திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 77 பதும இருசரண் (திருச்செந்தூர்) Thiruppugazh 77 padhumairusaraN (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதனந் தத்தத் தத்தத் தனன தனதனந் தத்தத் தத்தத் தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான ......... பாடல் ......... பதும இருசரண் கும்பிட் டின்பக் கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும் பரிய கரியகண் செம்பொற் கம்பிக் குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப் புதுமை நுதிநகம் பங்கத் தங்கத் தினிது வரையவெண் சந்தத் திந்துப் புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக் கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ திதிதி ததததந் திந்திந் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தரரவென் றென்றொப் பின்றித் திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச் சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற் புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென் சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப் பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பதும இரு சரண் கும்பிட்டு இன்பக் கலவி நலம் மிகும் துங்கக் கொங்கை பகடு புளகிதம் துன்ற ... தாமரை மலர் போன்ற இரண்டு பாதங்களையும் வணங்கி, இன்பம் தரும் கலவிச் சுகம் மிக்குள்ள உயர்ந்த மார்பகப் பரப்பு புளகிதம் கொள்ள, கன்றிக் கயல் போலும் பரிய கரிய கண் செம் பொன் கம்பிக் குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சிப் பதற ... சினக் குறிப்புள்ள கயல் மீன் போன்ற பெரிய கரு நிறம் கொண்ட கண்கள் (காதிலுள்ள) செம்பொன் கம்பியில் பொருத்தப்பட்ட குண்டலங்களைத் தாக்க, மருட்சியுடன் இனிய மொழிகள் கொஞ்சி பதட்டத்துடன் வெளிவர, விதம் உறும் கந்துக் கொந்துக் குழல் சாயப் புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய ... விதம் விதமாக பிணைக்கப்பட்ட பூங்கொத்துக் கொண்ட கூந்தல் சரிய, புதிய வகையில் நுனி நகத்தால் மிகவும் அழுத்தமாக (வந்தவரின்) உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்ய, வெண் சந்தத்து இந்துப் புருவ வெயர்வுடன் பொங்க ... மதிக்கத் தக்க அழகிய பிறை போன்ற புருவத்தில் வியர்வை மேலெழும்படி, கங்கைச் சடைதாரி பொடி செய்து அருள் மதன் தந்த்ரப் பந்திக்கு அறிவை இழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர் தம் அன்புப் பண்பைத் தவிரேனோ ... கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் பொடியாக்கி அருளிய மன்மதனுடைய படையாகிய வஞ்சக (விலை மகளிர்) கூட்டத்துக்கு எனது அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும், துன்பம் தரும் வேசியர் மேல் அன்பு கொள்ளும் பண்பையும் தவிர்க்க மாட்டேனோ? திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று என்று ஒப்பு இன்றித் திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்டச் சுவர் சோர ... திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று இவ்வாறான ஒலிகளை பலமுறை ஒப்பில்லாத வகையில் எழுப்பி, திமிலை என்னும் பறையை ஒலித்து எட்டுத் திசைகளும் அண்டத்தின் சுவர்களும் சோர்ந்து போகும்படி, சதியில் வரு பெரும் சங்கத் தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சிக் குஞ்சித் தலை கொடு அடி பணிந்து ... வஞ்சனை எண்ணத்துடன் வந்த பெரிய கூட்டமான, மாலை அணிந்த புயங்களை உடைய, அசுரர்கள் (முதலில்) கோபித்துப் (பின்பு) பயந்தும், மயிர்த் தலையுடன் உனது திருவடியில் பணிந்து, எங்கட்கு உன் கண் க்ருபை தா என் சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக ... எங்களுக்கு உன் கடைக் கண் திருவருளைத் தருவாயாக என்று கேட்கும்படிக்கு போர் செய்தவனே, குமரனே, தாமரைத் தடாகங்கள் பல சூழ்ந்துள்ள வயலூர் முருகனே, முன் பொங்கித் தங்கிச் சலதி அலை பொரும் செந்தில் கந்தப் பெருமாளே. ... எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.204 pg 1.205 pg 1.206 pg 1.207 WIKI_urai Song number: 81 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 77 - padhuma irusaraN (thiruchchendhUr) pathuma irusaraN kumpit tinpak kalavi nalamikun thungak kongaip pakadu puLakithan thunRak kanRik ...... kayalpOlum pariya kariyakaN sempoR kampik kuzhaikaL poramaruN dinsoR konjip pathaRa vithamuRung