திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 285 பொரியப் பொரிய (திருத்தணிகை) Thiruppugazh 285 poriyapporiya (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான ......... பாடல் ......... பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் ...... தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச் செயலற் றனள்கற் ...... பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத் தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும் சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச் சுரருக் குரிமைப் ...... புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச் சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே தரிகெட் டசுரப் படைகெட் டொழியத் தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொரியப் பொரியப் பொலி முத்து வடத் துகளில் புதை அத் தனம் மீதே ... காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், புரளப் புரளக் கறுவித் தறு கண் பொரு வில் சுறவக் கொடி வேள் தோள் தெரி வைக்கு(ம்) ... (இப்பெண் படுக்கையில்) புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச் செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், அரிவைப் பரவைக்கு உருகிச் செயல் அற்றனள் கற்பு அழியாதே ... வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு, செறி உற்று அணையில் துயில் உற்று அருமைத் தெரிவைக்கு உணர்வைத் தர வேணும் ... நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு (மயக்கத்தை நீக்கி) நல்லுணர்வைத் தர வேண்டும். சொரி கற்பக நல் பதியைத் தொழு கைச் சுரருக்கு உரிமைப் புரிவோனே ... சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவியவனே, சுடர் பொன் கயிலைக் கடவுட்கு இசையச் சுருதிப் பொருளைப் பகர்வோனே ... ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை உபதேசம் செய்தவனே, தரி கெட்டு அசுரப் படை கெட்டு ஒழியத் தனி நெட்டு அயிலைத் தொடும் வீரா ... நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரனே, தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே. ... வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் செவிலித்தாய் தலைவிக்காகப் பரிந்து சொல்வதுபோல் அமைந்தது. மன்மதனின் கரும்பு வில், மலர்ப் பாணங்கள், பெண்களின் தூற்று மொழிகள், ஒலிக்கும் கடல் முதலியன தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டி, காமத்தை அதிகரிக்கச் செய்வன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.605 pg 1.606 WIKI_urai Song number: 251 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 285 - poriyap poriya (thiruththaNigai) poriyap poriyap polimuth thuvadath thukaLiR puthaiyath ...... thanameethE puraLap puraLak kaRuvith thaRukat poruviR chuRavak ...... kodivELthOL therivaik karivaip paravaik kurukic cheyalat RanaLkaR ...... pazhiyAthE seRivut RaNaiyit Ruyilut Rarumaith therivaik kuNarvrith ...... tharavENum sorikaR pakanaR pathiyaith thozhukaic churaruk kurimaip ...... purivOnE sudarpoR kayilaik kadavut kisaiyac churuthip poruLaip ...... pakarvOnE thariket tasurap padaiket tozhiyath thaninet tayilaith ...... thodumveerA thavaLap paNilath tharaLap pazhanath thaNikaik kumarap ...... perumALE. ......... Meaning ......... poriyap poriyap poli muththu vadath thukaLil puthai ath thanam meethE: Fried by the fire of passion again and again, the string of pearls is reduced to powder and buried on their breasts upon which puraLap puraLak kaRuvith thaRu kaN poru vil suRavak kodi vEL thOL theri vaikku(m): the sharp and well-targetted arrow from the hand of Manmathan (God of Love) is wielded; because of that angry and confrontational Manmathan, holding the bow of sugar-cane and a staff bearing the emblem of a shark, who is making this girl toss and turn (on her bed), arivaip paravaikku urukic cheyal atRanaL kaRpu azhiyAthE: the scandal-mongering women and the roaring sea, her heart is tormented; lest her modesty is destroyed rendering her incapable of all activities expected to be performed by her, seRi utRu aNaiyil thuyil utRu arumaith therivaikku uNarvrith thara vENum: You should come to her bed, sleep with her lying closely and grant this unique girl an awakening of good sense (dispelling her delusion), Oh Lord! sori kaRpaka nal pathiyaith thozhu kaic churarukku urimaip purivOnE: AmarAvathi, the capital of the celestials, where kaRpaga trees, showering flowers, abound, was restored with Your help to the DEvAs who stood with folded hands worshipping You, Oh Lord! sudar pon kayilaik kadavutku isaiyac churuthip poruLaip pakarvOnE: He is the Lord presiding over the bright and beautiful Mount KailAsh; to the exhilaration of that Lord SivA, You preached the essence of the VEdAs! thari kettu asurap padai kettu ozhiyath thani nettu ayilaith thodum veerA: The armies of the demons were scattered and annihilated when You wielded the unique and tall spear, Oh valorous One! thavaLap paNilath tharaLap pazhanath thaNikaik kumarap perumALE.: White conch-shells and pearls are strewn about on the fields of this town ThiruththaNigai where You are seated, Oh Great One! |
This song has been written in the Nayaka-Nayaki BhAva, as described by the foster-mother of the heroine, portraying the pangs of separation of her daughter from Lord Muruga. The Love God, the flowery arrows, the bow of sugarcane, the scandal-mongering women and the roaring sea are some of the sources that aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |