Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 20 - செயதுங்க பத்தி
Kandhar andhAdhi - seyadhungka paththi
Kandhar andhAdhi - seyadhungka paththi    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.173  pg 4.174 
 WIKI_urai Song number: 20 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 20 ... செயதுங்க பத்தி   (முருகன் நம் மனத்தில் இருக்க)

......... பாடல் .........

      செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
      செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
      செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
      செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே ...... 20

......... சொற்பிரிவு .........

செய துங்கபத்திரி போற்றும் பகீரதி கர செவ்வேள்

செய துங்க பத்திரி சூடும் குறத்தி திறத்த தண்டம்

செய துங்க பத்தி ரிபு திரி பாதத்தர் செல்வ தென்பால்

செய் அதுங்கு அபத்து இரிய திரியாது இரு என் சிந்தையிலே.

......... பதவுரை .........

செய ... கீர்த்தி உடைய,

துங்கபத்திரி ... துங்கபத்திரி நதி,

போற்றும் ... வணங்குகின்ற,

பகீரதி ... கங்கையின்,

கர ... கையில் விளங்குபவனே,

செவ்வேள் செய ... சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே,

துங்க பத்திரி ... சுரபுன்னை இலையை,

சூடும் ... தரித்திருக்கும்,

குறத்தி திறத்த ... வள்ளியின் மணாளனே,

தண்டம் ... தண்டாயுதமும்,

செய ... வெற்றியும்,

துங்க ... உயர்ச்சியும்,

பத்தி ... ஒழுக்கமும் உடைய,

ரிபு ... (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை,

திரி ... அழியும்படி,

பாதத்தர் ... கால்களால் உதைத்த சிவ பிரானின்,

செல்வ ... மைந்தனே,

தென்பால் செய் ... தெற்கிலிருக்கும் எமபுரத்திற்கு அழைத்துப் போவதும்

அதுங்கு ... யாவராலும் ஒதுக்கப்பட்டதும்,

அபத்து ... ஆபத்துககள் நிறைந்ததுமாகிய வழியில்,

இரிய ... எனது மனம் முரிந்து,

திரியாது ... உழலாமல்,

இரு ... நீ இருக்க வேண்டும்,

என் சிந்தையிலே ... என் உள்ளத்தில்

......... பொழிப்புரை .........

துங்கபத்திரியால் வணங்கப்படும் கங்கையின் மைந்தனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுர புன்னை இலையை தரித்திருக்கும் வள்ளி மணாளனே, தண்டாயுதமும் கீர்த்தியும் ஒழுக்கமும் உடைய எமன் மார்கண்டேயரை பிடிக்க வரும் நேரத்தில் அவனை உதைத்து தண்டித்த சிவபெருமானின் குமாரனே, எமபுரத்திற்கு என்னைக்கொண்டு செல்லும் தீய வழியில் நான் ஒழுகாதபடி என் சித்தத்தில் நீ வீற்றிருக்க வேண்டும்.

கந்தர் அந்தாதி - 20 - செயதுங்க பத்தி
Kandhar andhAdhi - seyadhungka paththi
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seyadhungka paththi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]