|
2 ...... தாலப் பருவம்
அரைவடமும் தண்டையும் மின்புரை அரைமணியும் கிண்கிணியும் கலனணியும் மாறா வீறார் சீர்
அறுமுகமும் தொங்கல் சுமந்த பன்னிருகரமும் குண்டலமும் குழை அழகும் ஆரார் பாராதார்
விரைபொரும் மென்குஞ்சி அலம்பிய புழுதியும் அங்கம் குழை பண்டியும் மெலியும், மேலே வீழ்வார் பார்
வெகுவிதமும் கொண்டு தவழ்ந்திடில் அவரவர்தம் கண்கள் படும் பிழை வளையுமே தேன் ஏகாதே
வரைமணியும் தங்கமும் ஒன்றிய கனபரியங்கந்தனில் இன்று கண்வளர வாராய் வாழ்வே நீ
மணிநகையும் கொண்டு துயின்றிலை விரலமுதம் கொண்டு கிடந்தனை மதுரமாய் நீ பேசாயோ
திரைபொரு தென்செந்தில் வளம்பதி வளர வரும் கந்தா சிவன்பெறும் சிறுவா தாலோ தாலேலோ
திசைமுகனும் சங்கரியும் சதுர்மறையும் இறைஞ்சுபரை அம்பிகை சிறுவா தாலோ தாலேலோ.
| |