![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்) Thiruppugazh 4 ninadhuthiruvadi (vinAyagar) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட ... (முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் ... நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி ... நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் ... ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ... மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒரு மகர சலநிதி வைத்த துதி கர ... ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக ... வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு ... அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு ... தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும்**, வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே ... (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் ... தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை ... திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் ... பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், நிரைய அரவ நிறைத்த களத்து இடை ... இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ ... திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட ... துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை ... டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட ... ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, இரண பயிரவி சுற்று நடித்திட ... ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. ... எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே. |
* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார். |
** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.30 pg 1.31 pg 1.32 pg 1.33 WIKI_urai Song number: v-5 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 4 - ninadhu thiruvadi (VinAyagar thuthi) ninadhu thiruvadi saththima yiRkodi ninaivu karudhidu buddhi koduththida niRaiya amudhusey muppazham appamu ...... nigazhpAlthEn nediya vaLaimuRi ikkodu laddugam niRavil arisi paruppaval etpori nigaril inikadha likkani vargamum ...... iLaneerum manadhu magizhvodu thottaka raththoru magara chalanidhi vaiththathu dhikkara vaLaru karimuga otRaima ruppanai ...... valamAga maruvu malarpunai thoththira soRkodu vaLarkai kuzhaipidi thoppaNa kuttodu vanasa paripura poRpadha arcchanai ...... maRavEnE thenana thenathena theththena nappala siRiya aRupadha moyththudhi rappunal thiraLum uRusadhai piththani Nakkudal ...... seRimULai seruma udharani rappuse rukkudal niraiya aravani Raiththaka Laththidai thimidha thimithimi maththaLi dakkaigaL ...... jegajEjE enave thuguthugu thuththena oththugaL thudigaL idimiga voththumu zhakkida dimuda dimudimu dittime naththavil ...... ezhumOsai igali alagaigaL kaippaRai kottida iraNa bayiRavi sutruna diththida edhiru nisichara raibeli ittaruL ...... perumALE. ......... Meaning ......... ninadhu thiruvadi saththi mayiRkodi ninaivu karudhidu buddhi koduththida: (Oh Lord MurugA!) In order that I obtain the knowledge to meditate on Your hallowed feet, Spear, Peacock and Rooster, (I have to offer the following:) niRaiya amudhusey muppazham appamu nigazhpAl thEn: sweet porridge in abundance, three kinds of fruits, sweet rice-cake (appam), fresh milk, honey, nediya vaLaimuRi ikkodu laddugam niRavil arisi paruppaval etpori: long, twisted and round snack of fried rice (muRukku), sugarcane, sweetballs of lentil flour (laddu), colourful and bright rice, pulses, sesame seeds, puffed rice, nigaril inikadha likkani vargamum iLaneerum: matchless varieties of sweet plantain and tender coconuts - all such offerings manadhu magizhvodu thottaka raththu: are happily touched by those gracious hands; oru magara chalanidhi vaiththathu dhikkara: His famous trunk once dipped* into the milky ocean full of sharks; vaLaru karimuga otRai maruppanai valamAga: He is Lord GaNapathi, with a prominent elephant-face with a lone tusk; circumambulating Him, maruvu malarpunai thoththira soRkodu: I wish to pay my obeisance by offering His favourite flowers and praising Him with appropriate words of worship; vaLarkai kuzhaipidi thoppaNa kuttodu: with my hands lifted up, holding my ears, I wish to bend and offer my salutations after knocking with my knuckles either side of my forehead**; vanasa paripura poRpadha arcchanai maRavEnE: I shall never forget to offer flowers at the lotus feet of that Lord GaNapathi, wearing the anklets. thenana thenathena theththena nappala siRiya aRupadha moyththudhi rappunal: There was gushing blood on which swarmed little flies humming with the sound of "thenana thenathena theththena"; thiraLum uRusadhai piththani Nakkudal seRimULai: also there were a mass of flesh, intestines filled with bile juices, scattered brain tissues, seruma udharani rappu serukkudal: gaping stomachs with exposed livers and large intestines niraiya aravani Raiththaka Laththidai: along with a series of loud noises in the battlefield; thimidha thimithimi maththaLi dakkaigaL jega jE jE enave: the double-barrel drums made the noise of "thimidha thimithimi"; the left-handed drums (called idakkai) sounded "jegajega jE"; thuguthugu thuththena oththugaL thudigaL idimiga voththu muzhakkida: the trumpets and the hand-drums together made the thunderous noise of "thuguthugu thuththe"; dimuda dimudimu dittim naththavil ezhumOsai: the percussion instruments sounded like "dimuda dimudimu dittim"; igali alagaigaL kaippaRai kottida: the devils who fought among themselves beat the drums with their hands; iraNa bayiRavi sutruna diththida: RaNa Bhairavi (Goddess of the Devils) in the battlefield danced all around edhiru nisichara raibeli ittaruL perumALE.: when You slaughtered all the confronting demons, Oh Great One! |
* When the milky ocean was churned for nectar, the axis -Mount Manthara- sank; to support it, Lord VishNu assumed the form of a tortoise and held the axis. After the event, the tortoise became arrogant and uncontrollable. The ocean rose wildly. To tame the tortoise, Lord SivA commanded VinAyagA who overpowered VishNu's form and also drank the entire ocean through His trunk. |
** Once, Sage Agasthya was doing a penance. VinAyagA took the form of a crow and playfully tilted the sage's holy water jug from which River KAvEri emanated. As his penance was disrupted, the sage was angry and looked at the crow which changed into a little Brahmin boy who began to run. When the sage caught up with him, squeezed his ears and was about to hit his head with knuckles, Lord GanEshA appeared. Realising this, Agasthya began to hit his own head with knuckles. GanEshA stopped him and declared that whoever offers to hold one's own ears, bend down before His shrine in obeisance and hit own forehead with one's knuckles will be blessed with wisdom and true knowledge. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
![]() If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |