Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 19 - சீயனம் போதி
Kandhar andhAdhi - seeyanam bOdhi
Kandhar andhAdhi - seeyanam bOdhi    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.172  pg 4.173 
 WIKI_urai Song number: 19 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 19 ... சீயனம் போதி   (பிரம்மனை கடிந்தது)

......... பாடல் .........

      சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
      சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
      சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
      சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே ...... 19

......... சொற்பிரிவு .........

சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்

சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்

சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்

சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.

......... பதவுரை .........

(ஸ்ரீயின்) சீயின் ... பார்வதியின் பாகராகிய சிவபெருமான்,

நம் ... நமக்கு,

போதி என் ... உபதேசம் செய்வாய் என்று கேட்டு,

வாய் புதைத்து ... பணிவுடன் வாயை மூடிக்கொண்டு,

செவிதர ... காதால் கேட்க,

தோல் ... யானைகளும்,

சீய ... சிங்கங்களும்,

நம்பு ... தஞ்சமாக உறைகின்றதும்,

ஓதிய ... கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய,

மலையின் ... பொதிக மலைக்கு,

தாதை ... தலைவனாகிய,

சிறுமுனிவன் ... அகத்திய முனிவனின்,

சீயன் ... பாட்டனாரும்,

அம்போதி கடைந்தான் ... பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின்,

மருகன் ... மருகனாகிய குமரக் கடவுள்,

செப்ப ... அப்போது உபதேசம் செய்ய,

திகைத்தார் ... தியக்கமுற்றிருந்தார்,

சீ ... மிகவும் கேவலமானது,

அனம்போதில் ... அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும்,

அரன் ... பிரம்மன்,

ஆதி ரிக்கு ... பழமையான வேதத்தை,

என் செயக் கற்றான்? ... எதற்காக கற்றுக் கொண்டான்?

......... பொழிப்புரை .........

பரமசிவனின் வேண்டுகோளுக்கு இரங்கி அகத்தியரின் பாட்டனாகிய திருமாலின் மருகன் முருகப்பெருமான் பிரணவ உபதேசம் செய்யும்பொழுது பொருள் புரியாமல் திகைத்திருந்த பிரம்மன் எதற்காக வேதத்தை கற்றுக் கொண்டான்?

கந்தர் அந்தாதி - 19 - சீயனம் போதி
Kandhar andhAdhi - seeyanam bOdhi
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seeyanam bOdhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]