திருப்புகழ் 58 சந்தன சவ்வாது  (திருச்செந்தூர்)
Thiruppugazh 58 sandhanasavAdhu  (thiruchchendhUr)
Thiruppugazh - 58 sandhanasavAdhu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தானதன தத்தான
     தந்ததன தானதன தத்தான
          தந்ததன தானதன தத்தான ...... தனதான

......... பாடல் .........

சந்தனச வாதுநிறை கற்பூர
     குங்குமப டீரவிரை கத்தூரி
          தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாம
     வம்புதுகி லாரவயி ரக்கோவை
          தங்கியக டோரதர வித்தார ...... பரிதான

மந்தரம தானதன மிக்காசை
     கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
          வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வை
     அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
          வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
     சம்ப்ரமம யூரதுர கக்கார
          என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின்

இன்பஅநு போகசர சக்கார
     வந்தஅசு ரேசர்கல கக்கார
          எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
     குன்றெறியும் வேலின்வலி மைக்கார
          செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார
     மந்த்ரவுப தேசமகி மைக்கார
          செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சந்தன ச(வ்)வாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி ...
சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள
கஸ்தூரி,

தண் புழுகு அளாவு களபச் சீத வெகு வாச சண்பக க(ல்)லார
வகுளத் தாம
... குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை
பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ,
மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய்,

வம்பு துகில் ஆர வயிரக் கோவை தங்கிய கடோர தர வித்தார
பரிதானமந்தரம் அது ஆன தன
... கச்சு, ஆடை (இவைகளின்
மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும்,
விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள
மார்பகங்களை உடையவர்களாய்,

மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர வஞ்சக
விசார இதயப் பூவை அனையார்கள்
... பேராசை கொண்டு
பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட
மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப்
போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய

வந்தியிடும் மாய விரகப் பார்வை அம்பில் உ(ள்)ளம் வாடும்
அறிவற்றேனை
... வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப்
பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம்

வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே ... வந்து
என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய்?

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார ...
இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த
மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே,

என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் இன்ப அநுபோக
சரசக்கார
... என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப்
பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை
உடையவனே,

வந்த அசுரேசர் கலகக்கார எங்கள் உமை சேய் என
அருமைக்கார
... வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே,
எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே,

மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார ... மிகுந்த
பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து
தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே,

குன்று எறியும் வேலின் வலிமைக்கார செம் சொல் அடியார்கள்
எளிமைக்கார
... கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல்
வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட
அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே,

எழில் மேவும் திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச
மகிமைக்கார
... அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய
சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம்
செய்த பெருமை வாய்ந்தவனே,

செந்தில் நகர் வாழும் அருமைத் தேவர் பெருமாளே. ...
திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.124  pg 1.125  pg 1.126  pg 1.127 
 WIKI_urai Song number: 40 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 58 - sandhana savvAdhu (thiruchchendhUur)

santhanasa vAthuniRai kaRpUra
     kungumapa deeravirai kaththUri
          thaNpuzhuka LAvukaLa paccheetha ...... vekuvAsa

saNpakaka lAravaku LaththAma
     vamputhuki lAravayi rakkOvai
          thangiyaka dOrathara viththAra ...... parithAna

mantharama thAnathana mikkAsai
     koNduporuL thEdumathi nittUra
          vanjakavi sAraitha yappUvai ...... yanaiyArkaL

vanthiyidu mAyavira kappArvai
     ampiluLam vAdumaRi vatREnai
          vanthadimai yALaini yeppOthu ...... ninaivAyE

inthrapuri kAvalmuthan maikkAra
     sampramama yUrathura kakkAra
          enRumaka lAthaiLa maikkAra ...... kuRamAthin

inpAnu pOkasara sakkAra
     vanthAsu rEsarkala kakkAra
          engaLumai sEyenaru maikkAra ...... mikupAvin

senthamizhsol nAlukavi thaikkAra
     kunReRiyum vElinvali maikkAra
          senjoladi yArkaLeLi maikkAra ...... ezhilmEvum

thingaLmudi nAtharsama yakkAra
     manthravupa thEsamaki maikkAra
          senthinakar vAzhumaru maiththEvar ...... perumALE.

......... Meaning .........

santhana sa(v)vAthu niRai kaRpUra kunguma padeera virai kaththUri: Sandal paste, javvAthu (a kind of incense), fresh green camphor, fragrant kasthUri (an aromatic extract, musk, from the deer)

thaN puzhuku aLAvu kaLapac cheetha veku vAsa saNpaka ka(l)lAra vakuLath thAma: and cool civet are all mixed together, and the blend is smeared (on the bosom); cool and fragrant shanbaga (champak) flower, red lily and makizham flower are tied into garlands that bedeck the bosom;

vampu thukil Ara vayirak kOvai thangiya kadOra thara viththAra parithAnamantharam athu Ana thana: diamond and pearl strands are positioned on top of the tight-fitting blouse and the upper cloth covering their hard, broad and heavy breasts that look like the mount Manthara;

mikku Asai koNdu poruL thEdum athi nittUra vanjaka visAra ithayap pUvai anaiyArkaL: they are an avaricious and evil lot of women, always hankering after money and having a devious mind; these whores looking like the pretty nagaNavAy bird (myna)

vanthiyidum mAya virakap pArvai ampil u(L)Lam vAdum aRivatREnai: shoot an arrow from their delusory and passionate eyes that causes anguish and misery in me; I am such a stupid fool;

vanthu adimai ALa ini eppOthu ninaivAyE: nevertheless, when do You propose to come and take charge of me?

inthrapuri kAval muthanmaikkAra samprama mayUra thurakakkAra: You are the prime commander-in-chief of the celestial land of IndrA! You mount the famous peacock that serves You like a horse!

enRum akalAtha iLamaikkAra kuRa mAthin inpa anupOka sarasakkAra: You are for ever youthful! You enjoy the pleasant fondlings of VaLLi, the damsel of the KuRavAs!

vantha asurEsar kalakakkAra engaL umai sEy ena arumaikkAra: You battled with the confronting leaders of the demons! You are the pet child of our dear Goddess UmAdEvi!

miku pAvin senthamizh sol nAlu kavithaikkAra: (Coming as ThirugnAna Sambandhar) You composed numerous hymns (thEvAram) in the chaste language of Tamil, Oh Poetic Wizard, capable of creating four* types of poetry!

kunRu eRiyum vElin valimaikkAra sem sol adiyArkaL eLimaikkAra: You hold in Your hand the powerful spear that pierced through the mount Krouncha! You are the most accessible One to Your devotees whose words are truthful!

ezhil mEvum thingaL mudi nAthar samayakkAra manthra upathEsa makimaikkAra: You belong to Saiva religion of Lord SivA who wears the beautiful crescent moon! You have the great honour of preaching the PraNava ManthrA (to that Lord SivA)!

senthil nakar vAzhum arumaith thEvar perumALE.: You are seated in ThiruchchendhUr, and You are the Lord of the dear celestials, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 58 sandhana savAdhu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]