திருப்புகழ் 89 மான்போல் கண்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 89 mAnpOlkaN  (thiruchchendhUr)
Thiruppugazh - 89 mAnpOlkaN - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தாத்தந் தான தந்தன
     தாந்தாத்தந் தான தந்தன
          தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான

......... பாடல் .........

மான்போற்கண் பார்வை பெற்றிடு
     மூஞ்சாற்பண் பாடு மக்களை
          வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர்

வாங்காத்திண் டாடு சித்திர
     நீங்காச்சங் கேத முக்கிய
          வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே

ஏன்காற்பங் காக நற்புறு
     பூங்காற்கொங் காரு மெத்தையில்
          ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா

ஈந்தாற்கன் றோர மிப்பென
     ஆன்பாற்றென் போல செப்பிடும்
          ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ

கான்பாற்சந் தாடு பொற்கிரி
     தூம்பாற்பைந் தோளி கட்கடை
          காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன்

காம்பேய்ப்பந் தாட விக்ரம
     வான்றோய்க்கெம் பீர விற்கணை
          காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே

தீம்பாற்கும் பாகு சர்க்கரை
     காம்பாற்செந் தேற லொத்துரை
          தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே

தீண்பார்க்குன் போத முற்றுற
     மாண்டார்க்கொண் டோது முக்கிய
          தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு
மக்களை வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை
மாதர்
... மானைப் போல கண் பார்வை பெற்றுள்ள முகத்தால், தரம்
வாய்ந்த ஆடவர்கள் கிடைக்கப் பெற்றால், பொன் மலை (பொன்)
சிமிழ் என்னும்படியான மார்பகங்களை உடைய (விலை) மாதர்கள்

வாங்காத் திண்டாடு சித்திர(ம்) நீங்காச் சங்கேத முக்கிய
வாஞ்சா(சையா)ல் செம் சாரு மெய்த்திடு(ம்) மொழியாலே
...
(அம் மக்களை வசீகரித்துப்) பிடித்து திண்டாட வைப்பதும், விசித்திரம்
நீங்காததும், உள்நோக்கம் கொண்டுள்ளதும், முக்கியமானதும், ஆசை
எழுப்புவதுமான, இனிமையான ரசம் நிரம்பிய, உண்மை போன்றதான
பேச்சுக்களால்,

ஏ(எ)ன் கால் பங்கு ஆக நற்பு உறு பூங் கால் கொங்கு
ஆரு(ம்) மெத்தையில் ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம்
முதல் நீ தா ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என
... என்னிடத்தில்
பங்கு ஆக, நன்மை (இன்பம்) தரும் பூவின் இதழ்களின் வாசனை
நிறைந்த படுக்கையில் பொருந்தியவுடன் பொன்னாலாகிய அழகிய
காசு முதலில் நீ கொடுப்பாயாக, அங்ஙனம் பணம் கொடுத்தவர்களுக்குத்
தானே கூட்டுறவு என்று,

ஆன் பால் தெ(தே)ன் போல செப்பிடும் ஈண்டாச் சம்போக
மட்டிகள் உறவாமோ
... பசும் பாலும் தேனும் கலந்தது போல் சொல்லி,
அருகே நெருங்கவிடாத போக மகளிராகிய வேசிகளின் உறவு
நல்லதாகுமோ?

கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி
கண் கடை காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுர ஈசன்
...
காட்டில் சந்தனம் பூசப்பட்ட அழகிய மலை போன்ற மார்பகங்களையும்,
மூங்கில் போன்ற பசும் தோள்களையும் உடைய சீதையின் கடைக்
கண் பார்வை பெறுவதற்காக உறக்கம் இல்லாமல் ஆசை கொண்டிருந்த
அரக்கர் தலைவனாகிய ராவணனின்

க(கா)ம் பேய்ப் பந்தாட விக்ரம வான் தோய்க் கெம்பீர வில்
கணை காண் தேர்க் கொண்டு ஏவும் அச்சுதன் மருகோனே
...
தலைகள் பந்து எறிவது போல எறியப்பட்டு உருள, வீரமுள்ளதாய்,
வானிலும் தோயவல்லதாய், வீறு அமைந்ததாய் உள்ள வில்லில்
இருந்து அம்பை அழகிய தேர் மீது இருந்து செலுத்திய (ராமனாம்)
திருமாலின் மருகனே,

தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து
உரை தீந்தார்க் கங்காளி பெற்று அருள் புதல்வோனே
...
இனிக்கக் காய்ச்சிய பாலையும், வெல்லப் பாகு, சர்க்கரை,
மூங்கிலினின்று முற்றிய நறுந்தேன் இவைகளை ஒத்துள்ளவரும்,
உரைக்கு எட்டாதவருமான சிவபெருமானும் பார்வதியும் பெற்று
அருளிய மகனே,

தீ(தி)ண் பார்க்கு உன் போதம் முற்று உற மாண்டார்க்
கொண்டு ஓதும் முக்கிய
... திண்ணிய இப் பூமியில் உன்
திருவடியின் தியான அறிவு முழுமையாக வாய்க்கப்பட்டு
மேம்பட்டவர்களைக் கொண்டு பூஜிக்கப்படும் பிரமுகனே,

தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே. ...
வண்டுகள் மலரில் மொய்ப்பது போல் திருச்செந்தூரில் (அடியார்
கூட்டங்களை) நெருங்க வைத்தருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.224  pg 1.225  pg 1.226  pg 1.227 
 WIKI_urai Song number: 89 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 89 - mAnpOl kaN (thiruchchendhUr)

mAnpORkaN pArvai petRidu
     mUnjARpaN pAdu makkaLai
          vAynthARpon kOdu seppenu ...... mulaimAthar

vAngAththiN dAdu siththira
     neengAcchang kEtha mukkiya
          vAnjARchenj chARu meyththidu ...... mozhiyAlE

EnkARpang kAka naRpuRu
     pUngARkong kAru meththaiyil
          EynthARpon chAru poRpaNa ...... muthalneethA

eenthARkan ROra mippena
     AnpAtRen pOla seppidum
          eeNdAccham pOka mattika ...... LuRavAmO

kAnpARchan thAdu poRkiri
     thUmpARpain thOLi katkadai
          kANpAtRunj chAmal naththidum ...... asurEsan

kAmpEyppan thAda vikrama
     vAnROykkem peera viRkaNai
          kANdErkkoN dEvu macchuthan ...... marukOnE

theempARkum pAku sarkkarai
     kAmpARchen thERa loththurai
          theernthArkkang kALi petRaruL ...... puthalvOnE

theeNpArkkun pOtha mutRuRa
     mANdArkkoN dOthu mukkiya
          thEnpORchen thUril moyththaruL perumALE.

......... Meaning .........

mAn pOl kaN pArvai petRidu mUnjAl paNpAdu makkaLai vAynthAl pon kOdu seppu enum mulai mAthar: With eyes like those of the deer adorning their face, these whores, bestowed with bosom like the golden mountains and (golden) caskets, entice appropriate men when available;

vAngAth thiNdAdu siththira(m) neengAc changEtha mukkiya vAnjA(chaiyA)l chem chAru meyththidu(m) mozhiyAlE: (captivating such men,) they make them reel in dismay with their wonderful and important speech that is loaded with ulterior motive, seductive, sweet like nectar and sounding truthful;

E(e)n kAl pangu Aka naRpu uRu pUng kAl kongu Aru(m) meththaiyil EynthAl pon chAru pon paNam muthal nee thA eenthARku anRO ramippu ena: they declare "If you want to be a part of mine, you must first give me the pretty gold coin as soon as we unite on the bed filled with fragrance exuded by the delightful petals of flowers; don't you know that the coital bliss is only meant for those who pay for it?";

An pAl e(E)than pOla seppidum eeNdAc champOka mattikaL uRavAmO: their voice is so sweet that it feels like a concoction of cow's milk and honey; however, they make sure that they are unapproachable; is there any good that could be derived from a liaison with these whores who are maids of pleasure?

kAn pAl santhu Adu pon kiri thUmpAl paim thOLi kaN kadai kANpAl thunjAmal naththidum asura eesan: RAvaNan, the leader of the demons, was obsessed with passion, without a wink of sleep, yearning for a glance from the corner of the eye of SeethA who lived in the forest and who was bestowed with beautiful mountain-like bosom smeared with sandalwood paste and with soft shoulders like the young bamboo;

ka(a)m pEyp panthAda vikrama vAn thOyk kempeera vil kaNai kAN thErk koNdu Evum acchuthan marukOnE: his ten heads were chopped off rolling like scattered balls by the arrow wielded from a valorous, majestic and sky-high bow by RAmA seated on a beautiful chariot; and You are the nephew of that Lord VishNu!

theem pARkum pAku sarkkarai kAmpAl chem thERal oththu urai theenthArk kangALi petRu aruL puthalvOnE: He is sweet like a mixture of well-boiled milk, jaggery syrup, sugar and pure honey that is distilled from fully-grown bamboo; He is beyond any description; and You are the son of that Lord SivA and DEvi PArvathi, Oh Lord!

thee(thi)N pArkku un pOtham mutRu uRa mANdArk koNdu Othum mukkiya: You are the most prominent Lord worshipped by great devotees in this strong world, who have been blessed with the complete knowledge of meditating upon Your hallowed feet, Oh Lord!

thEn pOl senthUril moyththu aruL perumALE.: Your devotees throng to this town ThiruchchendhUr like the beetles swarming the flowers; and You bless them all, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 89 mAnpOl kaN - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]