முருகனுக்கான Poems for |
---|
ஷண்முக நாயகன் தோற்றம் Shanmuga NAyagan thOtRam |
| English | பட்டியல் தேடல் list search |
(ஷண்முக நாயகன் தோன்றிடுவான் ... சிவ ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம் ... கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம்) (ஷண்முக ......) ஆனந்த மாமலர்ச் சோலையிலே ... மன ஆட்டம் அடங்கிய வேளையிலே ஞானம் தரும் தென்றல் காற்றினிலே ... எழும் நாம ஸங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக ......) பக்குவாம் தினைக் காட்டினிலே ... அவன் பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே ... அருள் மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக ......) தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே ... அவன் சுற்றிச் சுழண்றிடும் ஆட்டத்திலே அண்டர் தினந்தொழும் வானத்திலே ... தவ ஆன்மா சுகம்பெரும் மோனத்திலே (ஷண்முக ......) ஏழைக் கிரங்கிடும் சித்தத்திலே ... பொருள் ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே ஊழைக் கடப்பவர் பக்தியிலே ... தெய்வ உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக ......) வேதாந்தத் தத்துவ சாரத்திலே ... அலை வீசும் செந்தூர்கடல் தீரத்திலே ஆதாரக் குண்டலி யோகத்திலே ... பர ஆத்மா ஜீவாத்மா வைபோகத்திலே (ஷண்முக ......) அன்பர் இயற்றிடும் சோலையிலே ... உயர் அர்ச்சனையாய் மலர் தூவையிலே இன்பப் பெரும் புனல் வீழ்ச்சியிலே ... காணும் யாவும் ஒன்றென்றெனக் காசியிலே (ஷண்முக ......) நன்னும் இயற்கை அமைப்பினிலே ... ஒளி நட்சத்திரங்களின் இமைப்பினிலே விண்ணில் விரிந்துள்ள நீலத்திலே ... மயில் மேல் வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக ......) தேகவிசாரம் மறக்கையிலே ... சிவ ஜீவ விசாரம் பிறக்கையிலே ஆகும் அருட்பணி செய்கையிலே ... கங்கை ஆறு கலந்திடும் பொய்கையிலே (ஷண்முக ......) மானாபிமானம் விடுக்கையிலே ... தீப மங்கள ஜோதி எடுக்கையிலே ஞானானு பூதி உதிக்கையிலே ... குரு நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக ......) ஆடிவரும் நல்ல நாகத்திலே ... அருள் ஆரெழுத்தின் ஜெப வேகத்திலே கோடி வரம்தரும் கோவிலிலே ... தனை கும்பிடுவார் மனை வாயிலிலே சித்தரின் ஞானாவிவேகத்திலே ... அவர் செய்திடும் தேனாபிஷேகத்திலே உத்தமமான விபூதியிலே ... அதன் உட்பொருளாம் சிவ ஜோதியிலே அன்னை மடித்தள பிள்ளையவன் ... சச்சி தானந்த நாட்டினிக் கெல்லை அவன் பண்ணும் ஏகாந்தர போதனவன் ... மலர் பாதன் அவன் குருநாதனவன் செல்வமெல்லாம் தரும் செல்வனவன் ... அன்பர் சிந்தைக் கவர்ந்திடும் கள்வனவன் வெல்லும் செஞ்சேவற் பாதகை ... உயர்த்திய வீரனவன் அலங்காரனவன் சேர்ந்தவர்க்கென்றும் சகாயனவன் ... இன்பத் தூயனவன் அன்பர் நேயனவன் சேர்ந்தவரைத் தூரத்தாண்டியுமாய் ... நின்ற சீலனவன் வள்ளி லோலனவன் அஞ்சுமுகத்தின் அருட்சுடராய் ... வந்த ஆறுமுகப் பெருமானுமவன் மிஞ்சிடும் அஞ்செழுத்தாரெழுத்தாய் ... வந்த வேந்தைகொள் ஞானக் குழந்தையவன் முத்தொழிலாற்றும் முதற்பொருளாம் ... ஆதி மூலசதா சிவ மூர்த்தியவன் இத்தனை உண்மை மறந்தவனை ... சிறை இட்டவனாம் பின்னர் விட்டவனாம் வள்ளிதெய்வானை மணாளனவன் ... மனம் மாலைகொள் ஆறிரு தோளனவன் அள்ளியணைப்பவர் சொந்தமவன் ... புகழ் ஆகம நான்மறை அந்தமவன் கோலமுடன் காலை மாலையிலும் ... இரு கோளங்கள் வானில் வரப் புரிவான் ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே ... எந்தன் உள்ளத்திலே கவி ஊற்றிடுவான் பேர்களெல்லாம் அவன் பேர்களன்றோ ... சொல்லும் வேதமெல்லாம் வெரும் வாதமன்றோ சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால் ... வினை தாண்டிடெல்லாம் உலகாண்டிடெல்லாம் கும்பமுனிக்கருள் நம்பியவன் ... அன்பு கொண்ட கஜானனன் தம்பியவன் கும்பையணிந்தவன் கண்டு ... கண்டின்புரும் ஜோதியவன் பரஞ்ஜோதியவன். (ஷண்முக ......). |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |