திருப்புகழ் 62 தண்டை அணி  (திருச்செந்தூர்)
Thiruppugazh 62 thaNdaiaNi  (thiruchchendhUr)
Thiruppugazh - 62 thaNdaiaNi - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

......... பாடல் .........

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி,

வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி,
கிண்கிணி,

சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும்,

தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன்

கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க

நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன்

இன்பவுரி கொண்டு ... வலம்வந்து

நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து

நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,

கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட,

கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய
மணிமுடிகளும்,

கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும்,

சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும்,

கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும்,

சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும்,

கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக

என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற
மாட்டாவோ?

புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்)
உலகமும்,

கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட
வெளியண்டங்களூம்,

பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ,

வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது,

பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி
அழகு சிறந்து

எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று

புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை
சிவனும்

சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக

கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள்

செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும்,

என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி
நடனம் கொள்ளும்

கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே

கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின்
சந்தன மணம் வீசும்

உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும்
தம்பிரானே.


* முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம்
கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி
கொண்டதையும் குறிக்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.68  pg 1.69  pg 1.70  pg 1.71 
 WIKI_urai Song number: 16 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru L. Vasanthakumar M.A.
திரு L. வசந்த குமார்

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
Murugan Songs by Ms Sughandhisri K.
சுகந்திஸ்ரீ

Ms Sughandhisri K.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 62 - thaNdai aNi (thiruchchendhUr)

thaNdaiaNi veNdaiyang kiNkiNisa dhangaiyun
     thaNkazhalsi lambudan ...... konjavEnin

thandhaiyinai munparindhu inbavuri koNdunan
     santhodama Naindhunin ...... RanbupOlak

kanduRaka dambudan sandhamaku dangaLum
     kanjamalar sengaiyum ...... sindhuvElum

kaNgaLumu gangaLum chandhiRani RangaLum
     kaNkuLira endranmun ...... sandhiyAvO

puNdarikar aNdamum koNdabagi raNdamum
     pongiezha vengaLang ...... koNdapOdhu

pongiriye namchiRandhu enginumva Larndhumun
     puNdarikar thandhaiyum ...... sindhaikUrak

koNdanada nampadham sendhililum endranmun
     konjinada namkoLum ...... kandhavELE

kongaikuRa mangaiyin sandhamaNam uNdidum
     kumbamuni kumbidun ...... thambirAnE.

......... Meaning .........

thaNdai aNiveNdaiyam: Thandai and Vendaiyam (two types of anklet)

kiN kiNi sadhangaiyum: kiNkiNi and cathangai (two other types of anklet)

thaNkazhal silambudan: gracious kazhal and cilampu (two other anklets)

konjavE: all these anklets making a pleasant sound together,

nin thandhaiyinai munparindhu: You went earnestly in front of Your Father, SivA,

inbavuri koNdu: and went around Him happily; and

nan santhodam aNaindhu: embraced Him with ardent love.

nindru anbu pOla: Like that steady love,

kanduRa: I too should be able to see You and lose myself in You;

kadambudan: with kadampa flowers,

sandha makudangaLum: beautiful and ornate crowns,

kanja malar sengaiyum: reddish hands like lotus flowers,

sindhuvElum: the spear that destroyed cUran (demon),

kaNgaLum mugangaLum: twelve eyes and six Divine faces,

chandhiRa niRangaLum: and the moonlit shining colours on those,

kaN kuLira endran mun: all these should cool my eyes, and

sandhiyAvO: would they not manifest before me?

puNdarikar aNdamum: The earth which was created by BrahmA (who sits on a lotus flower),

koNda bagir aNdamum: and the encircling Universe which gobbled up the earth

pongi ezha: jumped with joy

vengaLang koNda pOdhu: when You entered the battlefield.

pongiri yenanj siRandhu: You stood like a golden mountain*

enginum vaLarndhu: and expanded in all directions

mun puNdarikar thandhaiyum sindhai kUra: and elated the minds of Vishnu and Your father, SivA.

koNda nadanam padham: Those dancing feet of Yours

sendhililum: are in this place, ThiruchchendhUr, and

endran mun konji nadanam koLum: also dance in front of my eyes lovingly,

kandhavELE: Oh Kanda, handsome one like Manmatha!

kongai kuRamangaiyin sandha maNam uNdidum: You indulge in the sandal-fragrant bosom of VaLLi, the KuRava girl.

kumbamuni kumbidum thambirAnE.: You are also worshipped by the sage, Agasthya, Oh Great One!


* When Murugan took the ViswarUpa - Hypercosmic form, in the battlefield after destroying the demon, SUran, the Universe rejoiced and Vishnu and SivA were elated.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 62 thaNdai aNi - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]