திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 60 தகரநறை (திருச்செந்தூர்) Thiruppugazh 60 thagaranaRai (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் ...... தனதான ......... பாடல் ......... தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் புநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான தனனதன தாந்த னந்தத் தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா திசையசுரர் மாண்ட ழுந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா திகழ்வயிர மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தகர நறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளரும் இடை ஏந்து தங்கத் தன மானார் தமை ... மயிர்ச் சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள், மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும் தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை, மனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் ... உள்ளத்தில் காம ஆசை மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும், புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப் புவி அதனில் வாழ்ந்து ... சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ ... பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும், பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ? தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென நடனம் ஆர்ந்த துங்கத் தனி மயிலை ஊர்ந்த சந்தத் திருமார்பா ... தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே, திசை அசுரர் மாண்டு அழுந்தத் திறல் அயிலை வாங்கு செம் கை ... திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி, செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே, சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா ... பல உச்சிகளைக் கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின் ஒப்பற்ற குழந்தையே, திகழ் வயிரம் ஏந்து கொங்கைக் குற வனிதை காந்த ... விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சந்த்ரச் சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே. ... சந்திரன் தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.180 pg 1.181 WIKI_urai Song number: 69 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'தருமபுரம்' திரு சுவாமிநாதன் Dharmapuram SwAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 60 - thagaranaRai (thiruchchendhUr) thagaranaRai pUNda vinthaik kuzhaliyarkaL thEyntha inpath thaLarumidai yEnthu thangath ...... thanamAnAr thamaimanathil vAnjai pongak kalaviyodu sErnthu manthrac camayajepa neengi yinthap ...... padinALum pukalariya thAnthri sangath thamizhpanuva lAynthu konjip puviyathanil vAzhnthu vanjith ...... thuzhalmUdar punithamili mAnthar thangat pukazhpakarthal neengi ninpoR puLakamalar pUNdu vanthith ...... thiduvEnO thakudathaku thAntha thanthath thikudathiku theentha minthith thakukaNaka thAnga Nangath ...... thanathAna thananathana thAntha nanthath thenanadana mArntha thungath thanimayilai yUrntha santhath ...... thirumArpA thisaiyasurar mANda zhunthath thiRalayilai vAngu sengaic chimaiyavarai yeenRa mangaik ...... korupAlA thikazhvayira mEnthu kongaik kuRavanithai kAntha chanthrac chikaramuki lOngu senthiR ...... perumALE. ......... Meaning ......... thakara naRai pUNda vinthaik kuzhaliyarkaL thEyntha inpath thaLarum idai Enthu thangath thana mAnAr: These women have beautiful hair with the scent of sandalwood cream; the slender, pleasurable and weakened waist of these whores supports the golden bosom; thamai manathil vAnjai pongak kalaviyodu sErnthu manthras samaya jepa neengi inthappadi nALum: thinking about them with intense passion and making love to them, I have been neglecting to chant the ritual manthrAs, giving up religious rites and worship; behaving like this each and every day, pukal ariyathAm thri sangath thamizh panuval Aynthu konjip puvi athanil vAzhnthu: I have been researching into the rare texts in Tamil literature of the three Sangam ages, speaking sweetly to others and carrying on my life merrily in this world; vanjiththu uzhal mUdar punitham ili mAnthar thangaL pukazh pakarthal neengi nin pon puLaka malar pUNdu vanthiththiduvEnO: will I be able to stay away from treacherous fools who are out to deceive many people and from going (to their place) to flatter such tainted people and, instead, will I not be able to praise Your hallowed feet heartily to derive heavenly bliss? thakudathaku thAntha thanthath thikudathiku theentha minthith thakukaNaka thAnga Nangath thanathAna thananathana thAntha nanthath thena nadanam Arntha thungath thani mayilai Urntha santhath thirumArpA: Oh Lord, with a broad chest smeared with sandalwood paste! You mount the peerless and famous peacock that dances to the meter "thakudathaku thAntha thanthath thikudathiku theentha minthith thakukaNaka thAnga Nangath thanathAna thananathana thAntha nanthath"! thisai asurar mANdu azhunthath thiRal ayilai vAngu sem kai: You wielded the triumphant spear held in Your reddish hand and annihilated the demons in all directions! simaiya varai:nRa mangaikku oru pAlA: You are the unique child of PArvathi, the daughter of King HimavAn who ruled the HimAlayAs having several peaks! thikazh vayiram Enthu kongaik kuRa vanithai kAntha: You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, whose bosom is adorned with dazzling diamond strand! chanthrac chikara mukil Ongu senthil perumALE.: You are seated in ThiruchchendhUr which town has tall temple towers on which the moon hovers, along with bright clouds, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |