Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 31 - தீதா வசவனு
Kandhar andhAdhi - theedhA vasava nu
Kandhar andhAdhi - theedhA vasava nu    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.186  pg 4.187 
 WIKI_urai Song number: 31 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 31 ... தீதா வசவ னு   (ஜீவ கருணை)

......... பாடல் .........

      தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
      தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
      தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
      தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே ...... 31

......... சொற்பிரிவு .........

தீதா வசவு அனுபவிக்க மண்ணிலும் விண்ணிலும்

(செந்) தீ தாவு அச அனியாயம் செய் வேதியரே, தியங்கா

தீ தா வசவ நிமலர் செல்வா, சாக்கிர வசத்து

(அ) தீத வச அன்புறப்பாரெனும் முத்தி சித்திக்கவே.

......... பதவுரை .........

தீதா ... தீமையாகிய,

வசவு ... இழிச்சொல்,

அனுபவிக்க ... அனுபவிக்கும்படியாய்,

மண்ணிலும் ... பூலோகத்தில் புகழ் பெறவும்,

விண்ணிலும் ... தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி,

செந்தீ ... சிவந்த அக்னி தேவன்,

தா ... ஏறுகின்ற,

அச ... ஆட்டை,

அனியாயம் செய் ... கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற,

வேதியரே ... மறையோரே,

தியங்கா ... இனி அப்படி திகைக்காமல்,

தீ ... தெளிவான அறிவை,

தா ... தந்தருள்க என்று,

வசவ ... இடப வாகனத்தை உடைய,

நிமலர் ... சிவபிரானின்,

செல்வா ... மைந்தனே,

சாக்கிர வசத்து ... கருவி கரணங்கள் ஐவேலை செய்யும் விழிப்பு நிலையிலும்,

அதீதாவச ... அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும்,

அன்புறப்பார் எனும் ... உனக்கு எங்களிடத்தில் கிருபை உண்டாகி
கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்,

முத்தி ... மோட்சம்,

சித்திக்க ... உங்களுக்கு கிடைக்கும்படி.

......... பொழிப்புரை .........

இம்மையில் புகழையும் மறுமையில் இன்பத்தையும் பெற நினைத்து ஜீவ காருண்யம் இல்லாமல் ஆட்டை பலி கொடுத்து யாகம் செய்யும் அந்தணர்களே, முத்தி கிட்டவேண்டும் என்றால் சாக்கிர வஸ்திலும் துரிய வஸ்திலும் எங்களுக்கு நல்லறிவு உண்டாக எங்களிடத்தில் அன்புவைத்து அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கந்தர் அந்தாதி - 31 - தீதா வசவனு
Kandhar andhAdhi - theedhA vasava nu
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theedhA vasava nu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]