திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 284 பெருக்க உபாயம் (திருத்தணிகை) Thiruppugazh 284 perukkaubAyam (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான ......... பாடல் ......... பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் ...... தணியாத கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் கழற்புணை நீதந் ...... தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் ...... களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் ...... தனிவீழத் திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபுத் தன பாரங்களிலே சம்ப்ரமத்துட(ன்) நாளும் ப்ரமித்து ... விரிவான தந்திரமான எண்ணங்கள் உடைய விலைமாதர்களின் மேன்மை விளங்கும் மார்பகங்களில் சிறப்புடன் தினந்தோறும் மயங்கித் திளைத்து, இருள் கூரும் ப்ரியக் கடல் ஊடும் தணியாத கருக்கடல் ஊடும் கதற்றும் அநேகம் கலைக் கடல் ஊடும் சுழலாதே ... அஞ்ஞானம் மிக்க ஆசைக் கடல் உள்ளும், ஓய்வு இல்லாத பிறவிக் கடல் உள்ளும், கத்திப் படிக்கும் நூற்கடல் உள்ளும் நான் சுழற்சி அடைந்து வேதனை அடையாமல், கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே ... (இக் கடல்களைக் கடக்க) கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள் புரிவாயாக. தருக்கிய வேதன் சிறைப் பட நாளும் சதுர்த் தச லோகங்களும் வாழச் சமுத்திரம் ஏழும் குலக் கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ ... செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன் சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும், திருக் கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம் தனில் வாழ்வே ... அழகிய கைகளில் ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே, சிறப்பொடு ஞானத் தமிழ் த்ரய(ம்) நீடும் திருத்தணி மேவும் பெருமாளே. ... சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.617 pg 1.618 WIKI_urai Song number: 257 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 284 - perukkavubAyam (thiruththaNigai) perukkavu pAyang karuththudai yOrtham prapuththana pArang ...... kaLilEsam pramaththuda nALum pramiththiruL kUrum priyakkada lUdun ...... thaNiyAtha karukkada lUdung kathatRuma nEkam kalaikkada lUdum ...... chuzhalAthE kadappalar sErkiN kiNiprapai veesum kazhaRpuNai neethan ...... tharuLvAyE tharukkiya vEthan siRaippada nALum sathurththasa lOkang ...... kaLumvAzha samuththira mEzhung kulakkiri yEzhunj chaLappada mAvun ...... thaniveezhath thirukkaiyil vElon Reduththama rAdum cherukku mayUran ...... thanilvAzhvE siRappodu njAnan thamizhthraya needun thiruththaNi mEvum ...... perumALE. ......... Meaning ......... perukka upAyam karuththu udaiyOr tham praputh thana pArangaLilE sampramaththuda(n) nALum pramiththu: These whores are filled with detailed and tricky ideas; everyday I have been indulging merrily on their great bosom; iruL kUrum priyak kadal Udum thaNiyAtha karukkadal Udum kathatRum anEkam kalaik kadal Udum suzhalAthE: I do not wish to feel miserable whirling around in the sea of desire filled with ignorance, in the endless sea of birth and in the sea of text books which one reads aloud; kadappu alar sEr kiNkiNi prapai veesum kazhal puNai nee thanthu aruLvAyE: (in order that I cross these seas,) kindly grant me the raft of Your hallowed feet, filled with the fragrance of kadappa flowers and the radiance of the dazzling anklets, Oh Lord! tharukkiya vEthan siRaip pada nALum sathurth thasa lOkangaLum vAzhac chamuththiram Ezhum kulak kiri Ezhum chaLappada mAvum thani veezha: The arrogant Brahma, expert in the four VEdAs, was imprisoned; all the fourteen worlds prospered everyday; the seven seas and the famous seven mountains were shattered; and the demon SUran, who stood in the disguise of a mango tree, was uprooted, falling all alone; thiruk kaiyil vEl onRu eduththu amar Adum serukku mayUram thanil vAzhvE: when You took the matchless spear in Your hallowed hand and fought, Oh Lord! You mount the exultant peacock, Oh Treasure! siRappodu njAnath thamizh thraya(m) needum thiruththaNi mEvum perumALE.: You are seated in ThiruththaNigai where the vast and true Knowledge and the three branches of Tamil language flourish, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |