| ......... முன்னுரை .........
முருகனின் மயில் பிரணவ மந்திர ரூபம்.
ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில் ..
... என்பார் அருணகிரியார் சோலைமலைத் திருப்புகழில். ('வாதினையடர்ந்த' - பாடல் 1318).
விந்து சக்தியாகிய சகல ஒலிக்கும்/ஒளிக்கும் மூல காரணமாகிய மஹா மாயையே மயில். மாயை அகல வேண்டும் என்றால் நாம் மயிலை போற்ற வேண்டும். அது மாயையை நீக்கிவிடும். வினை ஓடிவிடும் கதிர் வேலால். மாயை நீங்கும் மயிலால்.
இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி திருத்தும் எனமயில் விருத்த மொழிவன
... எனப் பேய்கள் மொழிவதாக பொருகளத் தலகை வகுப்பில் என்பார் அருணை முனிவர். அதாவது, 'மரணம் நீங்கி, மேன்மேலும் வருகின்ற ஏழு வகையான பிறப்புக்களும் அகன்று, பேரின்ப நிலையாகிய சாயுச்சியப் பதவியைத் தரும்' என எண்ணி, பேய்களும் மயில் விருத்தத்தைப் போர்க்களத்தில் பாராயணம் செய்கின்றன. அப்படி இருக்கையில் மயில் விருத்தம் மனிதர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். இதன் பலனை கடைசி விருத்தத்திலும்,
.. அழியா வரம் பெறுவரே ..
... என்பார்.
| |