![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| தண்ணீர் மலையே ThaNNeermalaiyE |
![]() | தண்ணீர்மலையடியான் Thanneermalaiyadiyaan | English | பட்டியல் தேடல் list search |
அலைகடலுக் கப்பாலே மலைநாட்டில் அமைந்திருக்கும் அழகான தண்ணி மலையே ! அலைபாயும் மனத்திடையே சிலநேரம் துதித்தாலும் அருள்வானே தண்ணி மலையே ! விலைபோட முடியாத மலையளவு வளங்கொண்ட வியன்பினாங்கு தண்ணி மலையைத் தலையாட மனமாடத் தமிழ்பாடித் துதிப்போர்க்குத் தலையாய செல்வம் வருமே ! கலம் ஏறிப் பினாங்குநகர் கண்டவர்கள் தமையெல்லாம் காப்பாற்றும் தண்ணி மலையே ! பலம்தந்து நிலம்தந்து பொருள்தந்து அருள்தந்து பாலிப்பான் தண்ணி மலையே ! மலைநாட்டில் அமைந்தவனை மனவீட்டில் கண்டவர்க்கு மயிலேறும் தண்ணி மலையான் ! கலையாத பெருவாழ்வும் நிலையான சுகவாழ்வும் கண்முன்னே கொண்டு தருவான் ! |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |