திருப்புகழ் 48 குடர்நிண மென்பு  (திருச்செந்தூர்)
Thiruppugazh 48 kudarniNamenbu  (thiruchchendhUr)
Thiruppugazh - 48 kudarniNamenbu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தானாந்தனனா

......... பாடல் .........

குடர்நிண மென்பு சலமல மண்டு
     குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல்

குலவு குரம்பை முருடு சுமந்து
     குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா

அடர்மத னம்பை யனையக ருங்க
     ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா

அறிவழி கின்ற குணமற வுன்றன்
     அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய்

தடவியல் செந்தில் இறையவ நண்பு
     தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே

சரவண கந்த முருகக டம்ப
     தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே

சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
     தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா

துரிதப தங்க இரதப்ர சண்ட
     சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.

......... சொல் விளக்கம் .........

குடர்நிண மென்பு சலமல ... குடல், கொழுப்பு, எலும்பு, நீர், மலம்,

மண்டுகுருதிந ரம்பு சீயூன் பொதிதோல் ... பெருகும் உதிரம்,
நரம்பு, சீழ், மாமிசம், இவையெல்லாம் மூடிய தோல்,

குலவு குரம்பை முருடு சுமந்து ... ஆகியவற்றால் ஆன சிறு
குடிலாகிய இந்தக் கட்டையைச் சுமந்து,

குனகிமகிழ்ந்து நாயேன் தளரா ... கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும்,
நாயினேன் தளர்ச்சியுற்றும்,

அடர்மதனம்பை யனைய கருங்கண் ... நெருங்கிவரும் மன்மதனின்
அம்பை ஒத்த கரிய கண்களை உடைய

அரிவையர் தங்கள் தோள் தோய்ந்தயரா ... பெண்களின்
தோள்களில் மூழ்கி அயர்ந்தும்,

அறிவழிகின்ற குணமற ... அறிவு அழிந்து போகும் தீய குணம்
அற்றுப் போக

உன்றன் அடியிணை தந்து நீயாண்டருள்வாய் ... உன்னிரு
பதங்களைத் தந்து நீ ஆட்கொண்டு அருள்வாயாக.

தடவியல் செந்தில் இறையவ ... விசாலமான பெருமையை உடைய
திருச்செந்தூரில் தங்கும் இறைவனே,

நண்பு தருகுற மங்கை வாழ்வாம் புயனே ... அன்பைத்தரும்
குறப்பெண் வள்ளிக்கு வாழ்வாகும் திருப்புயத்தோனே,

சரவண கந்த முருக கடம்ப ... சரவணபவனே, கந்தா, முருகா,
கடப்பமாலை அணிந்தோனே,

தனிமயில் கொண்டு பார்சூழ்ந்தவனே ... ஒப்பற்ற மயிலின் மீது
ஏறி உலகை வலம்வந்தவனே,

சுடர்படர் குன்று தொளைபட ... ஒளிபரந்த கிரெளஞ்ச மலை
தொளைபடவும்,

அண்டர் தொழவொரு செங்கை வேல்வாங்கியவா ... தேவர்கள்
வணங்கவும், ஒப்பற்ற சிவந்த கரத்தினின்று வேலைச் செலுத்தியவனே,

துரிதபதங்க இரதப்ரசண்ட ... வேகமாகச் செல்லும் பறவையாகிய
மயிலை தேராகக் கொண்ட மாவீரனே,

சொரிகடல் நின்ற சூராந் தகனே. ... அலைவீசும் கடலின் நடுவே
(மாமரமாய்) நின்ற சூரனுக்கு யமனாக வந்தவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.170  pg 1.171  pg 1.172  pg 1.173 
 WIKI_urai Song number: 64 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 48 - kudarniNa menbu (thiruchchendhUr)

kudarniNa menpu salamala maNdu
     kuruthina rampu ...... seeyUn pothithOl

kulavu kurampai murudu sumanthu
     kunakima kizhnthu ...... nAyEn thaLarA

adarmatha nampai yanaiyaka rungka
     Narivaiyar thangaL ...... thOdOyn thayarA

aRivazhi kinRa kuNamaRa vunRan
     adiyiNai thanthu ...... neeyAN daruLvAy

thadaviyal senthil iRaiyava naNpu
     tharukuRa mangai ...... vAzhvAm puyanE

saravaNa kantha murugaka damba
     thanimayil koNdu ...... pArchUzhn thavanE

sudarpadar kunRu thoLaipada aNdar
     thozhavoru sengai ...... vElvAng kiyavA

thurithapa thanga irathapra saNda
     sorikadal ninRa ...... chUrAn thakanE.

......... Meaning .........

kudarniNa menpu salamala: The intestines, fat, bones, urine, faeces

maNdukuruthina rampu seeyUn pothithOl: spurting blood, nerves, pus and flesh; all these are wrapped within the skin,

kulavu kurampai murudu sumanthu: constituting this small cottage of a body - this piece of wood that I am bearing.

kunakimakizhnthu nAyEn thaLarA: I, the lowly dog, flirted around, rejoiced and eventually got tired.

adarmathanampai yanaiya karungkaN arivaiyar: The dark eyes of women are like the arrows shot by chasing Manmathan (God of Love);

thangaL thOL thOynthayarA: and I simply drowned in their shoulders and became exhausted.

aRivazhikinRa kuNamaRa: In order that I could get rid of that vice which destroyed my intellect,

unRan adiyiNai thanthu neeyANdaruLvAy: kindly bless me with Your two lotus feet and grant me salvation!

thadaviyal senthil iRaiyava: You are the Lord of ThiruchchendhUr whose greatness is enormous.

naNpu tharukuRa mangai vAzhvAm puyanE: Your shoulders are the refuge for VaLLi, the damsel of the KuRavAs, showering her love on You.

saravaNa kantha muruga kadampa: Oh Saravanabhava, KandhA and MurugA, wearing the garland of kadappa flowers!

thanimayil koNdu pArchUzhnthavanE: You mounted the unique peacock and flew around the world!

sudarpadar kunRu thoLaipada: The bright and luminous Mount Krouncha was pierced,

aNdar thozhavoru sengai vElvAngiyavA: and the celestials worshipped as You wielded the Spear from Your matchless reddish hand!

thurithapathanga irathaprasaNda: Your chariot is nothing but the speediest bird, the Peacock, Oh Warrior!

sorikadal ninRa chUrAn thakanE.: When SUran stood (as a mango tree) in the midst of wavy seas, You became his God of Death!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 48 kudarniNa menbu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]