Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 52 - தித்திக்கு
Kandhar andhAdhi - thiththikku
Kandhar andhAdhi - thiththikku    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.210  pg 4.211 
 WIKI_urai Song number: 52 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 52 ... தித்திக்கு   (உடல் வாய்ப்பது கரும வினையால்)

......... பாடல் .........

      தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன் செவிபத்
      தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
      தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்
      தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே ...... 52

......... சொற்பிரிவு .........

தித்திக்கும் தொந்திக்கும் நித்தம் புரியும் சிவன் செவி

(பத்) தித்திக்கு உந்து ஓம் திக்கற மொழி பாலக, தேன் அலைத்து

தித்திக்கும் தொந்திக்கு இளையாய், விளை உயிர்க்கும் சிதை தோல்

தித்திக்கும் தொந்திப்பன ஏது செய் வினை தீ விலங்கே.

......... பதவுரை .........

தித்திக்கும் தொந்திக்கும் ... தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப,

நித்தம் புரியும் ... நடனம் புரிகின்ற,

சிவன் ... சிவபெருமானின்,

செவி ... செவிகளாகிய,

பத்தி திக்கும் ... வரிசையான புலனிடத்து,

உந்து ... நுழையும்படி,

ஓம் ... பிரணவப்பொருளை,

திக்கற ... அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி,

மொழி ... உபதேசம் செய்த,

பாலக ... குமாரனே,

தேன் அலைத்து ... தேன் பண்டங்களின் இனிமையினால்,

தித்திக்கும் ... இனிப்புற்று இருக்கும்,

தொந்திக்கு ... வயிற்றை உடைய (கணபதிக்கு),

இளையாய் ... தம்பியே,

விளை உயிருக்கும் ... கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும்,

சிதை ... அழிந்து போகிற,

தோல் தித்திக்கும் ... தோலாகிய இந்தப் பைக்கும்,

தொந்திப்பன ... சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு,

ஏது ... காரணம்,

செய் ... நான் முப்பிறவியில் செய்த,

வினை ... கருமங்களாகிய,

தீ விலங்கே ... கொடிய தளைகள் தானோ?

......... பொழிப்புரை .........

நடன சபாபதியின் திருச்செவியில் பிரணவ உபதேசம் செய்தவனே, விநாயகருக்கு இளையவனே, ஜடமாகிய பூத உடம்பிற்கும் சூக்குமமாகிய உயிருக்கும் தொடர்பு உண்டாகி பிறப்பு ஏற்படுவதற்கு நான் செய்த பூர்வ ஜென்ம வினைதான்.

கந்தர் அந்தாதி - 52 - தித்திக்கு
Kandhar andhAdhi - thiththikku
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thiththikku

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]