திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 90 முகிலாமெனும் (திருச்செந்தூர்) Thiruppugazh 90 mugilAmenum (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனாதன தனனந் தாத்த தனனாதன தனனந் தாத்த தனனாதன தனனந் தாத்த ...... தனதான ......... பாடல் ......... முகிலாமெனு மளகங் காட்டி மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே வகையாமிள முலையுங் காட்டி யிடையாகிய கொடியுங் காட்டி வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான மணிசேர்கடி தடமுங் காட்டி மிகவேதொழி லதிகங் காட்டு மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனோ நகையால்மத னுருவந் தீத்த சிவனாரருள் சுதனென் றார்க்கு நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே நவமாமணி வடமும் பூத்த தனமாதெனு மிபமின் சேர்க்கை நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே அகமேவிய நிருதன் போர்க்கு வரவேசமர் புரியுந் தோற்ற மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி அயிராவத முதுகின் தோற்றி யடையாமென இனிதன் பேத்து மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு மொழி ஆகிய மதுரம் காட்டி ... மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும் இனிமையைக் காட்டி, விழி ஆகிய கணையும் காட்டி முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி ... கண் என்னும் அம்பைக் காட்டி, முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி, வளமான கை வளையும் காட்டி இதமான மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ ... வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான, அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ? நகையால் மதன் உருவம் தீத்த சிவனார் அருள் சுதன் என்று ஆர்க்கு(ம்) நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே ... புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும் நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே, நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே ... ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே, அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர் புரியும் தோற்றம் அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் அமரேசனை முழுதும் காத்த பெருமாளே. ... அகங்காரம் கொண்ட அசுரனாகிய சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில் உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம் ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்) அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும் காத்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.226 pg 1.227 pg 1.228 pg 1.229 WIKI_urai Song number: 90 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 90 - mugilAmenum (thiruchchendhUr) mukilAmenu maLakang kAtti mathipOluyar nuthalung kAtti mukizhAkiya nakaiyung kAtti ...... amuthURu mozhiyAkiya mathurang kAtti vizhiyAkiya kaNaiyung kAtti mukamAkiya kamalang kAtti ...... malaipOlE vakaiyAmiLa mulaiyung kAtti yidaiyAkiya kodiyung kAtti vaLamAnakai vaLaiyung kAtti ...... yithamAna maNisErkadi thadamung kAtti mikavEthozhi lathikang kAttu madamAtharkaL mayalin sEtRi ...... luzhalvEnO nakaiyAlmatha nuruvan theeththa sivanAraruL suthanen RArkku nalanEyaru Lamarsen thUrkku ...... LuRaivOnE navamAmaNi vadamum pUththa thanamAthenu mipamin sErkkai nazhuvAvakai piriyang kAttu ...... murukOnE akamEviya niruthan pOrkku varavEsamar puriyun thOtRa maRiyAmalu mapayang kAtti ...... muRaikURi ayirAvatha muthukin thOtRi yadaiyAmena inithan pEththu mamarEsanai muzhuthung kAththa ...... perumALE. ......... Meaning ......... mukil Am enum aLakam kAtti mathi pOl uyar nuthalum kAtti mukizhAkiya nakaiyum kAtti amuthu URu mozhi Akiya mathuram kAtti: Showing their hair that looks like black cloud, their forehead that looks like the crescent moon, their teeth that are like the jasmine buds and their sweet speech that is moist with nectar-like saliva, vizhi Akiya kaNaiyum kAtti mukam Akiya kamalam kAtti malai pOlE vakaiyAm iLa mulaiyum kAtti idai Akiya kodiyum kAtti: revealing their eyes that are like arrows, their lotus-like face, their neat and young bosom resembling a mountain and their creeper-like waist, vaLamAna kai vaLaiyum kAtti ithamAna maNi sEr kadithadamum kAtti mikavE thozhil athikam kAttum mada mAtharkaL mayalin sEtRil uzhalvEnO: exhibiting the bangles adorning their shapely arms, and showing off their pretty and blissful genitals, these whores demonstrate their profession emphatically; why am I roaming about with my feet immersed in the mud of their delusion? nakaiyAl mathan uruvam theeththa sivanAr aruL suthan enRu Arkku(m) nalanE aruL amar senthUrkkuL uRaivOnE: By His mere smile He burnt down the body of Manmathan (God of Love); You are the son graciously delivered by that Lord SivA, and You are seated in ThiruchchendhUr showering benevolent blessings on one and all! nava mA maNi vadamum pUththa thana mAthu enum ipam min sErkkai nazhuvA vakai piriyam kAttum murukOnE: On Her bosom a chain made of nine precious gems dazzles; She is the beautiful daughter reared by an elephant and is bright like the lightning; and You are doting on that DEvayAnai without letting her out of Your embrace, Oh Lord MurugA! akam mEviya niruthan pOrkku varavE samar puriyum thOtRam aRiyAmalum apayam kAtti muRai kURi ayirAvatham muthukin thOtRi adaiyAm ena inithu anpu Eththum amarEsanai muzhuthum kAththa perumALE.: When the arrogant demon SUran confronted You in the battlefield, even before You contemplated to wage a war with him, You offered refuge to the beseeching leader of the celestials, IndrA, mounting the elephant AirAvadham, who, along with the DEvAs, surrendered praising You with sweet and loving words; and You protected him absolutely, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |