Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 76 - செம்மலை வண்டு
Kandhar andhAdhi - semmalai vaNdu
Kandhar andhAdhi - semmalai vaNdu    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.239  pg 4.240 
 WIKI_urai Song number: 76 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 76 ... செம்மலை வண்டு   (பாணனோடு வெகுளுதல்)

......... பாடல் .........

      செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
      செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
      செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
      செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே ...... 76

......... சொற்பிரிவு .........

செம் மலை வண்டு உகள் தரங்கம் மா வென்ற திண் படை வேல்

செம்மலை வண் துவச வாரணத்தானை செப்ப உன்னி

செம்மலை வண்டு தவு அம் தமிழ் பாண தெள் தீம் கையில் வாய்

செம்மலை வண்டு விருப்புறுமோ? இது தேர்ந்து உரையே.

......... பதவுரை .........

செம்மலை ... சிவந்த கிரவுஞ்ச கிரியையும்,

வண்டு ... சங்கினங்கள்,

உகள் ... உலாவுகின்ற,

தரங்கம் ... சமுத்திரத்தின் கண்,

மா வென்ற ... மா மரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த,

திண்படை ... வலிய படையாகிய,

வேல் செம்மலை ... வேலாயுதக் கடவுளை,

வண் துவச வாரணத்தானை ... வளப்பமான சேவல் கொடியை உடைய குமாரக் கடவுளை,

செப்ப உன்னி ... புகழ்ந்து பாடுவதற்கு நினைத்து,

செம்மலை ... மனதைப் புதைத்து விடாதே

(செம்முதல் ... மூடுதல், செம்மல் ... மூடாதே),

வண்டு தவு ... குற்றம் நீக்கப் பட்ட,

அம் தமிழ்ப் பாண ... அழகிய தமிழ்ப் பாட்டுக்களை இசைக்கும் பாணனே,

தெள் தீம் ... தெளிவாகவும் இனித்திருந்தும்,

கையில் வாய் ... கைக்கு அருகில் வாய்த்திருந்தும்,

செம்மலை ... பழைய பூவை,

வண்டு ... சுரும்பினங்கள் (வண்டு இனங்கள்),

விருப்புறுமோ? ... இச்சிக்குமோ?

இது ... இந்த உண்மையை,

தேர்ந்து ... நீ ஆராய்ந்து பார்த்து,

உரை யே ... அந்த முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக.

......... பொழிப்புரை .........

குற்றமில்லாத தமிழ்ப் பாடல்களை பாடுவதில் வல்லவனாகிய பாணனே, கை அருகில் இருந்தும் இனித்திருந்தாலும் பழைய புஷ்பங்களை வண்டுகள் விரும்பாது. நான் முருகனுக்கு பழையவளாகி விட்டேன். ஆகையினால் என்னைப் பாடாமல் கிரவுஞ்சத்தையும் சூரபத்மாவையும் அழித்த கந்தக்கடவுளின் திருப்புகழையே நீ பாடுவாயாக.

கந்தர் அந்தாதி - 76 - செம்மலை வண்டு
Kandhar andhAdhi - semmalai vaNdu
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - semmalai vaNdu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]