Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 94 - சேதிக் கனைத்து
Kandhar andhAdhi - sEdhik kanaiththu
Kandhar andhAdhi - sEdhik kanaiththu    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.264  pg 4.265 
 WIKI_urai Song number: 94 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 94 ... சேதிக் கனைத்து   (எமனை விரட்ட வேண்டும்)

......... பாடல் .........

      சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
      சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
      சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
      சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே ...... 94

......... சொற்பிரிவு .........

சேது இக்கனை துகளதாக்கும் நோக்கினன் செல்வ,

(செந்தில்) சே, திக்கு அனைத்தும் நிலை பெற சூர் அங்கம் சீரங்கம் மால்

சே திக்க நைத்து உவரி தோய் அயில் கொடு எற் சேர்க்க வந்தால்

சேதி கனைத்து வரு மா மறலி திறலினையே.

......... பதவுரை .........

சேதி இக்கனை ... சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை,

துகள தாக்கும் ... சாம்பலாகச் செய்த,

நோக்கினன் ... நெருப்பு விழியை உடைய சிவபெருமானின்,

செல்வ ... குமாரனே,

திக்கு அனைத்தும் நிலைபெற ... எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான நிலையை அடையவும்,

சீரங்கம் மால் ... ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின்,

சே ... குமாரனாகிய பிரம்மா,

திக்க ... திகைப்பை அடையவும்,

சூரங்கம் ... சூரபத்மாவின் உடலை,

நைத்து ... அழித்து,

உவரி தோய் ... பின்பு சமுத்திரத்தில் குளித்து வந்த,

அயில் கொடு ... வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு,

ஏற் சேர்க்க வந்தால் ... எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால்,

கனைத்து வரும் ... பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு,

மா ... எருமை வாகனத்தில் வரும்,

மறலி திறலினையே ... எமனுடைய வலிமைத் திறனை,

சேதி ... நீ கண்டித்து அடக்க வேண்டும்.

......... பொழிப்புரை .........

மன்மதனை எரித்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த குமாரனே, பிரம்மன் முதலிய தேவர்கள் எல்லாரும் திகைக்கவும், உலகெலாம் நிலைத்து விளங்கவும் சூரபத்மனை அழித்தவனே, என்னைப் பிடிக்க எமபடர்கள் வரும்பொழுது வேலாயுதத்தைக் கையில் ஏந்தி எமனுடைய வலிமையைத் தோற்கடிக்க வேண்டும்.

கந்தர் அந்தாதி - 94 - சேதிக் கனைத்து
Kandhar andhAdhi - sEdhik kanaiththu
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sEdhik kanaiththu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]