kanthuk konthuk ...... kuzhalsAyap puthumai nuthinakam pangath thangath thinithu varaiyaveN santhath thinthup puruva veyarvudan pongak kangaic ...... chadaithAri podisey tharuLmathan thanthrap panthik kaRivai yizhavidum paNputh thunpap poruLin makaLirtham manpup paNpaith ...... thavirEnO thithithi thathathathan thinthin thanthad dididi dadadadaN diNdit taNdath thenana thanathanan thenthath thanthath ...... thenanAnA thikurthi thakirthathin thinthith thinthith thiriri thararaven RenRop pinRith thimilai paRaiyaRain theNdik kaNdac ...... chuvarsOrac chathiyil varuperum sangath thongaR puyava surarvekuN danjik kunjith thalaiko dadipaNin thengat kunkat ...... krupaithAven samara kumarakan jamchut Rumcheyp pathiyil murukamun pongith thangic chalathi yalaiporum senthiR kanthap ...... perumALE. ......... Meaning ......... pathuma iru saraN kumpittu inpak kalavi nalam mikum thungak kongai pakadu puLakitham thunRa: Prostrating at the twin lotus feet, their exalted bosom being enthralled by the ecstatic carnal pleasure enjoyed, kanRik kayal pOlum pariya kariya kaN sem pon kampik kuzhaikaL pora maruNdin sol konjip pathaRa: their large and black eyes, looking like angry kayal fish, running up to the ears and attacking the swinging ear-studs hanging from the reddish golden pins on the lobes, sweet words emanating from their stuttering mouth in a flirtatious manner, vitham uRum kanthuk konthuk kuzhal sAyap puthumai nuthi pangaththu angaththu inithu varaiya: their hair, attached with a variety of floral bunches coming loose and sliding, the tips of their nails making deep love-marks all over the (suitors') body in a unique pattern, veN santhaththu inthup puruva veyarvudan ponga: and their beautiful, crescent-like eye-brows showing beads of perspiration, kangaic chadaithAri podi seythu aruL mathan thanthrap panthikku aRivai izhavidum paNputh thunpap poruLin makaLir tham anpup paNpaith thavirEnO: this bewitching and treacherous group of whores is the weapon of Manmathan (God of Love) who was burnt down to ashes by Lord SivA, holding the river Gangai on His matted hair; will I not be able to get rid of the tendency of losing my mind to these whores and falling in love with them that causes me misery? thithithi thathathathan thinthith thanthad dididi dadadadaN diNdit taNdath thenana thanathanan thenthath thanthath thenanAnA thikurthi thakirthathin thinthith thinthith thiriri thara enRu enRu oppu inRith thimilai paRai aRainthu eN thikku aNdac chuvar sOra: The drums called thimilai were beaten to the meter "thithithi thathathathan thinthith thanthad dididi dadadadaN diNdid daNdath thenana thanathanan thenthath thanthath thenanAnA thikurthi thakirthathin thinthith thinthith thiriri thara" repeatedly, at unprecedently loud decibel levels, causing the eight cardinal directions and the walls of the earth to crack; chathiyil varu perum sangath thongal puya asurar vekuNdu anjik kunjith thalai kodu adi paNinthu: the vast multitude of the treacherous demons, with garlands adorning their shoulders, came in rage in the beginning, became terrified later and fell prostrating at Your hallowed feet, their hairy heads touching them; engatku un kaN krupai thA en samara kumara kanjam sutRum seyppathiyil muruka: and finally they begged You to bless them graciously from the corner of Your eyes; so powerful was Your war, Oh Lord KumarA! You have Your abode in VayalUr, surrounded by many lotus ponds, Oh MurugA! mun pongith thangic chalathi alai porum senthil kanthap perumALE.: The sea-waves of this place, ThiruchchendhUr, alternately swell and recede as they lash the shore, and You are seated here, Oh Lord KanthA, the Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |