Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 73 - திசாமுக வேதனை
Kandhar andhAdhi - thisAmuga vEdhanai
Kandhar andhAdhi - thisAmuga vEdhanai    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.235  pg 4.236 
 WIKI_urai Song number: 73 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 73 ... திசாமுக வேதனை   (பழமுதிர்ச்சோலையின் பேருமை)

......... பாடல் .........

      திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
      திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
      திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
      திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே ...... 73

......... சொற்பிரிவு .........

திசாமுக வேதன் ஐயன் பாற்கரன் திங்கள் தங்கள்

(அவதி) சாம் உக வேதனை ஈறிலும் ஈறிலர். சீறும்

(அம்போ) தி சாமுக வேதனை வென் கண்ட வேலன் தினைப்புன

(தந்) தி சாமுக வேய் தனை நண்ணு தண் கார் வரை சேர்பவரே.

......... பதவுரை .........

திசாமுக ... நான்கு திசைகளிலும் முகத்தையுடைய,

வேதன் ... வேதத் தலைவனாகிய பிரம்மனும்,

ஐயன் ... அவரது தந்தையாகிய திருமாலும்,

பாற்கரன் (பாஸ்கரன்) ... சூரியனும்,

திங்கள் ... சந்திரனும்,

தங்கள் ... தங்கள் தங்கள்,

அவதி ... ஆயுள் முடிந்து,

சாம் ... இறந்து போகும்,

உக வேதனை ஈறிலும் ... யுகத்தில் துன்பமடையும் காலத்திலும்,

ஈறிலர் ... அழிய மாட்டார்கள்,

சீறும் ... கோபித்து ஆரவாரம் செய்கின்ற,

அம்போதி ... கடலின் கண் தோன்றி,

சாமுக ... அழிவைக் காட்டும் முகத்தை உடையவனும்,

வேதனை ... தேவர்களுக்கு அழிவில்லா துன்பத்தை விளைவித்தவனுமான சூரனை,

வென் கண்ட ... ஜெயித்து அழித்த,

வேலன் ... வேலாயுதத்தை உடைய முருகன் வசிக்கும்,

தினைப்புன ... தினைக் காடுகளையும்,

தந்தி ... யானைகளின்,

சமுக ... கூட்டங்களையும்,

நண்ணு ... தன்னுடன் பொருந்தி இருக்கும்,

தண் ... குளிர்ந்த,

கார் வரை ... மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை,

சேர்பவர் ... அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே.

(ஈறிலர் ... அழிய மாட்டார்கள்).

......... பொழிப்புரை .........

சமுத்திரத்தில் சூரனை வென்ற வேலாயுதப் பெருமான் நீங்காமல் உறைகின்ற சோலை மலையை தியானிப்பவர்கள், தேவர்கள் எல்லாம் அழிந்து போகும் யுக முடிவிலும் நித்ய சூரிகளாய் இருப்பார்கள்.

கந்தர் அந்தாதி - 73 - திசாமுக வேதனை
Kandhar andhAdhi - thisAmuga vEdhanai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thisAmuga vEdhanai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]