உ
ஓம் குஹப்ரமணே நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய திருவலங்க திரட்டு - முதற்கண்டம் - இசைத்தமிழ் (இரண்டாம் மண்டலம்)
வினாவுத்தரம். நேரிசை வெண்பா
பின்னையின்பே ராவதெது பீட்டின்சொல் லென்பழகி யென்னுமொழி யென்கவரி யேந்திமிக்கார் - முன்னசைத்தே உய்பவனை யேவுரையா தோஞ்சேய்பண் நூலெனுரை செய்திருவ லங்கற் றிரட்டு. ... ... ... ... ... ... ... நேரிசை வெண்பா.
பதக்கண்டா பண்பா வலங்கற் றிரட்டின் முதற்கண்டம் பாடு முருகோன் - பதக்கண்டாம் இன்புனது கண்ணுறுமா றேதி லருணோக்கும் அன்பருநின் முன்வருகு வார். ... ... ... ... ... ... ... காசியாத்திரை.
பாடல்: காப்பு
பண்: ... தேவாரப் பாடல்: ... இராகம்: அம்சத்வனி தாளம்: ...
குறள் வெண்பா
பொன்னாரந் துன்னும் புயத்தானை மாமுகவன் பின்னோனிதற்கருள்காப்பே. ... ... ... ... (1)
கோளில் புகழக்கயிலைக் கோன்முருகை யேத்தவவன் தோளுங் கடம்புந் துணை. ... ... ... ... (2)
அஞ்ஞத்வம் வீடற் கலங்கற் றிரட்டாற்ற மஞ்சையிவர் வோன்காக்க வந்து. ... ... ... ... (3)
வள்ளல்சே யின்றாளை வாத்தவருட் டெய்வானை வள்ளியுங் காக்கவே வந்து. ... ... ... ... (4)
அயில்வேலவன் மேனானு மாற்றுந் துதிக்கேர் மயில்சேவ லுங்காக்க வந்து. ... ... ... ... (5)
சுகநிலையைச் சூழ்ந்து சொலற்குச் சுரேசன் மகிழ்வொடுங் காக்கவே வந்து. ... ... ... ... (6)
நற்றா டொழக்கூட னாரிக் கிளமுருகாய் உற்றோ னருள்வா னுவந்து. ... ... ... ... (7)
அருளா ரடிபோற்று மன்பர்க் கருள்சேய் அருளே நமக்காதிக் கம். ... ... ... ... (8)
ஒப்புவமை யில்லாமெய் யுற்றவடி வேலரசிங் கெப்படியும் வந்தாளு மே. ... ... ... ... (9)
குமரகுரு தானே கொடுக்குமென லங்கால் குமரகுரு தாசன் குறிப்பு. ... ... ... ... (10)
* கண்டம் = கூறுபாடு. கூட்டமெனும் பொருள் பயக்கதக்கது. காண்டம் = காண்டம் என்பதற்கு இது வேறாம்.
|