Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 96 - திருக்கையம் போதி
Kandhar andhAdhi - thirukkaiyam bOdhi
Kandhar andhAdhi - thirukkaiyam bOdhi    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.267  pg 4.268 
 WIKI_urai Song number: 96 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 96 ... திருக்கையம் போதி   (கண் நயந்துரைத்தல்)

......... பாடல் .........

      திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
      திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
      திருக்கையம் போருகக் கைந்நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
      திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே ...... 96

......... சொற்பிரிவு .........

திருக்கை அம்போதிகளோ, கஞ்சமோ, நஞ்சமோ, திருமால்

திருக்கை அம்போ, செய்ய வேலோ, விலோசனம் தென்னன்

அங்கத்தருக்கை அம்போருக கைந்நீற்றின் மாற்றி தென்னூல்

சிவபத்தி ஐயம் போக உரைத்தோன் சிலம்பில் சிறுமிதற்கே.

......... பதவுரை .........

திருக்கை ... திருக்கை என்னும் மீன்கள் வாழும்,

அம்போதிகளோ ... கடல்களோ?

கஞ்சமோ ... தாமரைகளோ?

நஞ்சமோ ... விடமோ?

திருமால் திருக்கை அம்போ ... மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ?

செய்ய வேலோ ... சிவந்த வேலாயுதமோ?

விலோசனம் ... கண்,

தென்னன் ... கூன் பாண்டியனின்

அங்கத்திருக்கை ... முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை,

அம்போருக ... தாமரை போன்ற,

கை நீற்றின் ... தன் திருக்கையில் தரித்த விபூதியினால்,

மாற்றி ... நேர்படச் செய்தவரும்,

தென்னூல் ... தமிழ் நூலாகிய,

சிவ பத்தி ... சிவ பக்தியை உண்டாக்கும்,

ருக்கு ... ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை,

ஐயம் போக ... பர தெய்வம் யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து,

உரைத்தோன் ... சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய குமாரக்கடவுளின்,

சிலம்பில் ... மலையின்கண் வாழும்,

சிறுமிதற்கே ... இந்த இளம் பெண்ணின்

(விலோசம் ... கண்).

......... பொழிப்புரை .........

பாண்டியனின் கூனை திருநீறு பூசி மாற்றினவரும் எது உண்மையான சமயம் என்று தெரியாமல் இருக்கும் சந்தேகத்தைப் போக்கி சிவனே பரம் என்ற உண்மையை தன் தேவாரப் பாடல்களின் மூலமாக மொழிந்தருளி சம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானின் மலையில் வாழும் இந்தச் சிறுமியின் கண் ஆழ்ந்த கடலோ? அழகிய தாமரை மலரோ? விஷத்தைப் போன்று கூர்மை கொண்ட திருமால் தரித்திருக்கும் பாணமோ? அல்லது வேலாயுதமோ?

கந்தர் அந்தாதி - 96 - திருக்கையம் போதி
Kandhar andhAdhi - thirukkaiyam bOdhi
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thirukkaiyam bOdhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]