Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 45 - தேசம் புகல
Kandhar andhAdhi - dhEsam pugala
Kandhar andhAdhi - dhEsam pugala    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.202  pg 4.203 
 WIKI_urai Song number: 45 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 45 ... தேசம் புகல   (தலைவியின் துயரைத் தலைவன் அறிந்திலன்)

......... பாடல் .........

      தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
      தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
      தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
      தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே ...... 45

......... சொற்பிரிவு .........

தேசம் புகல அயிலே என சிறை புக்கு ஒருகம்

தே சம்பு கல வண வாரி செற்றவன் ஈசர்க்கு

(உப) தேசம் புகல் அதிக வாசகன் சிறிது ஓர்கிலன்

(மா) தேசு அம்பு கலகம் உதவி மானை செரு செய்வதே.

......... பதவுரை .........

ஒரு கம் ... ஐந்து தலையில் ஒரு தலையை,

தே ... இழந்த,

சம்பு ... பிரம்மன்,

தேசம் ... எனக்கு உறைவிடமும்,

புகல ... அடைக்கல ஸ்தானமும்,

அயிலே என ... வேலாயுதமே என்று முறையிட,

சிறை புக்கு ... சிறையிற்பட்டு,

கல ... மரக்கலங்களும்

வண ... அழகும் நிறைந்த,

வாரி செற்றவன் ... உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் செய்தவனும்,

ஈசர்க்கு ... பரமசிவனுக்கு,

உபதேசம் புகல் ... பிரணவ உபதேசம் செய்த,

அதிக வாசகன் ... சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள்,

சிறிது ஓர்கிலன் ... கொஞ்சங்கூட அறிந்தானில்லை,

மா தேசு அம்பு ... பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு,

கலகம் உதவி ... காமக் கலக்கத்தை ஏற்படுத்தி,

மானை ... மான் போன்ற தலைவியுடன்,

செரு செய்வதே ... போர் புரிகின்றதை,

(சிறிது ஓர்கிலன்)

......... பொழிப்புரை .........

ஒருதலை பின்னப்பட்டவனான பிரம்மன் சிறையில் அடைக்கப்பட்டு வேலாயுதமே எனக்கு சரணாகதி என்று சொல்லச் செய்தவரும், சிவனார் மனம் குளிர உபதேசம் செய்தவருமாகிய முருகப் பெருமான், மன்மதனுடைய மாம்பூ வாளி இந்த பெண்ணின் மேல் தைத்து போர்புரிவதை தெரிந்து கொள்ளவில்லை.

கந்தர் அந்தாதி - 45 - தேசம் புகல
Kandhar andhAdhi - dhEsam pugala
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - dhEsam pugala

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]