(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 96 வஞ்சத்துடன் ஒரு  (திருச்செந்தூர்)
Thiruppugazh 96 vanjaththudanoru  (thiruchchendhUr)
Thiruppugazh - 96 vanjaththudanoru - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத் தனதன தந்தத் தனதன
     தந்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
     வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்

வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
     மண்டிக் கதறிடு ...... வகைகூர

அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
     அங்கிக் கிரையென ...... வுடன்மேவ

அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
     அன்றைக் கடியிணை ...... தரவேணும்

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
     கன்றச் சிறையிடு ...... மயில்வீரா

கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
     கண்டத் தழகிய ...... திருமார்பா

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
     செந்திற் பதிநக ...... ருறைவோனே

செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
     சிந்தப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வஞ்சத்துடனொரு நெஞ்சிற் பலநினை ... வஞ்சனையுடன்,
நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும்,

வஞ்சிக் கொடியிடை மடவாரும் ... வஞ்சிக்கொடி போன்ற இடையை
உடையவர்களும் ஆகிய பெண்களும்,

வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு ... வணங்கும் புதல்வர்களும்,
நெருங்கிய சுற்றத்தார்களும்,

மண்டிக் கதறிடு வகைகூர ... ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல்
மிகுதியாக,

அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் ... உடலின் பாகங்கள் யாவும்
கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு

அங்கிக் கிரையென வுடன்மேவ ... நெருப்புக்கு இரையாக்கப்
படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட,

அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் ... அருகே வந்து
அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற

அன்றைக்கு அடியிணை தரவேணும் ... அந்த நாளில் உனது இரு
திருவடிகளையும் தந்தருள வேண்டும்.

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து ... தாமரை மலரில் அமரும்
பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி

கன்றச் சிறையிடும் அயில்வீரா ... அவன் மனம் நோகச் சிறையிட்ட
வேலாயுத வீரனே,

கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் ... கற்கண்டைப்
போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற
தேவயானையின்

கண் தத்து அழகிய திருமார்பா ... கண்பார்வை பாய்கின்ற அழகிய
திரு மார்பனே,

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி ... செம்மை பொருந்திய
சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச்
சூடிக்கொண்டு

செந்திற் பதிநகருறைவோனே ... திருச்செந்தூர் நகரில்
வீற்றிருப்பவனே,

செம்பொற் குலவட குன்றைக் கடலிடை ... செம்பொன்
நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே

சிந்தப் பொரவல பெருமாளே. ... சிதறி விழுமாறு போர் புரியவல்ல
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.238  pg 1.239  pg 1.240  pg 1.241 
 WIKI_urai Song number: 95 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 96 - vanjaththudan oru (thiruchchendhUr)

vanjath thudanoru nenjiR palaninai
     vanjik kodiidai ...... madavArum

vandhip pudhalvarum andhik kiLainyaru
     maNdik kadhaRidu ...... vagaikUra

anjak kalaipadu panjip puzhuudal
     angik kiraiyena ...... udanmEva

aNdip bayamuRa vendRic chamanvarum
     andRaik kadiyiNai ...... tharavENum

kanjap piRamanai anjath thuyarseydhu
     kandRach chiRaiyidum ...... ayilveerA

kaNdOth thanamozhi aNdath thirumayil
     kaNdath thazhagiya ...... thirumArbA

senchol pulavargaL sangath thamizhtheri
     sendhiR padhinagar ...... uRaivOnE

sempoR kulavada kundrai kadalidai
     sindhap poravala ...... perumALE.

......... Meaning .........

vanjath thudanoru nenjiR pala ninai: In their scheming minds, they carry all kinds of thoughts;

vanjik kodi idai madavArum: these women have slender waists like vanji (rattan reed) creeper;

vandhip pudhalvarum andhik kiLainyaru: along with them, are the devoted sons and a circle of close relatives;

maNdi kadhaRidu vagai kUra: and all these have assembled to mourn uncontrollably.

anja kalaipadu panjip puzhu udal: Each and every limb of mine is thoroughly shaken and my body, gone limp like cotton, is fast rotting.

angik kiraiyena udanmEva: It is about to be fed into fire.

aNdip bayamuRa vendri saman varum: Yaman, the Death-God, is fast approaching instilling fear and marching triumphantly.

andraik kadiyiNai tharavENum: On that very day, You must grant me Your holy feet!

kanjap piRamanai anjath thuyar seydhu: You scared and teased BrahmA, with His abode on the lotus,

kandrach chiRaiyidum ayilveerA: and shattered His morale by imprisoning Him, Oh Warrior with the Spear!

kaNdOth thanamozhi aNdath thirumayil: She has sweet voice like the jaggery and She is the peacock-like damsel of the DEvAs;

kaN thaththu azhagiya thirumArbA: and that DEvayAnai's eyes wade into Your broad chest!

senchol pulavargaL sangath thamizh theri: The great poets praise You with the choicest Tamil words in

sendhiR padhi nagar uRaivOnE: ThiruchchendhUr, which is Your favourite abode.

sempoR kulavada kundrai kadalidai sindhap: The northern Hills of Krouncha with golden crests were shattered into pieces and thrown into the sea

poravala perumALE.: by Your mighty valour, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 96 vanjaththudan oru - thiruchchendhUr


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top