Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 16 - சேவற் கொடியும்
Kandhar andhAdhi - sEvaRt kodiyum
Kandhar andhAdhi - sEvaRt kodiyum    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.169  pg 4.170 
 WIKI_urai Song number: 16 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 16 ... சேவற் கொடியும்   (பிரிவு ஆற்றாமை)

......... பாடல் .........

      சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
      சேவற் கொடியுங் கொடியகண் டாய்ததினை சூழ்புனத்துச்
      சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
      சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே ...... 16

......... சொற்பிரிவு .........

சேவற்கு ஒடியும்பல் நிசாந்தகனும் திருக்கரத்து

சேவற்கொடியும் கொடிய கண்டாய் தினைசூழ்புனத்து

சேவல் கொடி உந்தி வளர்த்தவளும் தந்தி களப

சே வல் கொடியும் உடையாய் பிரியினும் சேரினுமே.

......... பதவுரை .........

சேவற்கு ... ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல்,

ஒடியும் பல் ... பல் தகர்க்கப்பட்ட,

நிசாந்தகனும் ... (நிசி + அந்தகன்) பூஷா என்னும் சூரியனும்,

திருக்கரத்து ... உன் திருக்கையில் ஏந்தி இருக்கும்,

சேவல் கொடியும் ... கொடியாகிய சேவலும்,

கொடிய கண்டாய் ... பொல்லாதவைகளாய் இருக்கின்றன,

தினை சூழ் புனத்து ... தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள கொல்லையை,

சேவல் ... காவல் புரியும்,

கொடி ... நீண்ட,

உந்தி வளர்த்தவளும் ... காட்டாற்றின் வளப்பத்தை அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்),

தந்தி ... ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

களப ... சந்தன சேறு பூசியிருக்கும்,

சே ... சிவந்த,

வல் ... சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும்,

கொடியும் ... கொடி போன்ற இடையையும் உடைய (தேவசேனையையும்),

உடையாய் ... இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு இருப்பவனே,

பிரியினும் ... உன்னைப் பிரிந்திருக்கும் போதும்,

சேரினும் ... உன்னிடம் கலந்திருக்கும் போதும்,

(கொடி கண்டாய் ... கொடியவைகளாய் இருக்கின்றன).

......... பொழிப்புரை .........

தக்க யாகத்தில் பரமசிவனால் தண்டிக்கப்பட்ட சூரியனும் உன் திருக்கரத்துக் கொடியாகிய சேவலும் என்னை வேதனைப்படுத்துகின்றன. உன்னைப் பிரிந்திருக்கும் பகல்பொழுது நீட்டிக்கும்படி செய்யும் சூரியனும் உன்னுடன் கலந்திருக்கும் இராக்காலம் சீக்கிரம் முடியும்படி கூவி பகல் பொழுதை கொண்டுவரும் சேவலும் எனக்கு எதிரிகள். வள்ளியையும் தேவசேனையையும் இருபக்கத்தில் வைத்திருக்கும் முருகனே எனது வேதனையை அறிந்து என்னையும் உன்னுடன் சேர்த்துக்கொள்.

கந்தர் அந்தாதி - 16 - சேவற் கொடியும்
Kandhar andhAdhi - sEvaRt kodiyum
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sEvaRt kodiyum

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]