Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 9 - சிலைமத னம்படு
Kandhar andhAdhi - silaimadha nambadu
Kandhar andhAdhi - silaimadha nambadu    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.161  pg 4.162 
 WIKI_urai Song number: 9 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 9 ... சிலைமத னம்படு   (விரகதாபம்)

......... பாடல் .........

      சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
      சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
      சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
      சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே ...... 9

......... சொற்பிரிவு .........

சிலைமதன் அம்பு அடுமாறு எழும் சேய் மயில் உச்சிட்ட

(எச்) சிலை மதனம் படு சிந்துவை இந்துவை யான் செய்வதென்?

சிலை மதம் நம்படு காட்டுவர் கேளிரும் செங்கழுநீர்

சிலை மது அனம் படு தாமரை வாவி திரள் சங்கமே.

......... பதவுரை .........

செங்கழுநீர்ச் சிலை ... நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும்,

மது ... தேனும்,

அனம் படு ... அன்னப் பட்சிகளும் நிறைந்திருக்கும்,

தாமரை வாவி ... தாமரைத் தடாகத்தில் வசிக்கும்,

திரள் சங்கமே ... சங்கினங்களே,

சிலைமதன் ... வில்லை உடைய மன்மதனின்,

அம்பு ... பாணம்,

அடுமாறு எழும் ... என்னைக் கொல்வது போல் தாக்குகிறது,

சேய் மயில் ... குமாரக் கடவுளின் மயில் வாகனத்தின்,

உச்சிட்ட ... எச்சிலாகிய சரப்பத்தின்,

எச்சிலை ... எச்சிலாகிய தென்றல் காற்றையும்,

மதனம்படு சிந்துவை ... ஒருமுறை கடையப்பட்ட கடலையும்,

இந்துவை ... நிலவையும்,

செய்வதென் யான்? ... நான் என்ன செய்து கடப்பேன்?

சிலை மதம் ... ஆர்பாட்டத்துடன் கோபத்தை,

கேளிரும் ... சுற்றத்தார் எல்லோரும்,

நம் படு காட்டவர் ... என்மேல் காட்டுகிறார்கள்.

......... பொழிப்புரை .........

முருகனின் தணிகையில் தாமரைக் குளத்தில் வாழும் சங்குக் கூட்டங்களே, என் மேல் காமன் பாணப் பிரயோகம் செய்கிறான். தென்றலும் சந்திரனும் கடலும் என்னை வருத்துகின்றன. சுற்றத்தார் அனைவரும் என்னை ஏசுகின்றனர். இவற்றிலிருந்து நான் எப்படி மீளுவேன்?

கந்தர் அந்தாதி - 9 - சிலைமத னம்படு
Kandhar andhAdhi - silaimadha nambadu
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - silaimadha nambadu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]