Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 82 - தென்றலை யம்
Kandhar andhAdhi - thendRalai yam
Kandhar andhAdhi - thendRalai yam    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.246  pg 4.247  pg 4.248 
 WIKI_urai Song number: 82 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 82 ... தென்றலை யம்   (காம மிக்க களிபடர் கிழவி)

(பிரிவாற்றாமையினால் பெரும் துன்பத்தை அடைந்த நாயகி சொல்லும் சொல்)

......... பாடல் .........

      தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
      தென்றலை யம்பு மின்கோ மருக செழுமறைதேர்
      தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
      தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே ...... 82

......... சொற்பிரிவு .........

தென் தலை அம்பு புனைவார் குமார, திமிர முந்நீர்

தென் தலை அம்புய மின் கோ மருக, செழுமறைத் தேர்

தென்றலை அம் புசகபூதர, எரிசிந்தி மன்றல்

தென்றல் ஐயம்பு படி நெறி போய் உயிர் தீர்க்கின்றதே.

......... பதவுரை .........

தென் ... வண்டுகள் இசை பாடுகின்ற,

தலை ... சென்னியின் கண்,

அம்பு (அப்பு) ... கங்கா ஜலத்தை,

புனைவார் ... தரித்திருக்கும் பரமசிவனின்,

குமார ... மைந்தனே,

திமிர ... இருளின் நிறம் கொண்ட,

முந்நீர் ... கடலால் சூழப்பட்ட,

தென் ... அழகிய,

தலை ... பூமா தேவிக்கும்,

அம்புய மின் ... தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும்,

கோ ... தலைவனாகிய திருமாலின்,

மருக ... மருகனே,

செழுமறை ... வளமையான வேதங்கள் எல்லாம்,

தேர் ... பூஜிக்கும்,

தென்தலை ... தெற்குத் திசைக் கண் இருக்கும்,

அம் ... சிறந்த,

புச (ஜ) க பூதர ... சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபனே,

எரி சிந்தி ... அக்னியைக் கொட்டிக்கோண்டு,

மன்றல் ... மணம் நிரம்பிய,

தென்றல் ... தென்றல் காற்று,

ஐயம்பு ... காமனின் ஐந்து பாணங்களும்,

படு நெறி போய் ... என் உடலில் தைத்த புண்வழியே போய்,

உயிர் தீர்க்கின்றதே ... என் உயிரை வருத்திப் போக்குகிறது.

......... பொழிப்புரை .........

ஸ்ரீதேவி பூதேவி சமேதரான திருமாலின் மருகோனே, வேதங்கள் தொழும் நாகாசல வேலனே, தென்றல் காற்று என் தேகத்தில் காம பாணங்களால் விளைந்த புண்வழியே உட்சென்று என் உயிரை வருத்துகின்றன. ஆதலால் நீ என்னை ஆட்கொண்டு அருள வேண்டும்.

கந்தர் அந்தாதி - 82 - தென்றலை யம்
Kandhar andhAdhi - thendRalai yam
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thendRalai yam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]