திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 30 அனைவரும் மருண்டு (திருச்செந்தூர்) Thiruppugazh 30 anaivarummaruNdu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அனைவரு மருண்டு அருண்டு ... (எனக்குவந்த நோயைக் கண்டு) யாவரும் பயந்து மனம் குழம்பி, கடிதென வெகுண்டி யம்ப ... விரைவில் அகலுக என்று என்னை அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும், அமரஅடி பின்தொடர்ந்து ... விடாது நெருங்கி அவர்களின் அடியின் பின்னே தொடர்ந்து, பிணநாறும் அழுகுபிணி கொண்டு ... பிணம்போல் நாறும், அழுகிப் போன நிலையில் நோய் முற்றி, விண்டு புழுவுடன் எலும்பு அலம்பும் ... வெளிவரும் புழுக்களுடன் எலும்புகள் நிலைகுலையும் அவல உட லஞ்சுமந்து தடுமாறி ... துன்பமிகு உடலைச் சுமந்து தடுமாற்றத்தை அடைந்தும், மனைதொறும் இதம்பகர்ந்து ... வீடுகள் தோறும் போய் இதமான மொழிகளைக் கூறி, வரவர விருந்தருந்தி ... நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு, மனவழி திரிந்து மங்கும் வசைதீர ... மனம் போன போக்கில் திரிந்து அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு, மறைசதுர் விதந்தெரிந்து வகை ... நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து முறைப்படி, சிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று பெறுவேனோ ... சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ? தினைமிசை சுகங் கடிந்த புனமயில் ... தினை மீதிருந்த கிளிகளை ஓட்டிய மயில் போன்ற வள்ளியின் இளங்குரும்பை திகழிரு தனம்புணர்ந்த திருமார்பா ... இளம் தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே, ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு ... உலகம் முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு தந்தை சிவனாரின் முன்னிலையில், திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா ... வட்டமாக வலம் வந்த செம்பொன் மயில் வீரனே, இனியகனி மந்தி சிந்து மலைகிழவ ... இனிய பழங்களைக் குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே, செந்தில் வந்த இறைவகுக கந்த என்றும் இளையோனே ... திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளமையோடு இருப்பவனே, எழுகடலும் எண்சிலம்பும் நிசிசரருமஞ்ச ... ஏழு கடல்களும், அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி, அஞ்சும் இமையவரை யஞ்ச லென்ற பெருமாளே. ... பயம் கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.146 pg 1.147 pg 1.148 pg 1.149 WIKI_urai Song number: 50 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 30 - anaivarum maruNdu (thiruchchendhUr) anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba amara a dipintho darnthu ...... piNanARum azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambu mavalavu dalanju manthu ...... thadumARi manaithoRu mithampa karnthu varavara viruntha runthi manavazhi thirinthu mangum ...... vasaitheera maRaicathur vithanthe rinthu vakaiciRu cathangai konju malaradi vaNanga enRu ...... peRuvEnO thinaimisai cukanka dintha punamayi liLanku rumbai thikazhiru thanampu Narntha ...... thirumArbA jegamuzhu thumunpu thumpi mukavano duthanthai munpu thikiriva lamvantha cempon ...... mayilveerA iniyaka nimanthi cinthu malaikizha vacenthil vantha iRaivagu kakantha enRu ...... mizhaiyOnE ezhukada lumeNci lambum nicicararu manja anju mimaiyava raiyanja lenRa ...... perumALE. ......... Meaning ......... anaivaru maruNda ruNdu: All the people who saw me were scared and dismayed (looking at my disease); kadithena vegunNdi yamba: even though they chased me away in disgust and anger; amara adipintho darnthu: I persisted and followed their footsteps. piNanARum azhugupiNi koNdu: My body was rotting from the disease, stinking like a corpse, viNdu puzhuvuda nelumba lambum: with worms oozing out and the bones shaking. avalavu dalanju manthu thadumARi: I carried this miserable tottering body everywhere, manaithoRu mithampa karnthu: going from door to door and saying flattering things. varavara viruntha runthi manavazhi thirinthu: Day after day, I went to new places for my feast, roaming at my will. mangum vasaitheera: To put an end to this scandal of my deterioration, maRaicathur vithanthe rinthu vakai: I must learn the essence of the four VEdAs and properly ciRu cathangai konju malaradi vaNanga enRu peRuvEnO: pay my obeisance to Your lotus feet adorned with lilting anklets. Will I ever be able to do that? thinaimisai cukanka dintha punamayil: VaLLi, looking like a peacock, was engaged in guarding the millet-field by scaring away the parrots; iLanku rumbai thikazhiru thanampu Narntha thirumArbA: with Your broad chest, You hugged her two bosoms that were blooming like tender coconuts. jegamuzhu thumunpu thumpi mukavano duthanthai munpu thikiriva lamvantha: Once, in the presence of Your Father, You went around the entire universe in a circular orbit, in competition with the elephant-faced Ganapathi; cempon mayilveerA: You are the valorous one who mounted the beautiful peacock of reddish golden hue! iniyaka nimanthi cinthu malaikizhava: You belong to all mountains where monkeys strew about sweet fruits! centhil vantha iRaivagu kakantha enRum izhaiyOnE: Your abode is ThiruchchendhUr, Oh Lord! GuhA! KanthA! You are ever youthful! ezhukada lumeNci lambum nicicararum anja: The seven seas, the eight mountains and the demons were all terrified anjum imaiyavarai yanjalenRa perumALE.: while You gave refuge to the petrified Celestials by saying "Fear Not", Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |