திருப்புகழ் 84 மங்கை சிறுவர்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 84 mangkaisiRuvar  (thiruchchendhUr)
Thiruppugazh - 84 mangkaisiRuvar - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தனன தந்த தனன
     தந்த தனன ...... தனதான

......... பாடல் .........

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
     வந்து கதற ...... வுடல்தீயின்

மண்டி யெரிய விண்டு புனலில்
     வஞ்ச மொழிய ...... விழஆவி

வெங்கண் மறலி தன்கை மருவ
     வெம்பி யிடறு ...... மொருபாச

விஞ்சை விளைவு மன்று னடிமை
     வென்றி யடிகள் ...... தொழவாராய்

சிங்க முழுவை தங்கு மடவி
     சென்று மறமி ...... னுடன்வாழ்வாய்

சிந்தை மகிழ அன்பர் புகழு
     செந்தி லுறையு ...... முருகோனே

எங்கு மிலகு திங்கள் கமல
     மென்று புகலு ...... முகமாதர்

இன்பம் விளைய அன்பி னணையு
     மென்று மிளைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் ... மனைவியும், மக்களும், தங்கள்
சுற்றத்தார்களும்,

வந்து கதற ... வந்து கதறி அழுது புலம்ப,

உடல்தீயின் மண்டி யெரிய ... உடம்பானது மயானத்தீயில்
ஜ்வாலையுடன் எரிந்துகொண்டிருக்க,

விண்டு புனலில் வஞ்ச மொழிய விழ ... உறவினர் மயானத்தை
விட்டு நீங்கி, பந்தம் என்ற மாயை நீங்குமாறு, நீரில் மூழ்கிக் குளிக்க,

ஆவி வெங்கண் மறலி தன்கை மருவ ... உயிரானது
கொடுங்கண்களை உடைய யமனது கரத்தில் சிக்கிக்கொள்ள,

வெம்பி யிடறும் ... மனம் புழுங்கித் துன்பப்படும்

ஒருபாச விஞ்சை விளையு மன்று ... ஒரு பற்று என்னும்
மாயக்கூத்து நிகழும் அந்த நாளில்

உனடிமை வென்றி யடிகள் தொழவாராய் ... உன் அடிமையாகிய
சிறியேன் வெற்றி பொருந்திய உன் திருவடி மலர்களைத் தொழும்படி
வந்தருள்வாயாக.

சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று ... சிங்கங்களும், புலிகளும்
வாழும் காட்டிலே சென்று

மறமினுடன்வாழ்வாய் ... வேடப் பெண்ணாகிய வள்ளியுடன்
வாழ்கின்றவனே,

சிந்தை மகிழ அன்பர் புகழு ... உள்ள மகிழ்ச்சியுடன் உன் அன்பர்கள்
துதி செய்கிற

செந்தி லுறையு முருகோனே ... திருச்செந்தூர் நகரில் எழுந்தருளிய
முருகக் கடவுளே,

எங்கு மிலகு திங்கள் கமலம் ... எங்கும் விளங்கும் சந்திரனையும்,
தாமரையையும் ஒத்தது

என்று புகலு முகமாதர் ... என்று உவமை கூறி புலவர்கள் புகழ்கின்ற
திருமுகத்தை உடைய மாதர்களாம் தேவயானையையும், வள்ளியையும்,

இன்பம் விளைய அன்பி னணையும் ... உயிர்களுக்கு இன்பம்
விளையுமாறு அன்போடு அணையும்

என்றும் இளைய பெருமாளே. ... எக்காலத்தும் இளமையோடு
விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.216  pg 1.217 
 WIKI_urai Song number: 85 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 84 - mangkai siRuvar (thiruchchendhUr)

mangai siRuvar thangaL kiLainyar
     vandhu kadhaRa ...... udaltheeyin

mandi eriya viNdu punalil
     vanja mozhiya ...... vizhaAvi

venkaN maRali thankai maruva
     vembi idaRum ...... orupAsa

vinjai viLaiyum andRun adimai
     vendRi adigaL ...... thozhavArAy

singa muzhuvai thangu madavi
     sendRu maRamin ...... udanvAzhvAy

chindhai magizha anbar pugazhu
     chendhil uRaiyu ...... murugOnE

engum ilagu thingaL kamalam
     endRu pugalu ...... mugamAthar

inbam viLaiya anbin aNaiyum
     endRum iLaiya ...... perumALE.

......... Meaning .........

mangai siRuvar thangaL kiLainyar: The wife and children, along with relatives,

vandhu kadhaRa: have all assembled and wail loudly.

udaltheeyin mandi eriya: The body, laid on the funeral pyre, is burning away intensely.

viNdu punalil vanja mozhiya vizha: Relatives, departing after the cremation, dip in the river so as to rid themselves of the delusion of attachment.

Avi venkaN maRali thankai maruva: Life is captured in the hands of fiery-eyed Yaman (God of Death).

vembi idaRum orupAsa vinjai viLaiyum andRu: On that day, when my mind sulks and suffers, enacting a drama called attachment

un adimai vendRi adigaL thozhavArAy: You must bless me, Your slave, to worship Your triumphant feet!

singa muzhuvai thangu madavi sendRu: You went to the forest where lions and tigers stalk

maRamin udanvAzhvAy: and lived happily with VaLLi, the damsel of the hunters.

chindhai magizha anbar pugazhu: Your devotees praise You heartily at

chendhil uRaiyu murugOnE: ThiruchchendhUr where You reside, Oh MurugA!

engum ilagu thingaL kamalam endRu pugalu mugamAthar: The pretty faces of DEvayAnai and VaLLi, Your consorts, are compared by poets to the ubiquitous moon and the lotus;

inbam viLaiya anbin aNaiyum: You embrace them lovingly to immerse the world in bliss;

endRum iLaiya perumALE.: and You are forever young, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 84 mangkai siRuvar - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]