திருப்புகழ் 283 பூசலிட்டு  (திருத்தணிகை)
Thiruppugazh 283 pUsalittu  (thiruththaNigai)
Thiruppugazh - 283 pUsalittu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த
     தானனத் தத்த தத்த ...... தனதான

......... பாடல் .........

பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
     போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள்

போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
     போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல்

ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
     ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே

ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
     யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே

வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
     மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே

வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
     மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா

வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
     வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே

வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
     வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பூசல் இட்டுச் சரத்தை நேர் கழித்துப் பெருத்த போர்
விடத்தைக் கெடுத்து வடி கூர் வாள் போல முட்டி
... போர்
புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க
முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால)
விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி,

குழைக்குள் ஓடி வெட்டித் தொளைத்து போக(ம்) மிக்கப்
பரிக்கும் விழியார் மேல்
... காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும்
ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத்
தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல்

ஆசை வைத்துக் கலக்க மோகம் உற்றுத் துயர்க்குள் ஆகி
மெத்தக் களைத்து உள் அழியாமே
... ஆசை வைத்து, கலக்கும்
மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து
உள்ளம் குலைந்து போகாமல்,

ஆரணத்துக் கண் நத்து நாண் மலர்ப் பொன் பதத்தை
யான் வழுத்திச் சுகிக்க அருள்வாயே
... வேதத்தின் கண் விரும்பிப்
போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச்
சுகம் பெற அருள் புரிவாயாக.

வாசம் உற்றுத் தழைத்த தாள் இணைப் பத்தர் அத்த
மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே வாழ்வு உறப் புக்கி
...
நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய
பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும்
சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை
அடையும்படி புறப்பட்டு,

ரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில்
வரும் வீரா
... ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட
மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே,

வீசும் முத்துத் தெறிக்க ஓலை புக்கு உற்று இருக்கும் வீறு
உடைப் பொன் குறத்தி கணவோனே
... ஒளி வீசும் முத்துக்கள்
சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண்
மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப்
பெண்ணாகிய வள்ளியின் கணவனே,

வேல் எடுத்துக் கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள்
எனச் சொல் கருத்தர் பெருமாளே.
... கையில் வேலாயுதத்துடன்,
நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை
மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப்
புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.721  pg 1.722 
 WIKI_urai Song number: 298 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 283 - pUsalittu (thiruththaNigai)

pUsalit tuccha raththai nErkazhith thuppe ruththa
     pOrvidath thaikke duththu ...... vadikUrvAL

pOlamut tikku zhaikku LOdivet tiththo Laiththu
     pOkamik kappa rikkum ...... vizhiyArmEl

Asaivaith thukka lakka mOkamut Ruththu yarkku
     LAkimeth thakka Laiththu ...... LazhiyAmE

AraNath thukka Naththu nANmalarp poRpa thaththai
     yAnvazhuth thicchu kikka ...... aruLvAyE

vAsamut Ruththa zhaiththa thALiNaip paththa raththa
     mAtharkat katchi Raikku ...... LazhiyAmE

vAzhvuRap pukki rathna rEkaiyok kacchi Rakku
     mAmayiR poRka zhuththil ...... varumveerA

veesumuth thuththe Rikka vOlaipuk kutRi rukkum
     veeRudaip poRku Raththi ...... kaNavOnE

vEleduth thukka raththi neelaveR pitRa zhaiththa
     vELenac choRka ruththar ...... perumALE.

......... Meaning .........

pUsal ittuc charaththai nEr kazhiththup peruththa pOr vidaththaik keduththu vadi kUr vAL pOla mutti: They are very combative, chasing away the arrows that are no match for their sharpness; even the aggresive and confrontational AlakAla poison is vanquished and destroyed by them; they attack like very sharp swords;

kuzhaikkuL Odi vettith thoLaiththu pOka(m) mikkap parikkum vizhiyAr mEl: they run right up to the swinging earstuds and sever the lives of the suitors; they are filled with enormous amount of pleasure; they are the eyes of the whores;

Asai vaiththuk kalakka mOkam utRuth thuyarkkuL Aki meththak kaLaiththu uL azhiyAmE: I do not wish to lust for these whores with delusory passion and to be victimised, feeling miserable and destroying my mind;

AraNaththuk kaN naththu nAN malarp pon pathaththai yAn vazhuththic chukikka aruLvAyE: instead, kindly bless me to attain bliss by worshipping Your hallowed feet, adorned with fresh flowers and ardently praised by the scriptures!

vAsam utRuth thazhaiththa thAL iNaip paththar aththa mAtharkaL kaN siRaikkuL azhiyAmE vAzhvu uRap pukki: In order that the devotees who hold on to Your fragrant feet attain prosperity without being imprisoned inside the eyes of these whores who are only interested in making money, You come down to greet them,

rathna rEkai okkac chiRakkum mA mayil pon kazhuththil varum veerA: mounted on the neck of the great peacock whose complexion is bright like the rays of precious gems, Oh valorous One!

veesum muththuth theRikka Olai pukku utRu irukkum veeRu udaip pon kuRaththi kaNavOnE: She has entered, and is standing on, the raised platform made of thatches (in the millet field), with bright light radiating from her string of pearls; You are the consort of that VaLLi, the famous damsel of the KuRavAs, Oh Lord!

vEl eduththuk karaththil neela veRpil thazhaiththa vEL enac chol karuththar perumALE.: With the spear held in Your hand, You are happily seated in ThiruththaNigai, where the blue lily blossoms (every day in the pond); You are the Lord of those who worship You praising You as "Oh Reddish Lord", Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 283 pUsalittu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]