthar iruLAya thunpa maruLmAyai vanthu enaiyeerva thenRum ...... ozhiyAthO mathicUdi yaNdar pathivAzha maNdi varumAla muNdu ...... vidaiyERi maRavAtha sinthai yadiyArkaL pangil varuthEva sampu ...... tharubAlA athimAya monRi varucUrar ponRa ayilvElko danRu ...... porumveerA azhakAna sempon mayilmE lamarnthu alaivAyu kantha ...... perumALE. ......... Meaning ......... vithi pOlum unthu av vizhiyAlum inthu nuthalAlum onRi: With their eyes which set about their mission like the fate and with their forehead like the crescent moon, iLainjOr tham virivAna sinthai uruvAki nonthu viRal vERu sinthai vinaiyAlE: they cause illusory visions in the minds of the enthralled youths; with their actions, they change the nature and course of the minds of those men; ithamAki inpa mathu pOtha uNdu inithu ALum enRu mozhi mAthar: these whores tell them to go ahead and imbibe the sweet honey, enjoying their company to heart's content; iruL Aya thunpa maruL mAyai vanthu enai eervathu enRum ozhiyAthO: the dark misery and the scary delusion that ensue simply rip my heart; will there not be an end to this ordeal at any time? mathi cUdi aNdar pathi vAzha maNdi varum Alam uNdu vidai ERi: He wears the crescent moon on His matted hair; to protect the celestial land, He imbibed the gushing poison called AlakAlam; He mounts His vehicle, Nanthi, the Bull; maRavAtha sinthai adiyArkaL pangil varu thEva sampu tharu pAlA: He comes to the rescue of His devotees who never fail to remember Him; He is Lord SivA, and Your are His son, Oh Lord! athi mAyam onRi varu cUrar ponRa ayil vEl ko(N)du anRu porum veerA: Those demons were casting several mystic spells; to destroy them You fought that day with the sharp spear, Oh valorous One! azhakAna sem pon mayil mEl amarnthu alaivAy ukantha perumALE.: Mounting the beautiful peacock of a reddish-golden hue, You are seated with relish in ThiruchchendhUr, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |