முருகனின் Murugan's |
---|
முருகனின் ருத்ராட்ச மாலை (திரு. V. சந்திரசேகரன்) முருகனுக்கு அரோகரா! இந்தியாவில் வசித்த முனிவர், சித்தர் போன்றோர் அணுவைப் பிளப்பது பற்றி பல பாடல்கள் எழுதி உள்ளனர். நாம் வாழும் உலகைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். தொலைநோக்கியின்றியே சூரியன், சந்திரன் மற்றும் பல கிரகங்களைப் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளனர். சூரபத்மன் ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்டது பற்றி ஸ்ரீ கந்தபுராணத்தில் கூறியுள்ளது. அண்டம் என்பது நாம் வாழும் பூமி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் .. இவற்றைத் தவிர நமக்கு தெரியாத இன்னும் எத்தனையோ கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றதோ? நாம் வாழும் அண்டத்தில் எத்தனை சூரியன்கள் இருக்கின்றதோ தெரியவில்லை, 1008 அண்டங்களை நினைத்துப் பார்க்க முடிகின்றதா? மதங்கள் பல இருந்தாலும் அதில் ருத்ராட்ச மாலை, துளசி மாலை, ஜபமாலை என்று எல்லா மதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளன. 'ஓம்' என்ற முருகனின் மந்திரம்தான் பிரபஞ்சத்தில் ஒலிக்கின்றது. முருகன் அணிந்திருக்கும் 1008 ருத்ராட்சம் கோர்க்கப்பட்ட மாலையில் ஒவ்வொரு ருத்ராட்சமும் ஒரு பிரபஞ்சமாகக் கொள்ளலாம். 1008 ருத்ராட்சங்களையும் இணைக்கின்ற துளையே கருந்துளையாக (black hole ஆக) இருக்கும் என்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு கருந்துளையில் செல்லும் ஒரு பொருள் எங்கு செல்கிறது என்று தெரிவதில்லை. மறைந்துவிடுகிறது. மாலையாக ஆக்க ருத்ராட்சத்தில் எதிர் எதிராக இரண்டு துளைகள் இட்டு நூலில் இணைக்க வேண்டும். அந்த துளையையே கருந்துளையாகக் கொள்ளலாம். ஓங்காரம் என்ற நூலே 1008 அண்டங்களையும் இணைக்கிறது. ஓரு அண்டத்தில் உள்ள இரு கருந்துளைகளின் வழியாகச் செல்லும் ஒரு பொருள் 'ஓம்' என்றச் சொல்லின் வழியிலே பயணித்துக் கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாகவே 'ஓம்' என்றச் சொல் பிரபஞ்சங்களை வழி நடத்துகிறது என்று கொள்ளலாம். |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |