திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 57 சத்தம் மிகு ஏழு (திருச்செந்தூர்) Thiruppugazh 57 saththammiguEzhu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான ...... தனதான ......... பாடல் ......... சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான ...... தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவநி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சத்தம் மிகு ஏழு கடலைத் தேனை உற்று மது தோடு கணையைப் போர் கொள் சத்தி தனை மாவின் வடுவைக் காவி தனை மீறு ... ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தக்க மணம் வீசு கமலப் பூவை மிக்க விளைவான கடுவைச் சீறு உதத்து உகளும் வாளை அடும் மை பாவு(ம்) விழி மாதர் ... தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே ... மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கிரீடத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே ... நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடிமைாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? சித்ர வடி வேல் ப(ன்)னிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார ... அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திக்கினு(ம்) நடாவு புரவிக்கார குற மாது சித்த அநுராக கலவிக்கார ... திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துட்ட அசுரேசர் கலகக்கார சிட்டர் பரிபால லளிதக்கார ... துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார ... அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, முச் சகர் பராவு சரணக்கார இனிதான முத்தமிழை ஆயும் வரிசைக்கார ... மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, பச்சை முகில் தாவும் புரிசைக்கார முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே. ... கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.122 pg 1.123 pg 1.124 pg 1.125 WIKI_urai Song number: 39 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 57 - saththam migu Ezhu (thiruchchendhUr) saththamiku mEzhukada laiththEnai yutRamathu thOdukaNai yaippOrkoL saththithanai mAvinvadu vaikkAvi ...... thanaimeeRu thakkamaNam veesukama lappUvai mikkaviLai vAnakadu vaiccheeRu thaththukaLum vALaiyadu maippAvu ...... vizhimAthar maththakiri pOlumoLir viththAra muththuvada mEvumezhil mikkAna vacchiraki reedanikar seppAna ...... thanameethE vaiththakodi thAnamayal vittAna paththiseya Ezhaiyadi maikkAka vajramayil meethilini yeppOthu ...... varuvAyE sithravadi vElpaniru kaikkAra paththipuri vOrkaLpanu vaRkAra thikkinuna dAvupura vikkAra ...... kuRamAthu siththAnu rAkakala vikkAra thuttAsu rEsarkala kakkAra sittarpari pAlalaLi thakkAra ...... adiyArkaL muththipeRa vEsolvasa nakkAra thaththainikar thUyavani thaikkAra mucchakarpa rAvusara NakkAra ...... inithAna muththamizhai yAyumvari saikkAra pacchaimukil thAvupuri saikkAra muththulavu vElainakar muththEvar ...... perumALE. ......... Meaning ......... saththam miku Ezhu kadalaith thEnai utRu mathu thOdu kaNaiyaip pOr koL saththi thanai mAvin vaduvaik kAvi thanai meeRu: They excel in comparison with the noisy seven seas, beetles (that collect honey), flowers filled with nectar, arrows, the battling spear, little baby-mangoes and black lilies; thakka maNam veesu kamalap pUvai mikka viLaivAna kaduvaic cheeRu uthaththu ukaLum vALai adum mai pAvu(m) vizhi mAthar: those eyes are like the fragrant lotus that exudes measured aroma, like the concentrated poison and like the vALai fish that jump about with a hissing noise; they are the deadly eyes of the whores, painted with black pigment; maththa kiri pOlum 0Lir viththAra muththu vadam mEvum ezhil mikkAna vacchira kireeda nikar seppAna thanam meethE: their bosom, resembling a little bowl and bedecked with a wide band of pearl necklace, springs like an elephant in rage and looks like a crown embedded with diamonds; vaiththa kodithAna mayal vittu Ana paththi seya Ezhai adimaikkAka vajra mayil meethinil eppOthu varuvAyE: making me give up the evil delusion for these whores and in order that this poor slave worships You with deep devotion, when will You arrive here, mounted on Your strong peacock? sithra vadi vEl pa(n)niru kaikkAra paththi purivOrkaL panuvalkAra: You have twelve graceful hands, holding the beautiful and sharp spear! You dwell in the texts composed by Your ardent devotees! thikkinu(m) nadAvu puravikkAra kuRa mAthu siththa anurAka kalavikkAra: You mount the horse-like peacock and drive it in all directions! You have the unique pleasure of union with VaLLi, the damsel of the KuRavAs, who loves you from the heart! thutta asurEsar kalakakkAra sittar paripAla laLithakkAra: You fought with the leaders of the evil demons! You enjoy the sport of protecting all good people! adiyArkaL muththi peRavE sol vasanakkAra thaththai nikar thUya vanithaikkAra: You preach holy words that bring liberation to Your devotees! You are the consort of the parrot-like and unblemished damsel, DEvayAnai! mucchakar parAvu saraNakkAra inithAna muththamizhai Ayum varisaikkAra: Your hallowed feet are lauded and worshipped by people of the three worlds! You have the distinction of researching into the Tamil language in all its three aspects (namely, literature, music and drama)! pacchai mukil thAvum purisaikkAra muththu ulavu vElai nakar muththEvar perumALE.: Your temples have such tall walls that dark clouds hover over them! You have Your abode in ThiruchchendhUr, surrounded by the sea where pearls float about! You are the Lord of the Trinity, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |