Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Subramaniar Alayam - Pengkalan Hulu (Keroh), Malaysiaஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்
பெங்கலான் ஹுலு (குரோ) பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Subramaniar Alayam  Flag of Perak State
Pengkalan Hulu (Keroh) Perak Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஒம்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை,
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 2247)

ஆலயத்தின் வரலாறு

இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை. இப்பொருளைத் தேடி சிறப்போடு வாழ நினைப்பவர் என்றும் பழி இன்றி, நற்குல மகனாக, நற்குல மக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ பக்தி தேவை. இப்பக்தி ஒருவருக்கு பொருள் தேடுவதைப் போல் மிகவும் சுலபமாகக் கிடைத்து விடும் பேறு அன்று. நமது 63 நாயன்மார்களும் பரம்பொருளை நினைந்து கசிந்துருகி அல்லல் பட்டு, அல்லும் பகலும் ஐயனையே தியானித்து அடைந்த பெரும் பேறாகும். நாமும் அப்பரம்பொருளை அடைய இறைவன் வழிவகுத்துள்ளார். அதுதான் ஆலய வழிபாடு.

அவ்வகையிலே அந்நாளில் குரோ என்று அழைக்கப்பட்ட பெங்காலான் உலுவில் 1922-ஆம் ஆண்டு "பூந்தோட்டம்" என்ற இடத்தில் சிமெண்டில் செய்த சிலையை வைத்து வழிபட்டனர் இவ்வூர் மக்கள். அதன் பின் ஆலயம் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 8-12-1924-ஆம் தேதி இவ்வாலயத்தை அரசு ஆவணத்திலும் பதிவு செய்தனர் அப்போதைய நிர்வாகத்தினர். அதற்குப் பிறகு அரசாங்கத்தினரிடமிருந்து தற்போது அமைந்திருக்கும் இவ்விடத்தைப் பெற்றனர்.

பொது மக்களின் கூட்டு முயற்சியால் 1952-ஆம் ஆண்டு ஒரு சிறு ஆலயம் நிர்மானிக்கப்பட்டு, இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தண்டாயுதபாணியை மூல விக்ரகமாக பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். அன்று முதல் இவ்வாலயத்திலே நித்திய கிரியைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆண்டுக்கு ஒரு முறை சித்திரா பௌர்ணமி திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவிழா காலங்களில் மக்கள் திரளாக வரும்போது இடவசதி போதாததால் 1960-ல் ரிங்கிட் மலேசிய 6,000 வெள்ளி செலவில் ஆலயத்தோடு இணைத்து ஒரு மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுகள் பல உருண்டோடின. பல நிர்வாகத்தினர் வந்து போயினர். இதற்கிடையை இவ்வாலயத்திற்கு 3 நிலை கோபுரம் எழுப்பவேண்டும் என்று இவ்வூர் மக்கள் திருவுள்ளம் கொண்டனர். கனவை நினைவாக்க 1986-ஆம் ஆண்டு பொதுப் பணித்துறையைச் சேர்ந்த திரு. அ. குமரவேல் அவர்களின் தலைமையில் திருப்பணி தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின் அவர் மாற்றலாகிச் சென்றதும் டாக்டர் திரு. சந்திரன் அவர்களின் தலைமையில் இத்திருப்பணி தொடரப்பட்டது. அரசாங்க மாணியம் ரிங்கிட் மலேசியா 35,000த்தோடு பொது மக்களின் நன்கொடையுடன் ஏறக்குறைய 2 லட்சம் ரிங்கிட் செலவில் பூர்ணத்துவம் அடைந்து 9-9-1990-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

அதற்கு பின் இவ்வாலயத்தில் நித்திய கிரியைகளும் அவ்வப்போது சமய நடவடிக்கைகளும் நடைபெற்று வந்தன. இவ்வூர் மக்களின் சமய அறிவை வளர்த்திட அவ்வப்பொழுது சமய சொற்பொழிவுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் சமய அறிவினை வளர்த்திட சமய வகுப்புகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே ஆலயத்தில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதனை கண்ணுற்ற ஆலய நிர்வாகத்தினர் கடந்த 23-2-2003-ஆம் தேதி தலைவர் திரு. க. முருகுசுப்பிரமணியத்தின் தலைமையில் பாலஸ்தாபணம் செய்வித்து திருப்பணி வேலைகளைத் தொடங்கினர். இத்திருப்பணி ஏறக்குறைய 3-1/2 லட்சம் ரிங்கிட் மலேசியா செலவில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாலயத்தின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிப்பதோடு, நல்ல குடிமகனை உருவாக்கிடும் தலமாக அமையவேண்டும் என்பதே அனைவரின் அவா.

"வளர்க இந்து மதம் ...... ஓங்குக சைவ நெறி!"

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. சித்ரா பௌர்ணமி (மஹோற்சவம் 15 நாட்கள்)
இரத ஊர்வலம்
2. ஆகஸ்ட்டு மாத முடிவில் ஆண்டு விழா
3. கந்த சஷ்டி (6 நாட்கள்)
4. திருக்கார்த்திகை

1. ChithrA powrNami (mahOtchavam 15 days)
Chariot Procession on ChithrA powrNami day
2. Anniversary at end of August
3. Kandha Sashti (6 days festivities)
4. ThirukkArththigai



ஆலய நேரங்கள்

temple timings

6 am – 9 am
4 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramaniar Temple,
Jalan Betong,
Pengkalan Hulu (Kroh)
Perak,
MALAYSIA
Postcode: 33100


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
Ω  5.724365, 101.011174

Sri Subramaniar Alayam - Pengkalan Hulu (Keroh), Malaysia

The information here may NOT be accurate

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Subramaniar Alayam - Pengkalan Hulu (Keroh), Perak, Malaysia
(kdcmya79)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]