Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Bala Murugan Temple - Seberang Jaya, Malaysiaஸ்ரீ பாலமுருகன் ஆலயம்
செபெராங் ஜெயா பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Bala Murugan Temple  Flag of Penang State
Seberang Jaya Penang Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple


Thiru Irajagopal
திரு. இராஜூகோபால் (முன்னாள் ஆலயத் தலைவர்)
Thiru Irajoogopal, (former temple president)

ஸ்ரீ பாலமுருகன் ஆலய வரலாறு

செபராங் ஜெயா திருத்தலத்தில், சீரும் சிறப்புமாய், தமிழ்க் கடவுளாம் ஸ்ரீ பால முருகனுக்கு புதிதாக, ஆகம முறைப்படியும், கலை எழில் மிளிரும் சிற்ப வண்ண வேலைப்பாடுகளுடனும் ஆலயம் எழுப்பி அகமகிழ குடமுழுக்கு காணும் இந்த நேரத்தில், இந்த ஆலயத்தின் கடந்த கால வரலாற்றை சிறிது எண்ணிப் பார்த்து விளக்க வேண்டியது நமது தலையாக கடமையாகும்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நம் ஆன்றோர் வாக்கு, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர், பிறை வட்டாரத்தில் வணங்கி வழிபட முருகப் பெருமானுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற கவலை போக்க, பக்தி உணர்வும், சேவை மனதும் கொண்ட அன்பர்களால் சிறிய அளவில் ஸ்ரீ பால முருகனுக்கு வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டது. இது ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் எதிர்புரமும், சை லெங் பார்க்கில் ஒரு பகுதியாக உள்ள இடமாகும்.

மக்களின் ஒருமித்த ஆதரவோடு முருகன் ஆலயம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. 1977-ஆம் ஆண்டு ஒரு முறையும் பிறகு 1986-ல் ஒரு முறையும் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது. மேலும் அங்கு நாககன்னி அம்மனும் பிரவுடை செய்து வைக்கப்பட்டது.

ஆலய சார்பாக இளைஞர்களுக்கு தக்க பயிற்சி கொடுத்து பஜனைக்குழு, கோலாட்டக்குழு, ஆட்டக்காவடிக் குழு முதலியன அமைக்கப்பட்டது. குறிப்பாக பிறை ஸ்ரீ செல்வ வினாயகர் ஆலய சித்திரா பௌர்ணமி விழாக்களில் ஆண்டுதோறும் இவர்கள் பங்கு பெற்று பாராட்டு பெற்று வந்தனர்.

ஒவ்வொரு பௌர்ணமி பூசைக்கும் மாதா மாதம் சிறப்பாக முருகனுக்கு அபிஷேக, ஆராதனை அன்னதானம் நடைபெறும். 500 பேர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன் அடைவார்கள்.

இருப்பினும் இவ்வாலயம் அமையப் பெற்ற இடம் பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு இல்லை என்கிற குறை உணரப் பெற்று, இருபது ஆண்டு காலம் பினாங்கு நில மேம்பாட்டு கடிதத்துடன் அடிக்கடி சந்தித்து பேசி, போராடி அவர்களின் மேலான ஒத்துழைப்புடன் தற்போதுள்ள இடம் வெள்ளி 68,000க்கு பெறப்பட்டது. இவ்வாலயம் அரசாங்கத்துடன் பதிவு செய்யப்பட்டதினால் இது சாத்தியமானது.

இவ்வாலயம் முழுமைபெற எல்லா வகையாலும் ஒத்துழைத்து, உறுதுணையாய் விளங்கிய அனைவருக்கும் மற்றும் நம் மக்களுக்கும், நாட்டிற்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ பால முருகனின் திருவருள் கிட்டிட பிரார்த்திக்கிறேன்.

திரு. இராஜூகோபால்,
தலைவர்,
ஸ்ரீ பால முருகன் ஆலயம்.

சிறப்புக் கவிதை

Special Poem

  


மலேசியா - பினாங்கு, செபராங் ஜெயா பாலமுருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

ஞாலமெலாம் அருள்செய்யும் ஞானகுரு தேசிகனை
     கோலமா மயில்மீது குடிகொண்ட குருபரனை
          பாலமுருகப் பருவமாய் பவனிவரும் குருபரனை
               காலமெலாம் கைதொழுது கனிந்து உருகிடுவோம்

திருக்காட்சி தந்தருள திருத்தேரில் வந்தருளி
     அருட்காட்சி தந்தருளி அவனியெலாம் செழித்திடவே
          பெருங்காட்சிக் கோலமாய் பெயராது சிந்தையில்
               வருங்காட்சி வள்ளியரோடு வந்தனைகள் செய்திடுவோம்

பிணக்கங்கள் தீர்த்தருள பினாங்கு தனிலுறைந்து
     இணக்கங்கள் யாவையுமே இனியவுன் நினைவோடு
          மணக்கும் மலர்த்தாளை மகிழ்வோடு மனதினிலே
               வணக்கமாய் வந்தனைகள் செய்துனையே வழிபடுவோம்

ஓங்காரத்து உள்ளிருந்து உயர்ஞான ஒளியினையே
     நீங்காது நித்தலும் நிறைவுடனே அருளியருட்
          பாங்கான பதமலரைப் பணிவுடன் பற்றிடவே
               தேங்காத மடைநீராய்த் திறந்து வருபவனே

ஆறுருவாய் அவதரித்து ஓருருவாய் ஆனவனை
     நீறுருவாய் நெற்றியோடு நெஞ்சத்து உறைந்தாங்கு
          கூறுருவாய்ச் சூரனைக் குணமெலாம் மாற்றியருள்
               ஏறுருவ வாகனமாய் இனிதமர்ந்த நாயகனே.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

7 am – 12 noon
6:30 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Bala Murugan Temple,
Plot 9, Lorong Jelawat 4,
Seberang Jaya,
Prai,
Penang,
MALAYSIA
Postcode: 13700

Mailing Address:

Sri Bala Murugan Temple,
(Persatuan Penganut Dewa Sri Bala Murugan),
No. 1-1-A, NB Plaza, 3000 Jalan Baru,
Perai, Penang,
MALAYSIA
Postcode: 13700


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.396786, 100.395452

Sri Bala Murugan Temple - Seberang Jaya, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Bala Murugan Temple - Seberang Jaya, Penang, Malaysia
(kdcmya91)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]