திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 15 தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்) Thiruppugazh 15 thadakkaippangkayam (thirupparangkundRam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் ......தனதான ......... பாடல் ......... தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தடக்கைப் பங்கயம் ... உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடைக்குக் கொண்டல் ... கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தண்டமிழ்க்குத் தஞ்சமென்று ... தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகோரைத் தவித்துச் சென்றிரந்து ... உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து உளத்திற் புண்படும் ... மனம் நொந்து புண்ணாகி தளர்ச்சிப் பம்பரந்தனை ... தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, ஊசற் கடத்தை ... உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பமண் சடத்தை ... துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, துஞ்சிடுங் கலத்தை ... அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, பஞ்சஇந்த்ரிய வாழ்வை ... ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, கணத்திற் சென்று இடம் திருத்தி ... நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, தண்டையங் கழற்கு ... வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டுகொண் டருள்வாயே ... தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கப் பங்கயன் ... படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், துடைக்கச் சங்கரன் ... அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், புரக்கக் கஞ்சைமன் ... காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் பணியாகப் பணித்து ... என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, தம்பயந் தணித்து ... அவரவர் பயங்களைப் போக்கி, சந்ததம் பரத்தைக் கொண்டிடும் ... எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் தனிவேலா ... ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் ... மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே ... உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறப்பொற் கொம்பைமுன் ... குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. ... தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.58 pg 1.59 WIKI_urai Song number: 11 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 15 - thadakkaip pangkayam (thirupparangkundRam) thadakkaip pangayam kodaikkuk kondalthaN thamizhkku thanjamen ...... drulagOrai thaviththu chendriran dhuLaththiR puNpadum thaLarcchip bambaran ...... dhanaiyUsaR kadaththai thunbamaN chadaththai thunjidum kalaththaip panchain ...... dhriyavAzhvai kaNaththiR chendridan thiruththi thaNdayang kazhaRkku thoNdukoN ...... daruLvAyE padaikkap pangayan thudaikka sankaran purakkak kanjaiman ...... paNiyAga paNiththu thambayan thaNiththu santhatham paraththai koNdidun ...... thanivElA kudakku thenparam poruppil thangumang kulaththiR gangaithan ...... chiRiyOnE kuRappoR kombaimun punaththiR senkaram kuviththu kumbidum ...... perumALE. ......... Meaning ......... thadakkaip pangayam: "Your hands are like lotus flowers, kodaikkuk kondal: and you give alms like the cloud showers rain; thaNthamizhkku thanjam: and you are the benefactor of Tamil poets" - endr ulagOrai thaviththu chendrirandhu: with these words, I go after people in the world beseeching them for alms, uLaththiR puNpadum thaLarcchip pambaran dhanai: and get deeply humiliated and hurt; such a spinning top am I! UsaR kadaththai: I am an earthen pot containing spoiled foodstuff inside! thunbamaN chadaththai: I am a miserable stupid fool! thunjidum kalaththai: I am also like a fragile vessel ready to break! pancha in dhriyavAzhvai: I lead a life fully dictated by my five sensory organs! kaNaththiR chendridan thiruththi: You have to come to my rescue at a moment's notice to fix my mind and thaNdayang kazhaRkku thoNdukoN daruLvAyE: bless me to serve Your two feet adorned by victorious anklets. padaikkap pangayan thudaikka sankaran: For Creation, You chose BrahmA on the Lotus; for Destruction, You appointed Sankaran; and purakkak kanjaiman: for Protection, You nominated Vishnu, consort of Lakshmi; paNiyAga paNiththu thambayan thaNiththu: after allocating these duties to them, You put their concerns to rest and santhatham paraththai koNdidun thanivElA: You presided over the Cosmic Sky at all times, Oh, Lord with the unique spear! kudakku thenparam poruppil thangum: You reside at the beautiful mountain in ThirupparangkundRam, West of Madhurai! angkulaththiR gangaithan chiRiyOnE: You are the son of Ganga, belonging to the great lineage of rivers! kuRappoR kombaimun punaththiR: You sought VaLLi, the damsel of KuRavAs, at the millet field senkaram kuviththu kumbidum perumALE.: and joined Your lovely hands to prostrate to her, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |