Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Maran Marathandavar Aalayam - Maran, Malaysiaஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம்
மாரான் பஹாங் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Maran Marathandavar Aalayam  Flag of Pahang State
Maran Pahang Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு

( 2001-ஆம் ஆண்டில் கௌமாரம் இணைய ஆசிரியரிடம் ஆலயத்தின் அன்றைய
தலைமை அர்ச்சகர் ஸ்ரீ கே.எஸ். கணபதி கூறியது )


சுமார் 120 வருடங்களுக்குமுன் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்கு சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய மரத்தை வெட்டும்போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது.

அதே வேளையில் மரம்வெட்டிக்கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் வந்து, அவர் அந்த மரத்தை வெட்டக்கூடாதென்றும் சாலையைச் சிறிது தூரத்திற்கு அப்பால் போடவேண்டுமென்றும் சொன்னார். அதைச் செய்ய மறுத்தார் ஆங்கிலேய மேற்பார்வையாளர். உடனே சிறிய குழந்தை வடிவுகொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப்பார்த்து வியந்த மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு அப்பால் போட உத்தரவிட்டார்.

அன்றிலிருந்து அந்த இடம் ஒரு புனித இடமாகியது. ஸ்ரீ மரத்தாண்டவ பால தண்டாயுதபாணி என்ற பெயர் அமைந்தது. இங்கு தூய பக்தியோடு வருபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேர்கின்றன. ஊனமுற்றோர் நடப்பது, ஊமைகள் பேசுவது, நோயுற்றோர் குணமாவது போன்ற அற்புதங்கள் பல இங்கு நிகழ்ந்து வருகின்றன.

"நான் இந்தக் கோயிலுக்கு 1955ம் ஆண்டில், என் முப்பதாவது வயதில் வந்தேன். மாதச் சம்பளம் அப்போது 20 ரிங்கிட்தான். அந்தக்காலத்தில் இந்தக்கோயில் வெறும் தகரத்தாலும் மரப்பலகையாலும் அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இங்கு அடிக்கடி நிகழும் அற்புதம் என்னவென்றால், இந்தச் சாலையில் செல்லும் வாகனம் ஏதும் நிற்காமல் சென்றால் சிறிது தூரம் சென்றவுடன் ஓடமுடியாமல் நின்றுவிடும். கோயிலிலிருந்து விபூதியை தேய்த்தபின்தான் மீண்டும் ஓடும். பங்குனி உத்திரம்தான் இந்தக் கோயிலின் மிகச் சிறப்பான நாள். பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. அந்தக்காலத்தில் சுமார் 500 அர்ச்சனைகள் நடைபெறும். இப்போது 300,000 மேல் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன."

ஏன் இத்தனைக் காலமாக இங்கேயே இருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்,

1962ல் நான் ஒரு கனவு கண்டேன். அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே வசித்த ஒரு முருகபக்த மகான், இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஓடையில் குளித்துவிட்டு, இந்த மரத்தினுள் ஐக்கியமானதைக் கண்டேன். அதே மகான் கனவில் என்முன் தோன்றி இங்கேயே என்னைச் சேவை செய்யச் சொன்னார். அதன்படிதான் நான் முழுமனதோடு இங்கே சேவை செய்துவருகிறேன்."


Sri K.S. Ganapathy
முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ கே.எஸ். கணபதி
Former Senior Priest Sri K.S. Ganapathy Archagar (2001)

History of the Temple

(narrated by Senior Priest Sri K.S. Ganapathy Archagar in 2001 to the webmaster of Kaumaram.com)

About 120 years ago, construction of the road from Kuala Lumpur to Kuantan was in progress here. When a large tree was being chopped, it started to bleed. One of the Tamil workers went into a trance at the same time. He said that the tree should be spared and the road laid a short distance away. The British supervisor refused. To everybody's astonishment a figure of a child appeared on the trunk of the tree. The supervisor was surprised and changed his mind. The road was laid away from the tree. The place became sacred, and it took the name of Sri MarathANdava BAla DhandAyuthapANi (Lord Murugan). Several true devotees have experienced miracles here. They are bestowed with good fortunes in their lives. The lame had walked, the dumb has spoken and the chronic sick - healed. These miracles are still occurring!

I came here in 1955, at the age of 30. My salary was then 20 Ringgit. This temple was made up of zinc sheets and wooden planks. The usual miracle that occurred here then was, if any vehicle passes by this temple without stopping, it will stall a short distance later and will not restart until the VibUthi (Holy Ash) from the temple is applied on it!

Panguni Uthiram (March/April) is the grand festival here. In those days there used to be around 500 'archanai's. Now the number exceeds 300,000!

In 1962, I had a dream. In it I saw a Yogi (devoted to Lord Murugan), who lived here about 200 years ago. He was walking towards the tree after having his bath in the nearby stream. He vanished into the tree! Appearing again in my dream, he instructed me to serve this temple. Since then I decided to serve this temple for as long as I could.

சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


மலேசியா - ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

ஊராறு உடையதோடு உலகெலாம் அருள்செய்து
  பேராறு கொண்டவனாம் பெம்மானெம் முருகவேளே
    பாரோர் புகழ்ந்தேத்தும் பஹாங் மாநிலத்தே
      மாரான் மரத்தாண்டவராய் மலர்ந்தயெம் தேவதேவே. ... 1

சிந்தைக்கு உகந்தவனை செந்தூல் தனில்காண
  முந்தை வினைதீர்த்து முருகவேளாய் அருள்பொழியும்
    எந்தைகந்த சுவாமியுனை ஏழுலகும் தொழுதிடவே
      விந்தையாய் விரைந்தருளும் வேல்முருகா போற்றி போற்றி. ... 2

வீரனாய் விரைந்து வேற்படை கொண்டவனைக்
  கீரனார் புகழ்ந்த ஆற்படை மேயவனை
    சூரனாய் வந்திட்டோர் சுழிமாற்றிய சுப்ரமண்ய
      மாரனே மரத்தாண்டவா மலர்த்தாள் போற்றுவமே. ... 3

மங்காது வரமருளும் மலேசியமா நாட்டிடையே
  எங்கோன் முருகனை எங்கெங்கு கண்டிடினும்
    தங்கவேற் கோலமாய்த் தரணிதனில் தங்கியருள்
      சிங்காரச் செந்தூல் சிவகுருவே போற்றி போற்றி. ... 4

மரத்திருந்து அருள்செய்யும் மாரன்போல் மலேசியத்தில்
  கருத்தறிந்து அருள்செய்யும் கண்கண்ட தெய்வமுண்டோ
    உளத்திருத்தி துதிசெய்யும் உத்தமர்க்கு ஊன்றுகோலாய்க்
      குளத்திருந்த தாமரைபோல் உதித்தெழுந்த குருபரனே. ... 5

மாரனை மனமகிழ்ந்து போற்றும் இம் மாலைதனை
  ஊரனைத்தும் உரைத்திடவே ஓயாது அருள்பெற்று
    பாரனைத்தும் கண்டிடா பரமசுக நிலைகாட்டும்
      வீரனவன் வேல்முருகன் மாரனென்று மகிழ்ந்திடுவோம். ... 6.



A song in praise of Malaysia - Sri Maran MaraththANdavar
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

   UrARu udaiyathOdu ulagelAm aruLseidhu
     pErARu koNdavanAm pemmAnem murugavELE
       pArOr pugazhndhEththum pahAnG mAnilaththE
         mArAn maraththANdavanAi malarndhayem dhEvadhEvE.      ... 1

   sindhaikku ugandhavanai sendhUl dhanilkANa
     mundhai vinaitheerththu murugavELAi aruLpozhiyum
       endhaikandha suvAmiyunai Ezhulagum thozhudhidavE
         vindhayAi viraindharuLum vElmurugA pOtri pOtri.      ... 2

   veeranAi viraindhu vERpadai koNdavanaik
     keeranAr pugazhndha AaRpadai mEyavanai
       sUranAi vandhittOr suzhimAtriya subramaNya
         mAranE maraththANdavA malarththAL pOtruvamE.      ... 3

   manggAdhu varamaruLum malEsiyamA nAttidaiyE
     enggOn muruganai enggenggu kaNdidinum
       thanggavER kOlamAith tharaNidhanil thanggiyaruL
         singgArach chendhUl sivaguruvE pOtri pOtri.      ... 4

   maraththirundhu aruLseiyum mAranpOl malEsiyaththil
     karuththaRindhu aruLseiyum kaNkaNda dheivamuNdO
       uLaththiruththi thudhiseiyum uththamarkku UndRukOlAik
         kuLaththirundha thAmaraipOl udhiththezhundha gurubaranE.      ... 5

   mAranai manamagizhndhu pOtrum im mAlaidhanai
     Uranaiththum uraiththidavE OyAdhu aruLpetru
       pAranaiththum kaNdidA paramasuga nilaikAttum
         veeranavan vElmurugan mAranendRu magizhndhiduvOm.      ... 6.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

பங்குனி உத்திரம்
Panguni Uththiram


ஆலய நேரங்கள்

temple timings

Temple open from 5:30 am to 9 pm
Abishegam at 5:30 am, 10:30 am, 5:30 pm
Poojai at 7 am, 12 noon, 7 pm



ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Marathandavar Aalayam Maran
100 km, Jalan Kuantan Jerantut,
26500 Maran,
Pahang,
MALAYSIA
Postcode: 26500
Telephone: +6 019 981 8050
Telephone: +60 19 939 8050

Mailing Address:

Sri Maran Marathandavar Aalayam,
Peti Surat 93,
25710 Kuantan,
Pahang Darul Makmur,
MALAYSIA
Postcode: 25710
E-Mail: srimarathandavaraalayam@gmail.com

Official Temple Website:  http://www.marathandavar.com 


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
3.701415, 102.653982

Sri Maran Marathandavar Aalayam - Maran, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Maran Marathandavar Aalayam - Maran, Pahang, Malaysia
(kdcmya01)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]