திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 70 நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்) Thiruppugazh 70 nAlumaindhu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்த தான தான - தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான ......... பாடல் ......... நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாலும் ஐந்து வாசல் கீறு தூறு ... ஒன்பது* வாசல்களைப் பிளந்து வைத்த, அவதூறுக்கு இடமான, உடம்பு கால்கை யாகி ... இவ்வுடம்பு கால்களும் கரங்களும் கொண்டு, நாரி யென்பில் ஆகும் ஆகம் ... நரம்புகள், எலும்புகள் இவைகளால் ஆகிய சரீரம். அதனூடே நாதம் ஒன்ற ... அந்த உடம்பினுள் ஒலி என்னும் இந்திரியம் பொருந்த, ஆதி வாயில் ... எல்லாத் தொழில்களுக்கும் மூல காரணமான ஐம்பொறிகள் கொண்டு நாடகங்க ளான ஆடி ... பல வகையான கூத்துக்களை இவ்வுலகில் ஆடி, நாடறிந்திடாமல் ஏக ... இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகில் யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை வளராமுன் ... இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு, நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து ... பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து, பாருளோரை நூறு செஞ்சொல் கூறி ... உலகில் உள்ள செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி, மாறி விளைதீமை ... புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து, நோய்கலந்த வாழ்வுறாமல் ... பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல், நீகலந்து ... நீ எனது அறிவில் கலந்து உள் ஆகு ஞான நூல் அ டங்க ... உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும் ஓத வாழ்வு தருவாயே ... ஓதி உணரக் கூடிய வாழ்வைத் தந்தருள்வாயாக. காலன் வந்து பாலன் ஆவி காய வென்று ... யமன் வந்து இளைஞன் மார்க்கண்டேயனின் உயிரை வருத்த பாசம் வீசு காலம் வந்து ... பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே வெளிப்பட்டு ஓலம் ஓலம் எனும் ஆதி ... அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய ஆதி முதல்வரும், காமன் ஐந்து பாணமோடு வேமின் ... மன்மதனை நீ உனது ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக என்றுகாணு மோனர் ... என்று நெற்றிக் கண்ணால் பார்த்த மெளன மூர்த்தியும், காள கண்ட ரோடு ... நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு வேத மொழிவோனே ... வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, ஆல மொன்று வேலை யாகி ... ஆலகாலம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டு, யானை யஞ்சல் தீரு மூல ... கஜேந்திரன் என்னும் யானையின் அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும், ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே ... சக்ராயுதத்தை அழகிய கரத்தில் ஏந்துபவரும், ஆயர் குலத்தில் தோன்றியவருமான மாயன் திருமாலின் மருகோனே, ஆரணங்கள் தாளை நாட ... வேதங்களெல்லாம் உனது திருவடிகளைத் துதிக்க, வாரணம் கை மேவும் ... சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே. ... ஆதிப் பரம் பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே. |
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.192 pg 1.193 pg 1.194 pg 1.195 WIKI_urai Song number: 76 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 70 - nAlum aindhu (thiruchchendhUr) nAlu maindhu vAsal keeRu thURu dambu kAlkai yAgi nAri yenbil Agum Agam ...... adhanUdE nAdha mondRa Adhi vAyil nAta kangaL Ana Adi nAda Rindhi dAma lEga ...... vaLarAmun nUla nantha kOdi thEdi mAlmi gundhu pAru LOrai nURu senchol kURi mARi ...... viLaitheemai nOyka landha vAzhvu RAmal neeka landhu LAgu nyAna nUla danga Odha vAzhvu ...... tharuvAyE kAlan vandhu bAlan Avi kAya vendRu pAsam veesu kAlam vandhu Olam Olam ...... enumAdhi kAman aindhu bANa mOdu vEmi nendru kANu mOnar kALa kaNda rOdu vEdha ...... mozhivOnE Ala mondRu vElai yAgi yAnai anjal theeru mUla Azhi angai Ayan mAyan ...... marugOnE Ara NangaL thALai nAda vAra Nangkai mEvum Adhi yAna sendhil vAzhva dhAna ...... perumALE. ......... Meaning ......... nAlu maindhu vAsal keeRu thUR udambu: This body has nine portals* in it and is full of blemish. kAl kaiyAgi nAri yenbil Agum Agam: The legs and arms got attached to this body which is made up of nerves and bones. adhanUdE nAdhamondra: To this body, an organ meant for sound got affixed. Adhi vAyil: Also other five prime sensory organs required for all functions, nAtakangaLAna Adi: this body enacted several dramas in this world! nAdaRindhi dAmalEga vaLarAmun: Before this body grows to a point where the exit of life from it is not known to anyone in this world, nUl anantha kOdi thEdi: this body searches for millions of books and goes through them; mAl migundhu: the mind gets confused; pAruLOrai nURu senchol kURi mARi viLai theemai: and this body heaps a lot of praise on so many wealthy people in this world, changes its mind and suffers the consequences! nOykalandha vAzhvuRAmal: I do not want to suffer that life full of several diseases. nee kalandhuLAgu nyAna nUl adanga Odha vAzhvu tharuvAyE: I want You to mingle with my mind so that I could recite and understand the complete treatise of True Knowledge; and that is the life I want from You. kAlan vandhu bAlan Avi kAya vendru: Yaman, the Death-God, came to take the life of MarkandEyan, pAsam veesu kAlam vandhu: and when he threw the Cord of Bondage (PAsakkayiRu), Olam Olam enum Adhi: He (Lord SivA), the foremost God, came with the words "Fear not, fear not"; kAman aindhu bANamOdu vEminendru: When Manmathan (Love God) attacked Him, he was cursed to burn along with his five flowery arrows by kANu mOnar: Lord SivA, sitting in silence as DhakshinAmUrthy, who looked at him with His fiery eye of the forehead; kALa kaNdarOdu: He has blue-tinged throat (due to His imbibing the fierce poison); vEdha mozhivOnE: and You preached to that SivA the significance of the VEdAs (scriptures)! Alamondru vElaiyAgi: He (Vishnu) reclines on the Milky Ocean which once generated the fierce poison; yAnai anjal theeru mUla: when the elephant GajEndran screamed for help, He came to his aid; Azhi angai Ayan mAyan marugOnE: He holds the weapon of Chakra (disc) in His hand; and He belongs to the family of shepherds. You are the nephew of that mystic Vishnu! AraNangaL thALai nAda: All the VEdAs worship Your lotus feet! vAraNang kai mEvum AdhiyAna: You hold a staff of the Rooster! You are the most primordial One! sendhil vAzhvadhAna perumALE.: You have Your abode at ThiruchchendhUr, Oh Great One! |
* The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |