Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 30 - தெய்வ மணம்புணர்
Kandhar andhAdhi - dheiva maNampuNar
Kandhar andhAdhi - dheiva maNampuNar    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.185  pg 4.186 
 WIKI_urai Song number: 30 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 30 ... தெய்வ மணம்புணர்   (முருகனின் நாம விஷேசம்)

......... பாடல் .........

      தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
      தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
      தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
      தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே ...... 30

......... சொற்பிரிவு .........

தெய்வ மண் அம்பு உணர் தீ கால் வெளி செய்த தே வரைந்தது

எய்வ, மண் அம் புள் நராரிக்கு மருக, செச்சை அம் தார்

தெய்வ, மணம் புணரும் குழலாளை தினைபுனத்தே

தெய்வ மணம் புணர் கந்தன் என்னீர் உங்கள் தீது அறவே.

......... பதவுரை .........

தெய்வ ... மற்ற தேவர்களையும்,

மண் ... பூமி,

அம்பு ... நீர்,

உணர் ... அந்தக்கரணம்,

தீ ... நெருப்பு,

கால் ... காற்று,

வெளி ... ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும்,

செய்த ... படைத்த,

தே ... பிரம்ம தேவன்,

வரைந்தது ... நம்மேல் எழுதிய தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்),

எய்வ ... அழித்துவிடும். (அதனால்)

மண் ... மாசற்ற,

அம் ... அழகிய,

புள் ... கருட வாகனனாகிய,

நராரிக்கு மருக ... நரசிம்மரின் மருகனே,

செச்சையம்தார் தெய்வ ... வெட்சி மாலை அணிந்த தெய்வமே,

மணம் புணரும் ... நறுமணம் வீசும்,

குழலாளை ... கூந்தலையுடைய வள்ளியை,

தினைப்புனத்தே ... தினைப்புனத்தில்,

தெய்வ மணம் புணர் ... கந்தர்வ மணம் செய்துகொண்ட,

கந்தன் என்னீர் ... குமரக் கடவுளே என்று துதியுங்கள்,

உங்கள் தீது அநவே ... உங்கள் தீய வினை எல்லாம் ஒழியும்படி

......... பொழிப்புரை .........

மால் மருகனே, வெட்சி மாலை அணிந்தவனே, வள்ளியைய் தினைப்புனத்தில் மணந்தவனே, என்று துதித்தால் அது பிரம்ம லிபியை நீக்கிவிடும். தீவினைகள் எல்லாம் அற்றுப் போய்விடும்.

கந்தர் அந்தாதி - 30 - தெய்வ மணம்புணர்
Kandhar andhAdhi - dheiva maNampuNar
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - dheiva maNampuNar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]