திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1092 அனகனென அதிகனென (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1092 anaganenaadhiganena (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான ......... பாடல் ......... அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென இருசதுர திசையிலுர ...... கமும்வீழ இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அனகனென அதிகனென ... பாபம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், அமலனென அசலனென ... மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், அபயனென அதுலனென ... அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், அநபாயன் அடல்மதனனென ... அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், விசையனென முருகனென ... வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், நெருடி யவர்பெயரு மிடைசெருகி யிசைபாடி ... இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர் ... பத்ம நிதி, சிந்தாமணி என்று கூறப்படும் ரத்தினம், சங்கநிதி, மேகம், காமதேநு, கற்பக விருட்சம் - இவைகளுக்கு கொடையில் ஒப்பான கை மகிபஎன தினையளவு உளவுமீயா ... கைகளை உடைய அரசனே நீ என்று, தினையளவும் உள்ள பொருளைக் கொடுக்காத மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய ... மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை நீங்கவும், மொழியொழிய மனமொழிய வொருபொருளை அருள்வாயே ... வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக. இனன் நிலவு தலைமலைய ... சூரியன், சந்திரன் இவர்களின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, அடியின் உகிர் இலைகளென ... காலின் நகங்கள் நொச்சி இலையைப் போலிருக்க, இருசதுர திசையில் உரகமும்வீழ ... எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும்* அஞ்சி கீழே விழ, இரணிய சயிலம் ரசித சயில மரகதசயிலமென ... பொன்மலை (மேரு), வெள்ளிமலை (கைலாயம்), மரகதமலை (ஈங்கோய் மலை), போல் விளங்குவதான வலிய உடலைக் கொண்டதாய், விமலை யமுனை யெனநிழல்வீசி ... விமலாதேவியின் (பார்வதியின்) திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையின் நீல நிற ஒளியை வீசி, ககனமழை யுகைகடவுள் உடலமென முதியவிழி கதுவி ... ஆகாயத்திலுள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட கடவுள் இந்திரனின் தேகம் என்று சொல்லும்படியாக உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்**, எழில் பொதியமிசை படர்கோலக் கலபகக ... அழகு நிரம்பி மேலே படர்ந்த தோகையைக் கொண்ட மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுடன் ... மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நாற்படைகளுடனும் அமர்பொருத பெருமாளே. ... போர் செய்த பெருமாளே. |
* இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.214 pg 3.215 pg 3.216 pg 3.217 WIKI_urai Song number: 1095 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1092 - anaganena adhiganena (common) anakanena athikanena amalanena asalanena apayanena athulanena ...... anapAyan adalmathana nenavisaiya nenamuruka nenanerudi yavarpeyaru midaiseruki ...... yisaipAdi vanasamaNi paNilamazhai surapisurar tharunikarkai makipaena thinaiyaLavu ...... LavumeeyA manitharkadai thoRumuzhalu midiyozhiya mozhiyozhiya manamozhiya voruporuLai ...... aruLvAyE inanilavu thalaimalaiya adiyinuki rilaikaLena irusathura thisaiyilura ...... kamumveezha iraNiyasa yilamrasitha sayilamara kathasayila menavimalai yamunai yena ...... nizhalveesik kakanamazhai yukaikadavu Ludalamena muthiyavizhi kathuviyezhil pothiyamisai ...... padarkOlak kalapakaka mayilkadavu nirutharkaja rathathuraka kadakamuda namarporutha ...... perumALE. ......... Meaning ......... anakanena athikanena: "You are sinless; You are the supreme; amalanena asalanena: You are without any blemish; You are immovable like a mountain; apayanena athulanena: You are fearless; You are matchless; anapAyan adalmathananena: You are free from perils; You are the strong God of Love; visaiyanena murukanena: You are like the valorous Arjun; and You are like Lord Muruga" - nerudi yavarpeyaru midaiseruki yisaipAdi: with these flattering words, and inserting the names of the people from whom alms were sought, songs were composed by me, set to music! vanasamaNi paNilamazhai: "You are the Lotus Treasure (Padmanidhi)! You are the gem of the heart (ChintAmaNi)! You are the Conch Treasure (Sanganidhi)! You are like the rain! surapisurar tharu: You are the wish-yielding KaRpaga Tree of the Celestial Land! nikar kai makipaena thinaiyaLavu uLavumeeyA: all these are comparable to Your charitable hands, Oh King!", I do not want to approach people who never give even a morsel of charity with these words. manitharkadai thoRumuzhalu midiyozhiya: To end my poverty that drives me to the doors of such misers, mozhiyozhiya manamozhiya voruporuLai aruLvAyE: to silence my speech and to calm down my mind into tranquility, kindly bless me with a unique word of Your preaching! inan nilavu thalaimalaiya: Its head shines like the sun and the moon; adiyin ukir ilaikaLena: Its claws in the paws are like the nochchi leaves; irusathura thisaiyil urakamumveezha: the famous snakes in all the eight directions* fall down scared at Its sight; iraNiya sayilam rasitha sayila marakathasayilamena: Its strong body is comparable to the golden mountain (Meru), the silver mountain (KailAsh) and the emerald-green mountain (EengOy); vimalai yamunai yenanizhalveesi: Its blue hue is like that of River Yamuna, originating from the hallowed hands of DEvi VimalA (PArvathi); kakanamazhai yukaikadavuL udalamena muthiyavizhi kathuvi: the many well-formed eyes on Its feather look like the eyes on the body of IndrA** whose vehicle is the cloud in the sky; ezhil pothiyamisai padarkOlak kalapakaka mayilkadavu: It is the beautiful Peacock with a majestically raised feather that is driven by You nirutharkaja rathathuraka kadakamudan amarporutha perumALE.: into the battlefield to fight the four divisions of the demons' armies, namely, the elephants, the chariots, the horses and the soldiers, Oh Great One! |
* The eight famous snakes are: VAsuki, Ananthan, Thakkan, SangapAlan, KuLigan, Padman, MahApadman and KArkkOdakan. |
** IndrA was cursed by Sage Gauthama to be infested with a thousand eyes all over his body; the well-formed eyes on the Peacock's feather are compared to IndrA's eyes. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |