திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை) Thiruppugazh 6 muththaiththaru (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான ......... பாடல் ......... முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே, சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்** சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே. |
குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது. |
* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார். |
** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.34 pg 1.35 pg 1.36 pg 1.37 WIKI_urai Song number: 1 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி ஜானகி Singapore S. Janaki பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'திருத்தணி' திரு சாமிநாதன் 'ThiruththaNi' Thiru SAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
சுகந்திஸ்ரீ Ms Sughandhisri K. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 6 - muththaiththaru (nUl) muththaiththaru paththith thirunakai aththikkiRai saththis saravaNa muththikkoru viththuk gurupara ...... enavOthum mukkatpara maRkuc churuthiyin muRpattathu kaRpith thiruvarum muppaththumu varkkath thamararum ...... adipENap paththuththalai thaththak kaNaithodu otRaikkiri maththaip poruthoru pattappakal vattath thikiriyil ...... iravAkap paththaRkira thaththaik kadaviya pachchaippuyal mechchath thakuporuL patchaththodu ratchith tharuLvathum ...... orunALE thiththiththeya oththap paripura nirththappatham vaiththup payiravi thikkotkana dikkak kazhukodu ...... kazhuthAdath thikkuppari attap payiravar thokkuththoku thokkuth thokuthoku chithrappavu rikkuth thrikadaka ...... enavOthak koththuppaRai kottak kaLamisai kukkukkuku kukkuk kukukuku kuththipputhai pukkup pidiyena ...... muthukUkai kotputRezha natpatR RavuNarai vettippali yittuk kulakiri kuththuppada oththup poravala ...... perumALE. ......... Meaning ......... muththaiththaru paththith thirunakai aththikkiRai: "You are the Consort of DEvayAnai* with a beautiful smile and lovely teeth looking like pearls! saththis saravaNa: You are SaravaNabhava holding the powerful spear called SakthivEl! muththikkoru viththuk gurupara: You are the foremost seed for the Heaven" - enavOthum mukkatpara maRku: so praises Lord SivA, with three eyes (the Sun, the Moon and the Fire-Agni); suruthiyin muRpattathu kaRpiththu: to that SivA, You preached the fundamental ManthrA OM dating earlier than the VEdAs iruvarum muppaththumu varkkath thamararum adipENap: while the other two of the Trinity (BrahmA and Vishnu), along with thirty-three crores of DevAs, watched (Your preaching) and worshipped Your feet! paththuththalai thaththak kaNaithodu: He shot an arrow to scatter the ten heads of RAvaNA (RAmAvathAram); otRaikkiri maththaip poruthoru: He churned the milky ocean with the incomparable Mount Manthara (KUrmAvathAram); pattappakal vattath thikiriyil iravAka: He hid the Sun with His ChakrA (disc) in daytime making it night (KrishnAvathAram); paththaRkira thaththaik kadaviya: He drove the chariot for His friend and devotee, Arjunan (KrishnAvathAram); pachchaippuyal mechchath thakuporuL: and He is Lord Vishnu, the emerald-green and cloud-complexioned. You are His favourite! patchaththodu ratchith tharuLvathum orunALE: Will You be kind enough to come and protect me one of these days? (The second half of this song describes Murugan's war against the demons) thiththiththeya oththu: In accordance with the meter 'thiththiththeya', ap paripura nirththappatham vaiththup payiravi thikkotka nadikka: anklets in Her feet jingled as Bhairavi (KALi) danced fiercely moving in all the eight directions; kazhukodu kazhuthAda: the devils in the battlefield danced along with the eagles; thikkuppari attap payiravar: the eight bhairavAs** protecting all directions chithrappavu rikku thokkuththoku thokkuth thokuthoku thrikadaka enavOtha: choreographed for this unique dance in the meter of 'thokkuththoku thokkuth thokuthoku thrikadaka'; koththuppaRai kotta: a series of drums were beaten to the same tune; kaLamisai muthukUkai: in the battlefield, old vultures screamed kukkukkuku kukkuk kukukuku kuththipputhai pukkup pidiyena kotputRezha: 'kukkukkuku kukkuk kukukuku, stab and bury, attack and catch' and they kept revolving around the corpses, flying upwards in circles; natpatR RavuNarai vettippali yittu: the hostile demons (asuras) were killed en masse; and kulakiri kuththuppada: their mountain Krounchagiri was shattered into pieces oththup poravala perumALE.: when You fought the righteous war, Oh Great One! |
Note: The first few words were given to AruNagirinAthar by Murugan Himself to compose his first song. |
* As DEvayAnai symbolizes Kriyasakthi {Creative Power}, She was invoked to establish Karma yOgA in life. |
** The eight BhairavAs are: AsithAngan, KApAli, ChaNdan, Ururu, KurOthan, SankAran, PeedaNan, and Unmaththan. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |