திருப்புகழ் 98 வரியார் கருங்கண்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 98 variyArkarungkaN  (thiruchchendhUr)
Thiruppugazh - 98 variyArkarungkaN - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனந்த ...... தனதான

......... பாடல் .........

வரியார் கருங்கண் ...... மடமாதர்

மகவா சைதொந்த ...... மதுவாகி

இருபோ துநைந்து ...... மெலியாதே

இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே

பரமே சுரன்ற ...... னருள்பாலா

அரிகே சவன்றன் ...... மருகோனே

அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரியார் கருங்கண் மடமாதர் ... வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய
கண்களை உடைய இளம்பெண்கள்,

மகவாசை தொந்தம் அதுவாகி ... குழந்தைகள் என்கிற ஆசையாகிய
பந்தத்திலே அகப்பட்டு,

இருபோது நைந்து மெலியாதே ... பகலும் இரவும் மனம்
நைந்துபோய் மெலிவு அடையாமல்,

இருதாளின்அன்பு தருவாயே ... உன் இரு திருவடிகளின்மீது
அன்பைத் தந்தருள்வாயாக.

பரிபாலனஞ் செய்து அருள்வோனே ... காத்து ரட்சித்து அருள்
செய்பவனே,

பரமேசுரன்தன் அருள்பாலா ... பரமசிவன் தந்தருளிய குழந்தையே,

அரி கேசவன்தன் மருகோனே ... ஹரி கேசவனாம் திருமாலின்
மருமகனே,

அலைவாய் அமர்ந்த பெருமாளே. ... திருச்சீரலைவாயாம்
திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.244  pg 1.245 
 WIKI_urai Song number: 97 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 98 - variyAr karungkaN (thiruchchendhUr)

variyAr karungkaN ...... madamAdhar

magavA saithondha ...... madhuvAgi

irupO dhunaindhu ...... meliyAdhE

iruthA Linanbu ...... tharuvAyE

paripA lanamsey ...... dharuLvOnE

paramE suranthan ...... aruLbAlA

arikE savanthan ...... marugOnE

alaivAy amarndha ...... perumALE.

......... Meaning .........

variyAr karungkaN madamAdhar: Young women having black eyes with beautiful red lines in them,

magavAsai thondham adhuvAgi: and children - I was caught in this obsession of attachment.

irupOdhu naindhu meliyAdhE: Thinking about them, day and night, I lost my health and became thin.

iruthALin anbu tharuvAyE: (To stop me from this deterioration) Bless me with love for Your two feet.

paripAlanam sey dharuLvOnE: You have the kindness to protect me.

paramEsuran than aruLbAlA: You are the son given to us by Lord SivA.

arikEsavan than marugOnE: You are the nephew of Hari-Kesava (Vishnu).

alaivAy amarndha perumALE.: You chose as Your seat the shores of ThiruchchendhUr!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 98 variyAr karungkaN - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]