Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Nagarathar Sri TheNdAyuthapANi Temple - Teluk Intan, Malaysiaநகரத்தார் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்
தெலுக் இந்தான் பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Nagarathar Sri TheNdAyuthapANi Temple  Flag of Perak State
Teluk Intan Perak Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு



(டாக்டர் சித. சோமசுந்தரம்)

வைரவளைகுடா நகர் என்று வர்ணிக்கப்படும் தெலுக் இந்தான் நகரில் எழுந்தருளி அனைவோர்களையும் காத்து இரட்சிக்கும் பேராக் ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமியை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நகரத்தார்கள் வேலாக வைத்து வணங்கி வந்துள்ளார்கள். பிறகு படிப்படியாக எம்பெருமானுக்கு ஆலயத்தை எழுப்பியுள்ளார்கள். பர்மிய தேக்கு வேலைப்பாட்டுடன், செட்டி நாட்டிலிருந்து வந்த (காரைக்குடி / தேவகோட்டை) கொத்தனார்களையும், சிற்பிகளையும் கொண்டு மிகவும் அழகாக இக்கோயிலைக் கட்டினார்கள்.

மலேசிய பழநி ஆண்டவர் என்று எல்லோராலும் வணங்கப்படும், பேராக் ஸ்ரீ தெண்டாயுதபாணிதான் மூலவர். பழநியிலிருந்து பாலமுருகனாக இந்நகருக்கு குதித்தெழுந்து வந்துள்ளார் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.

கோயில் வாயிலில் நுழையும்பொழுது வலது பக்கத்தில் அருள்மிகு சிதம்பர வினாயகர் எழுந்தருளியுள்ளார். கோவிலினுள் நுழைந்தவுடன், இடும்பையா, பலிபீடம், மயில்வாகனம் ஆகியவர்களைக் கடந்து, இடது பக்கத்தில் சித்தி வினாயகர் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். நடுவில் முருகப் பெருமானின் சன்னிதி உள்ளது. முருகப் பெருமானின் கருவறைக்கு முன், முருகனின் வலதுபுறம் சிறிய வினாயகரும், முருகனின் இடதுபுறம் ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேக படமும் அமைந்துள்ளன. முருகன் சன்னிதிக்கு வலதுபுறம், ஸ்ரீ ஆனந்த நடராஜர் சன்னிதியில் படமாக காட்சி அளிக்கிறார். முருகனின் சன்னிதானத்திற்கு முன் தெற்கு நோக்கி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் எழுந்தருளி உள்ளார்கள். அன்புத் தாயாக எல்லோரையும் காத்து வருகிறார்கள்.

இக்கோயிலில் வழிபாடுகள் முறைப்படி நடந்து வருகின்றன. கோயில் காரியங்களை 3 கிட்டங்கிகளிலுள்ள நகரத்தார்கள், வருடத்திற்கு ஒருவராக இருந்து பார்த்து வருகிறார்கள். காலை 7.00 மணிக்கு காலை வழிபாடும், மாலை 6.30க்கு மாலை வழிபாடும் நாள்தோறும் நடைபெருகின்றன.

இக்கோயிலில் எல்லாச் சிறப்பு வழிபாடுகளும் நல்ல முறையில் நடந்துவந்த போதிலும், மிகவும் சிறப்பாக நடப்பது கந்தர் சஷ்டியும், சித்ரா பௌர்ணமித் திருவிழாவும். சித்ரா பௌர்ணமி மிகச் சிறப்பாகக் கோண்டாடப்படுகிறது. அன்று காலை பக்தர்கள் காவடி செலுத்துவது முதல் மதியம் மகேஸ்வர பூஜை, இரவு வெள்ளி இரத ஊர்வலம் வரை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் பால் காவடியும், பலவித காவடிகளையும் செலுத்துவதையும், 'அரோகரா! அரோகரா!' என்று தெய்வீகக் குரல் ஒலிகளையும், இரவு இரத ஊர்வலத்தில் சுவாமியின் அழகையும் காணக்கண் கோடி வேண்டும். ஆண்டாண்டு நடக்கும் சித்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கூடி ஆண்டவனைத் தரிசித்து, ஆசிபெறுகிறார்கள். தெலுக் இந்தான் நகரமே கோலாகலமாகக் காணப்படும்.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சிதம்பர வினாயகரின் திருக்குட நீராட்டு பிரபவ ஆண்டு ஆவணித் திங்கள் 25-ம் தேதி (ஆங்கிலம் 10-9-1987-ல்) நடைபெற்றது. பேராக் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலின் முதல் நீராட்டு அக்ஷ்ய ஆண்டு ஆனி மாதம் 9-ம் தேதி (ஆங்கிலம் 23-6-1926-ல்) நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது. அடுத்து சர்வஜித்து வருடம் தை மாதம் 22-ம் தேதி (ஆங்கிலம் 4-2-1948-ல்) நடைபெற்றது. அடுத்து துன்மதி ஆண்டு வைகாசி மாதம் 23-ம் தேதி (ஆங்கிலம் 5-6-1981-ல்) நடைபெற்றது,

அருச்சிப்போர் மனம்போல் வரும் பொருளை தருங்குமரனின் இத்திருச்சன்னிதியில் வீற்றெழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை சேவித்து எல்லா நலங்களும் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வோமாக.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. சித்ரா பௌர்ணமி (1 நாள்)
இரவில் வெள்ளி இரத ஊர்வலம்
2. கந்த சஷ்டி

1. ChithrA powrNami (1 day festivities)
Silver Chariot procession around the city
2. Kandha Sashti



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 12 noon
4:30 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Nagarathaar Sri Thendayuthapani Temple,
65 Jalan Bandar,
Teluk Intan,
Perak,
MALAYSIA
Postcode: 36000


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
4.026485, 101.019769

Nagarathar Sri TheNdAyuthapANi Temple - Teluk Intan, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Nagarathar Sri TheNdAyuthapANi Temple - Teluk Intan, Perak, Malaysia
(kdcmyb19)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]