திருப்புகழ் 78 பரிமள களப  (திருச்செந்தூர்)
Thiruppugazh 78 parimaLakaLaba  (thiruchchendhUr)
Thiruppugazh - 78 parimaLakaLaba - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா

......... பாடல் .........

பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே

அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா

திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரிமள களப சுகந்த ... நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின்
வாசனை வீசும்

சந்தத் தனமானார் ... அழகிய மார்பினை உடைய பெண்களின்,

படை யமபடையென ... படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு
ஒப்பாக

அந்திக்கும் கண் கடையாலே ... கடைக்கண்ணால் சந்திக்கின்ற
பார்வையாலும்,

வரியளி நிரைமுரல் ... கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம்
ஒலிக்கின்ற

கொங்குக் கங்குற் குழலாலே ... பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின்
அழகாலும்,

மறுகிடு மருளனை ... மயங்கித் திரிகின்ற அடியேனை,

இன்புற்று அன்புற்று அருள்வாயே ... இன்பத்துடனும், பிரியமாகவும்
ஆட்கொண்டு அருள்வாயாக.

அரிதிரு மருக ... திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே,

க டம்பத் தொங்கற் றிருமார்பா ... கடம்ப மாலையை அணிந்துள்ள
திருமார்பனே,

அலைகுமு குமுவென வெம்ப ... அலைகள் குமுகுமுவென
கொதித்துப் பொங்குமாறு

கண்டித்து எறிவேலா ... கடலினைக் கோபித்து வேலினைச்
செலுத்தியவனே*,

திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா ... முப்புரத்தை எரித்த
சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா,

ஜெயஜெய ஹரஹர ... வெற்றியை உடையவனே, பாவத்தை
நீக்குபவனே,

செந்திற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூரில் எழுந்தருளிய
கந்தப் பெருமாளே.


* இறுதிப் போரில் சூரன் மாமரமாகி கடலுள் ஒளிய, முருகன் கடல் மீது
கோபமாக வேலினை விட்டான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.206  pg 1.207  pg 1.208  pg 1.209 
 WIKI_urai Song number: 82 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
ThiruththaNi Thiru SAminAthan
'திருத்தணி' திரு சாமிநாதன்

'ThiruththaNi' Thiru SAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Dharmapuram Thiru SwAminAthan
'தருமபுரம்' திரு சுவாமிநாதன்

Dharmapuram SwAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 78 - parimaLa kaLaba (thiruchchendhUr)

parimaLa kaLabasu gandhac chandhak ...... thanamAnAr
     padaiyama padaiyena andhik kungat ...... kadaiyAlE

variyaLi niraimural kongu kanguk ...... kuzhalAlE
     marugidu maruLanai inbut Ranbut ...... RaruLvAyE

arithiru marugaka dambath thangat ...... RirumArbA
     alaigumu gumuvena vembak kaNdith ...... theRivElA

thiripura dhaganarum vandhik kumsaR ...... gurunAthA
     jeyajeya harahara sendhiR kandhap ...... perumALE.

......... Meaning .........

parimaLa kaLabasu gandha sandha thanamAnAr: These women, with fragrant and aromatic chests splashed with a mix of sandal paste

padaiyama padaiyena andhikkung katkadaiyAlE: are flinging their deathly weapons from the corner of their eyes.

variyaLi niraimural kongu kangkuR kuzhalAlE: Their dark cloud-like hair attracts beetles humming and seeking the flowers.

marugidu maruLanai inbutr tranbutr aruLvAyE: I am very much obsessed with these women and my mind is boggled. You must kindly and gladly shower Your grace on me.

arithiru maruga kadamba thonga thirumArbA: You are the nephew of Vishnu and Lakshmi. You wear the garland made of Kadamba flowers.

alaigumu gumuvena vembak kaNdith theRivElA: When You wielded the spear with rage at the sea*, the simmering waves rose with noise.

thiripura dhaganarum vandhikkum saR gurunAthA: You are the Great Master worshipped by Lord SivA who burnt down Thiripuram!

jeyajeya harahara: Victory To You! Oh Remover of all sins,

sendhiR kandhap perumALE.: You are Lord KanthA, the Great One residing at ThiruchchendhUr!


* In the final battle, SUran disguised himself as a mango tree and hid inside the sea. This enraged Murugan who wielded His Spear to split SUran into two parts.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 78 parimaLa kaLaba - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]