முருகனுக்கான Poems for |
---|
சமய மாலை Samaya MAlai |
முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம் Ki Aa Visuvanadham | English | பட்டியல் தேடல் list search |
முன்னுரை சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது. இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக்குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத்தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான். துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும். ...... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம். (சிங்கப்பூர் .. ஸ்ரீ ரூத்ர காளியம்மன் ஆலயத் தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்கு நன்றி). பாடல் சீருலவுந் தென்பழநித் தண்டா யுதபாணிப் பேருலவும் மாலைதனைப் பிரபஞ்சத் திற்பாடப் பாருலவும் மேருதனிற் பாரதத்தை நேர்வரைந்து காருலவுந் தொந்திக் கணபதிதாள் காப்பாமே ! ...... 1 வையாபுரி நாட்டில் வளர்ந்திடுமென் அய்யனுக்கு அய்யாயிரஞ் சரணம் அடிபணிந்து தெண்டனிட்டேன் மெய்ஞ்ஞான தேசிகனே ! வேலாயுதம் படைத்த வையாபுரிக் கரசே ! வருவாய் இதுசமயம். ...... 2 ஆறாறு நூறாரு அஷ்ட மங்கலஞ் சூழ்ந்த வீரா சிவகிரியின் வேலா யுதச்சாமி சூராதி படைவென்ற சுப்பையா இப்போது வாரா திருப்பதென்ன? வருவாய் இதுசமயம். ...... 3 தஞ்சமென்றே நின்பதத்திற் சரணம் புகுந்த என்றன் நெஞ்சிற் கவலையெல்லாம் நீதீர்க்க வேணுமையா ! அஞ்சலென்று வந்தவர்க்கு ஆதரவு சொல்லுமிப்போ மஞ்சரி மணவாளா ! வருவாய் இதுசமயம். ...... 4 மங்கை நகரதனில் மறையோதும் வேதியராய் அங்கசனைக் காய்ந்த அரனார் திருமகனே ! சங்கர நாராயணர் சொல் சண்முகனே கந்தையா மங்கை வள்ளி பங்காளா ! வருவாய் இதுசமயம். ...... 5 ஏன்தான் முருகா இரக்கமில்லையோ உனக்கு? நான்தான் உரைப்பதுவும் நற்செவியிற் கேட்கிலையோ? சார்ந்தோடும் வாவித் தடாகமும் வையாபுரியின் மாந்தோப்பும் விட்டு வருவாய் இதுசமயம். ...... 6 ஜெகமே அளந்த அருள்திருமால் மருகனே ! அகமே உருகுதையா ஆற்றுதற்கு நீயிரங்காய் குகனே முருகையா குழந்தையைத் தேடியிப்போ மகனே ! எனஓடி வருவாய் இதுசமயம். ...... 7 சின்னவய தென்றனது சிந்தை மெலிவதற்கு என்னவிதிப் பயனோ ஏதறிய மாட்டேன்கேள் ! உன்னையே யான்துதித்து உன்பாத மேபணிய வண்ணமயி லேறியே வருவாய் இதுசமயம். ...... 8 தீராத நோய்களையும் தீர்த்துமே ஆளாக்கி மாறாத செல்வமுறும் வரமெனக்கு நீயருளி ஓராறு முகங்குளிர உத்தரவு நீகொடுக்க வாராயோ கந்தா ! வருவாய் இதுசமயம். ...... 9 |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |