Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 23 - தினகர ரக்கர
Kandhar andhAdhi - dhinagara rakkara
Kandhar andhAdhi - dhinagara rakkara    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.176  pg 4.177 
 WIKI_urai Song number: 23 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 23 ... தினகர ரக்கர

(வேலாயுதத்தின் பெருமை)

......... பாடல் .........

      தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
      தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
      தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
      தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே ...... 23

......... சொற்பிரிவு .........

தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்

(செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண

(தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர்

(நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே.

......... பதவுரை .........

தினகர ... பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய,

அக்க ... நேத்திரத்தையும்,

ரதம் ... பல்லையும்,

கெடுத்தார் ... அழித்த சிவபெருமானுக்கு,

குரு தேசிகர் ... உபதேசம் செய்த ஞானாசிரியனும்,

செந்தி நகரர் ... செந்தில் பதியில் இருப்பவரும்,

அக்கரம் ஆறுடையார் ... ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும்,

தெய்வ ... தெய்வீகமான,

ஆரண ... வேதங்கள் பூஜித்த,

தந்தி நகர் ... சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை
ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின்,

அர ... அரத்தைப் போன்ற கூர்மையான,

கர சத்தி ... கை வேலாயுதம்,

இன்று ஆகில் ... இல்லை என்றால்,

தேவர் நண்பதி ... தேவர்களின் சிறந்த அமராவதி நகரம்,

ந ... இல்லாமல் போயிருக்கும்,

கர ரக்கர் ... வஞ்சனையை உடைய அசுரர்கள்,

அதம் தீர்வர் ... இறப்பைத் தவிர்த்திருப்பார்கள்,

ஈர்வர் செகமெங்கும் ... உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.

......... பொழிப்புரை .........

சிவ குருவாகி செந்தூரில் வாழ்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், செங்கோட்டு அதிபருமாகிய கந்தக் கடவுளின் திருக்கை வேல் வந்திராவிடில் அமராவதி அழிந்து போவது மட்டுமன்றி அசுரர்கள் ஸ்திரமாக வாழ்ந்து உலகம் முழுவதையும் அழித்திருப்பார்கள்.

கந்தர் அந்தாதி - 23 - தினகர ரக்கர
Kandhar andhAdhi - dhinagara rakkara
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - dhinagara rakkara

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]