திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) Thiruppugazh 28 aRivazhiyamayalperuga (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா ......... பாடல் ......... அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக ...... அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை ...... யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர ...... மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அறிவழிய ... அறிவு மங்கிப் போகவும், மயல் பெருக ... மயக்கம் பெருகவும், உரையுமற ... பேச்சும் அடங்கிப் போகவும், விழிசுழல ... கண்கள் சுழலவும், அனலவிய ... உடம்பின் சூடு தணியவும், மலமொழுக ... மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், அகலாதே அனையுமனை அருகிலுற ... நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து வெருவியழ ... பயந்து அழ, உறவுமழ ... உறவினரும் அழ, அழலினிகர் மறலி ... நெருப்பை நிகர்த்த கொடிய யமன் யெனை அழையாதே ... என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, செறியுமிரு வினை ... என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), கரண மருவுபுலன் ... என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிய ... ஒழிந்து நீங்கும்படியாக, உயர் திருவடியில் அணுக ... உன் உயர்ந்த திருவடிகளை அணுக வரம் அருள்வாயே ... எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனைநிகர் ... சிவனுக்கு ஒப்பான பொதியவரை முனிவன் ... பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) அகமகிழ ... உள்ளம் மகிழ இரு செவிகுளிர ... அவனது இரண்டு செவிகளும் குளிர, இனியதமிழ் பகர்வோனே ... இனிய தமிழை ஓதியவனே நெறிதவறி ... தத்தமக்கு உண்டான வழி தவறி அலரிமதி நடுவன் ... சூரியன், சந்திரன், யமன், மகபதி முளரி ... இந்திரன், அக்கினி, நிருதி நிதிபதி ... நிருதி, குபேரன், கரிய வனமாலி ... கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலவுமறை ... நிலைத்த பிரமன், அவனிவர்கள் அலைய ... ஆகியவர்கள் அலையும்படி அரசுரிமை புரி ... (கொடிய) ஆட்சி புரிந்த நிருதனுரம் அற ... அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி அயிலை விடுவோனே ... வேலைச் செலுத்தியவனே மறிபரசு கரமிலகு ... மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமனுமை இருவிழியு ... பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் மகிழமடி மிசை ... உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளையோனே ... வளரும் இளைய குமாரனே மதலைதவழ் உததியிடை ... கப்பல்கள் தவழும் கடலிடையே வருதரள மணி ... வருகின்ற முத்து மணிகள் புளின மறையவுயர் ... மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த கரையிலுறை பெருமாளே. ... (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.144 pg 1.145 pg 1.146 pg 1.147 WIKI_urai Song number: 49 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 28 - aRivazhiya mayalperuga (thiruchchendhUr) aRivazhiya mayalperuga uraiyumaRa vizhisuzhala analaviya malamozhuga ...... agalAdhE anaiyumanai arugiluRa veruviyazha uRavumazha azhalinigar maRaliyenai ...... azhaiyAdhE seRiyumiru vinaikaraNa maruvupulan ozhiyavuyar thiruvadiyil aNugavaram ...... aruLvAyE sivanainigar podhiyavarai munivanaga magizhairu sevikuLira iniyathamizh ...... pagarvOnE neRithavaRi alarimadhi naduvanmaga pathimuLari nirudhinidhi pathikariya ...... vanamAli nilavumaRai avanivargaL alaiyaara surimaipuri nirudhanuram aRaayilai ...... viduvOnE maRiparasu karamilagu paramanumai iruvizhiyu magizhamadi misaivaLarum ...... iLaiyOnE madhalaithavazh udhadhiyidai varutharaLa maNipuLina maRaiyavuyar karaiyiluRai ...... perumALE. ......... Meaning ......... aRivazhiya: Losing my consciousness, mayalperuga: feeling more and more dizzy, uraiyumaRa: being unable to utter a word, vizhisuzhala: with a spinning vision, analaviya: with body heat declining rapidly and malamozhuga: with an involuntary discharge of faeces, (laid up in my death-bed); agalAdhE anaiyumanai arugiluRa: and without leaving my side, my mother and wife veruviyazha: crying uncontrollably, uRavumazha: and all relatives too sobbing, azhalinigar maRali: God of death, as fierce as fire, yenai azhaiyAdhE: is coming to take my life away. (To stop him and) seRiyumiru vinai: (to destroy) my closely-knit karma (both good and bad deeds), karaNa maruvupulan ozhiya: and to do away with my mind and sensory organs, vuyar thiruvadiyil aNuga: I have to reach Your exalted, venerable feet. varam aruLvAyE: Kindly grant me that boon! sivanainigar: Equal in status to Sivan, podhiyavarai munivan: was the sage from the Mount Pothikai (Agaththiyan); aga magizha: he was elated when iru sevikuLira: both his ears were filled with pleasure iniyathamizh pagarvOnE: with Your teaching of sweet Tamil! neRithavaRi: (The following strayed from their path:) alarimadhi naduvan: The Sun, the Moon, Yaman (Death-God), magapathi muLari: IndrA, Agni (Fire God), nirudhi nidhipathi: Niruthi (God of all Directions), KubEran (God of Wealth), kariya vanamAli: dark Vishnu (who wears Tulasi garland), nilavumaRai: stable BrahmA (in charge of VEdAs) and avanivargaL alaiya: others wandering hither and thither due to arasurimai puri nirudhan: misrule by Asura (SUran); uram aRa: his heart was split by ayilai viduvOnE: the Spear that was wielded by You! maRiparasu karamilagu paraman: Sivan, who holds in His hands a deer and a pickaxe, umai iruvizhiyu magizha: and UmA were both overjoyed with beaming eyes when madi misaivaLarum iLaiyOnE: You climbed on their laps playfully, Oh, Young One! madhalaithavazh udhadhiyidai: From the Great Sea in which ships sail varutharaLa maNi: come to the shore a lot of pearls and gems puLina maRaiyavuyar: which are hidden by the shoreline rising to a mount at karaiyiluRai perumALE.: (ThiruchchendhUr) Your favourite abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |