திருப்புகழ் 59 சேமக் கோமள  (திருச்செந்தூர்)
Thiruppugazh 59 sEmakkOmaLa  (thiruchchendhUr)
Thiruppugazh - 59 sEmakkOmaLa - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தானன தானத் தானன
     தானத் தானன ...... தந்ததான

......... பாடல் .........

சேமக் கோமள பாதத் தாமரை
     சேர்தற் கோதும ...... நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண
     சீலத் தேமிக ...... அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
     காரத் தேயழி ...... கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
     காமுற் றேயும ...... தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
     நீளக் காளபு ...... யங்ககால

நீலக் ரீபக லாபத் தேர்விடு
     நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
     லோகத் தேதரு ...... மங்கைபாலா

யோகத் தாறுப தேசத் தேசிக
     வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

சேமக் கோமள பாதத் தாமரை ... காவலாய் இருப்பவையும்
அழகானவையுமான உன் தாமரை போன்ற திருவடிகளை

சேர்தற் கோதும் அநந்தவேத அதீதத்தே ... அடைவதற்கு
வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த
நிலையின் மீதும்,

அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்புறாதே ...
பகையற்ற சாந்த நிலைமீதும், நற்குண நன்னெறியின் மீதும்
அன்பை வைக்காமல்,

காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே ... காமத்தாலும்,
கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின்
சேஷ்டைகளாலும்

அழிகின்ற மாயா காயத்தே ... அழிகின்ற மாயையான இந்த
உடல் மீதும்,

பசு பாசத்தே ... இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப்
பற்றுக்களின் மீதும்

சிலர் காமுற்றேயும் அதென்கொலோதான் ... சிலர் ஆசைகொண்டு
இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை.

நேமிச் சூரொடு மேருத் தூளெழ ... கடலும், சூரனும், மேரு மலையும்
தூளாகும்படி

நீளக் காள புயங்க கால ... நெடிய விஷமுடைய பாம்பைக் காலிலே
கொண்டு

நீலக்ரீப கலாபத் தேர்விடு ... நீலக் கழுத்தையும் தோகையையும்
கொண்ட தேர் போன்ற மயிலைச் செலுத்தும்

நீபச் சேவக செந்தில்வாழ்வே ... கடப்ப மாலை அணிந்த வீரனே,
திருச்செந்தூரில் வாழ்பவனே,

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே ... வேள்வித்தீயை
தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே

தரு மங்கைபாலா ... தருகின்ற உமாதேவியின் குமாரனே,

யோகத்து ஆறு உபதேசத் தேசிக ... யோகவழிகளை உபதேசிக்கும்
குருமூர்த்தியே,

ஊமைத் தேவர்கள் தம்பிரானே. ... உன் முன்னே வாயில்லா
ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.178  pg 1.179 
 WIKI_urai Song number: 68 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 59 - sEmak kOmaLa (thiruchchendhUr)

sEma kOmaLa pAdhath thAmarai
     sErdhaRk Odhum ...... anantha vEdhA

sEmak kOmaLa pAdhath thAmarai
     sErdhaRk Odhuma ...... nanthavEdhA

theedhath thEavi rOdhath thEguNa
     seelath thEmiga ...... anbuRAdhE

kAmak rOdhavu lObap bUthavi
     kArath thEazhi ...... kindramAyA

kAyath thEpasu pAsath thEsilar
     kAmutrE yuma ...... dhenkolOthAn

nEmich cUrodu mEruth thULezha
     neeLak kALabu ...... yangakAla

neelak reebaka lAbath thErvidu
     neebach chEvaga ...... sendhilvAzhvE

Omath theevazhu vArkat kUrsiva
     lOkath thEtharu ...... mangaibAlA

yOgath thARupa dhEsath dhEsiga
     Umaith dhEvargaL ...... thambirAnE.

......... Meaning .........

sEma kOmaLa pAdhath thAmarai: Your lotus feet are beautiful and they provide security;

sErdhaRk Odhum anantha vEdhAtheedhaththE: and to attain them, there are many methods prescribed in the scriptures. Many people do not think about the stage beyond those scriptures;

avirOdhaththE: nor do they think about the state of absence of enmity;

guNa seelaththE miga anbuRAdhE: and they do not also fondly think about morals and virtues.

kAma krOdhavu lObap: Instead, they indulge in lust, anger, miserliness,

bUtha vikAraththE azhi kindra mAyA kAyaththE: the myth of the body which degenerates due to the mischief played upon it by the five elements,

pasu pAsaththE: and all the desires to which the human beings are attached.

silar kAmutrEyum adhen kolOthAn: Why is it that some people are slaves to such attachments?

nEmich sUrodu mEruth thULezha: The ocean, SUran and Mount MEru were all destroyed

neeLak kALa bu yanga kAla neela kreeba kalAbaththEr vidu: when You drove Your Peacock like a chariot; that Peacock has blue neck and holds a very poisonous snake in its legs.

neebach sEvaga sendhil vAzhvE: You are wearing kadappa flowers symbolizing Your victory. You are the Treasure of ThiruchchendhUr!

Omaththee vazhuvArkat kUr: For those who regularly perform the rites at the sacrificial pyres,

sivalOkaththE tharu mangai bAlA: UmAdEvi reserves a place in the land of SivA; You are Her Son, Oh KumarA!

yOgaththAR upadhEsath dhEsiga: You are the Great Master teaching the methods of yOgA!

Umaith dhEvargaL thambirAnE.: In Your presence all the DEvAs are dumbfounded, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 59 sEmak kOmaLa - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]